அன்னம் விடுதூது. 1984 களில் ஒரு பூரண மாத இதழ் என்று அறிவித்துக் கொண்டு பதிவு பெற்ற இதழாக சிவகங்கையிலிருந்து வெளிவந்த இதழ். ஆசிரியர் சிற்பி., சிறப்பாசிரியர் அப்துல் ரகுமான், எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்று தலைப்பிலிட்டுத் தொடர்ந்துள்ளது. இந்த இதழ் 84 டிசம்பரில் வெளிவந்த 5 ஆவது இதழ். ஓர் இலக்கிய அறிமுகம் என ரசூல் கம்சுதோவ் பற்றி வெளியிட்டுள்ளது. தீ என்று உருது மொழிக் கதையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது, உருவகக்கதை இன்னொரு அணுகுமுறையே. எதிரொலி எனப் படைப்பாளிகளின் கருத்தாக்கங்களைப் பதிவு செய்துள்ளது, தெரிந்து கொள்ளுங்கள் என ஈடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.பாரதி புத்திரனின் உரைவீச்சுக் கவிதையும், நீலபத்மநாபனின் சிறுகதையும் இந்த இதழில் உள்ளது, முதல் சுதந்திரப்போர் என வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. அசோகமித்திரனின் சோகம் கதை முதல் கதையாக வந்துள்ளது. ஒரு நவீன இலக்கிய இதழ் என்பது எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று இவர்கள் வகுத்துக் கொண்டு இதழில் பயணித்தார்கள் என்பதை இந்த இதழ்வழிக் காண முடிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,