மக்கள் குறளமுதம். 1986 களில் ஈரோட்டிலிருந்து செ.வேதமூர்த்தி ஆசிரியராக இருந்து க.செ, கோவிந்தசாமி இதழை வெளியிட்டுள்ளார். திருக்குறள் கருத்துகளை இதழில் முதன்மைப் படுத்தியுள்ளது. இந்த இதழில் கு.மோகனராசுவின் திருக்குறளில் திருப்புரைகள் கட்டுரை உள்ளது. புலால் மறுத்தல், மடியென்னும் மாசு - என்கிற இரு கட்டுரைகளும் உள்ளன. நாத்திக முறியடிப்பு என்ற கட்டுரையும் உள்ளது. (ஒரு கருத்தை உள்வாங்கி இதழை வெளியிடும் போது - கருத்துத் தெளிவு வேண்டும். தன் போக்கிற்கு இதழை வெளியிடக்கூடாது அது வரலாற்றில் நின்று சாதனை காட்டாது. படிக்கிறவர்கள் தடுமாறுவார்கள். முதல் பக்கத்தில் புரட்சி - மூன்றாவது பக்கத்தில் முதலாளித்துவ பாராட்டு. ஐந்தாம் பக்கத்தில் பகுத்தறிவு விளக்கம் எட்டாம் பக்கத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு - இடைஇடையே சிண்டு முடிதல்கள் - இவ்வகையான இதழ்கள்தான் மக்களைக் குழப்பி - தெளிவான பாதைக்கு மக்களை இட்டுச் செல்லாமல் - வணிகம் செய்து - வாழ்ந்திருக்கின்றன. ஒற்றை இலக்கோடு அந்த இலக்கின் செறிவு வரை சென்ற இதழ்கள்தான் வாழ்த்துப் பெற்றுள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,