யாத்ரா. 1986 இல் வெளிவந்த இதழ். இது இந்த இதழின் 55 ஆவது இதழ். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்ற ஊரிலிருந்து இந்த இதழ் வெளிவந்துள்ளது. ஆசிரியர் சி. இராமசாமி. இதழ் நவீன படைப்பாக்க இதழாக வெளிவந்துள்ளது. இதழின் அட்டையில் கோட்டோவியம் காணப்படுகிறது. கூத்துப்பட்டறை முத்துசாமி ஒரு வேண்டுகோள் என கூத்துப் பள்ளியின் தேவை குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். வெங்கட் சாமிநாதன் - மீண்டும் பிராபல்யம் வேண்டி (!) என்ற நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். தமிழவனின் ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற நாவலின் விமர்சனமும் உள்ளது. பெருமை பெற்ற சாகித்திய அகடமி என்று பென்னேஸ்வரன் எழுதியுள்ளார். தேவதேவனின் சில நாள் உரைவீச்சும் இநத இதழில் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,