எழுச்சி. 1985 இல் வெளிவந்த விழிப்புணர்வு மாத இதழ், கும்பகோணம் சமூகப் பணி மையம் இதழை வெளியிட்டுள்ளது. இதழின் அட்டையில் சிங்களப் படை தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் தமிழர் ஒருவரைச் சுட ஆணையிடுவதைக் காட்டும் கோட்டோவியப் படம் காணப்படுகிறது. பிப்- மார்ச் 85 இல் வெளிவந்துள்ள இந்த இதழ் ஏழாவது ஆண்டின் இரண்டாவது இதழ், ஆண்டுச் சந்தா ரூ10, தனியிதழ் ரூ1, விஷவாயு ஏற்படுத்திய விபரீதங்கள் என்ற கட்டுரை உள்ளது. அம்மா என்ற மலையாளச் சிறுகதையின் தமிழாக்கம் உள்ளது. கிராமத்து இளைஞனுடன் உரையாடல் என்று எள்ளல் தொனியில் நாட்டு நடப்பைப் பதிவு செய்துள்ளது. இவர்கள் கண்ணீரில் வாழ்கிறார்கள் என்று கல்கத்தா ஆரம்பூர் கிராம மக்களின் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது. கலைஞன், மனிதன், மனிதாபிமானி என்று மக்கள் கலைஞர் கத்தார் பற்றி எழுதியுள்ளது. 24 பக்கங்களில் மிகத் தரமாக இதழில் உணர்வூட்டியுள்ளது வாழ்த்துதற்குரியதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,