இயற்றமிழ். 1985 களில் திருவாரூர் இயற்றமிழ் பயிற்றகத்திலிருந்து ச.குறளேந்தி வெளியிட்டுள்ள திறனாய்வுத் திங்களிதழ். தெளிதமிழ் உணர்வோடு வெளிவந்துள்ளது. இதழின் விலை உரூபா ஒன்று. இது இந்த இதழின் இரண்டாவது இதழ். இலக்கணப் புலவர் ச.சரவணத் தமிழன் அணிநூல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். மல்லிகைப் பத்து என்ற தலைப்பில் புலவர் ஏ.கலியபெருமாள் ஈற்றடி யொதத பதிகம் எழுதியுள்ளார். இதழ்களை எடை போடுகிறோம் என்ற குறிப்பில் வெகுஜன இதழ்களின் பொழுதுபோக்குத் தனத்தை சுட்டிக்காட்டுகிறார் காநாசு. இதழுக்கான உறுப்பினர் பட்டியலில் தெளிதமிழ் பெயர்களையே காணமுடிகிறது. தெளிதமிழ் தொடர்பான நிகழ்வுகளையும் இதழ் குறிப்பிட்டுள்ளது. மொழி மூலர் தேவநேயப் பாவாணர் சிலை - மலர் அமைப்பு - குறித்த துண்டறிக்கை ஒன்றும் இதழோடு இணைந்துள்ளது. இதழில் புரியாத போக்கு என்ற தெளிதமிழ்ச் சிறுகதையும் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,