தென்புலம். தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் பதிவுபெற்ற இதழாக வேலூரிலிருந்து நடத்திய திங்களிதழ். இந்த இதழ் அக்டோபர் 1984 இல் வெளிவந்துள்ளது. இது 12 ஆம் ஆண்டின் 5 ஆவது இதழ். இதழில் என் கேள்விக் கென்ன பதில் என ஓரி பதிலளித்துள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்களது சொற்பொழிவின் சுருக்கத்தை வெளியிட்டுள்ளது. மங்களம் மாமியும், உண்ணா முலையும் உரையாடல் இதழின் சிறப்பியல்புகளில் ஒன்றாக உள்ளது. பிற இதழ்களில் வெளிவந்த சிறந்த கட்டுரைகளையும் இதழில் மறுபதிப்பு செய்துள்ளது. ஐ.உலகநாதன் கவிதைகள் இதழில் காணப்படுகின்றன. இதழின் துணுக்குச் செய்திகள் ஈர்ப்புடையவை. இந்த இதழில் லெனின் ஒரு மனிதாபிமானி என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதழின் பின் அட்டை சக்தி சர்கரை ஆலையின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,