உயிர். 1985 களில் பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டி பட்டினத்திலிருந்து வெளிவந்த இதழ். இது இரண்டாவது இதழ். தடுமாறும் அரசின் தடம் மாறும் கொள்கை என்று மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதச் செய்தியை கட்டுரையாக்கி உள்ளது. 1986 இல் நடைபெறவுள்ள வால் நட்சத்திரச் சந்திப்பு பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தொடர் கதை, வினாவிடை, மரபுப் பாடல், விந்தைக் கணக்கு, அறிவியல் துணுக்கு, எனப் பல்சுவையாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது. புதியவர்களை அறிமுகம் செய்து புதுப்பாக்களையும் வெளியிட்டுள்ளது. முதல் மரியாதை - திரைப்பட விமர்சனமும் செய்துள்ளது - உயிர் இதழ் நண்பர்களால் நண்பர்களுக்காக நடத்தப் படுவது. அதாவது இதை நடத்துவதும் வாங்குவதும் நண்பர்களே, எனவே உயர் இதழை வாங்கிப் படிப்பதன் மூலம் நீங்களும் இந்த நட்புக் குடும்பத்தில் இணையலாம். உயிருக்கு நீங்கள் கொடுப்பது விலை அல்ல. அன்பளிப்பு. ஆமாம் உயிருக்கு யாரால் விலை அளிக்க முடியும். அதனால் தான் உயிருக்குக் கொடுக்கும் ஒரு ரூபாயை அன்புப் பரிமாற்றம் என்று அழைக்கிறோம் - ஆசிரியர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,