பூபாளம். 1986 களில் மதுரையிலிருந்து வெளிவந்த காலாண்டிதழ் இது. இந்த இதழ் 13 ஆவது இதழ். ஆசிரியர் குழு ஹரிஹரன், சஞ்சயன், இரம்யன், ஆர்க்கே எனக் குறிப்பிட்டுள்ளது. ஆண்டு சந்தா ரூ5. மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிட்டுள்ளது. சமகால பிறமொழி எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த இதழில் நூல் விமர்சனமாக திலீப்குமாரின் மூங்கில் குருத்து நூல் பற்றி எழுதியுள்ளது. இலக்கியக் காலாண்டிதழ் என்கிற அளவுக்கு இந்த இதழ் படைப்பாளிகளிடம் உயர்ந்துள்ளது. வெளியாகியுள்ள கட்டுரைகளும், கதைகளும் புதிய பாணியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு காலை 10 மணிக்கு மதுரையில் படைப்பாளர்கள் படிப்பாளிகள் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,