உங்கள் நூலகம். 1985 களில் நியூசெஞ்சுரி வாசகர் பேரவையின் சார்பாக இருமாத இதழாக வெளிவந்த இதழ். இது இரண்டாவது இதழ். சென்னையில் அச்சாக்கி வெளியிடுபவர் ஆ.சிவலிங்கம். புத்தகங்களின் புதிய அறிமுகம் பற்றியும். நூல்களின் வெளியீட்டு விழா பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது. நியூ செஞ்சுரி வாசகர் பேரவையின் உறுப்பினர்கள் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டுள்ளது.சென்னை சோவியத் புத்தக மையத்தின் துணை மேலாளர் கோ. நடராசன் - பாசிசத்தை வெற்றி கொண்ட நாற்பதாண்டு நிறைவு நாள் - என்ற கட்டுரையை எழுதியுள்ளார். வழிகாட்டும் வாசகர்கள் என வாசகர்களின் மடல்களை வெளியிட்டுள்ளது. நூல் நோக்கு என்று நூல்கள் பற்றிய அறிமுகத்தையும் செய்துள்ளது. இதழின் அட்டையில் உள்ளது - நியூ செஞ்சுரி நிறுவனம் 6-6-85 அன்று புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் - பாவேந்தர் நடமாடும் புத்தக நிலையம் - என்கிற புத்தகப் பேருந்தின் படத்தினை வெளியிட்டுக் குறிப்பும் எழுதியுள்ளது,.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,