ஏணி. 1984 மே திங்களில், ஒடவை ந.தமிழ்வேந்தன் ஆசிரியராக இருந்து நடத்திய தெளிதமிழ்த் திங்களிதழ். முதலாமாண்டின் 10ஆவது இதழ் இது. மதுரை மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து வெளிவந்தது. மரபுப் பாக்களில் தரமான கருத்துகளை வெளியிட்டுள்ள இதழ். சிறுவர்களுக்காக இயங்கிய இதழ். போட்டி அறிவித்து நூல்களைப் பரிசாக அனுப்பியுள்ளது. இடியும் மின்னலும் என வினா விடைப்பகுதியை அறிவித்துள்ளது. பாடலில் கதை சொல்லும் பாங்கினைக் கடைபிடித்துள்ளது. செய்திகள் என நடக்கிற நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் என துணுக்குச் செய்திகளை அறிவித்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,