ஞானரதம். 1986 அக்டோபர் மாதம் 9 ஆவது ஆண்டின் 10 ஆவது இதழாக இந்த இதழ் வெளியாகியுள்ளது. சிறப்பாசிரியர் க.நா.சுப்பிரமணியன். ஆசிரியர் தேவசித்ர பாரதி.இணையாசிரியர் சுந்தர மணிவண்ணன். சென்னையிலிருந்து இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. உண்மையைத் தேடும் எழுத்தைவிட உயர்ந்த இலக்கியம் இல்லை என்ற தலைப்புச் செய்தியோடு இதழ் தொடர்ந்துள்ளது. சிறப்பாசிரியர் க.நா,சு எப்போது எழுத்து இலக்கியமாகிறது என்ற தலையங்கத்தை எழுதியுள்ளார். இலக்கியம் என்பது பாதி எழுதுபவனின் ஆற்றலிலும் பாதி வாசகனின் மனப்பாங்கிலும் இருக்கிறது என்று எழுதியுள்ளார். ஞானக்கூத்தனின் உரைவீச்சு நீண்டு காணப்படுகிறது. அய்யப்ப பணிக்கரின் மலையாளக் கவிதையின் மொழி பெயர்ப்பு இதழில் இடம் பிடித்துள்ளது. நகுலனின் போஸ்ட் மாஸ்டர் சிறுகதை உளவியல் அடிப்படையில் அமைந்ததே. தன் வெளிநாட்டுப் பயணத்தை கி,நாச்சிமுத்து கட்டுரையாக எழுதியுள்ளார். காடுவெட்டியின் அக்கப்போர் நிகழ்ச்சி குறிப்பிடுவதே.ராமபாணம் என நூல் விமர்சனம் செய்துள்ளது,


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,