இலட்சியப் பெண். 1986 களில் சென்னையிலிருநது பெண்கள் திங்களிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பாசிரியர் டாக்டர் ஜெகதீசன் ஆசிரியர் கண்மணி. இதழில் ஒளிப்பதிவு எனப் பெண்கள் குறிப்பிட்டுள்ள உயர்கருத்துகள் பதிவாகி உள்ளன. மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் எப்படி பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனை டாக்டர் ஜெகதீசன் விளக்கியுள்ளார். இதழில் சிறுகதைகள். உரைவீசச்சுகள், துணுக்குச் செய்திகள் என வெகுஜன ஈர்ப்புடைய செய்திகள் நிறைய உள்ளன. இதழ் குமுதம் அளவில் வண்ண அச்சடிப்பில் 64 பக்கங்களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. இதழில் ஆர். சூடாமணி, வண்ணதாசன், ராஜம் கிருஷ்ணன், அனுராதா ரமணன் ஆகியோர் படைப்பாக்கங்களைச் செய்துள்ளனர். இதழின் பின் அட்டையில் சர்வாதிகாரத்தை முறியடித்த பிலிப்பைன்ஸின் பெண் ஜனாதிபதி கொரேஸான் அகினோ அவர்களது புகைப்படமானது வெளியிடப் பட்டுள்ளது. இதழின் பின்உள் அட்டையில் பாகிஸ்தானின் ஜனநாயக மீட்பு இயக்கத்தின் தலைவி பெனாசிர் பூட்டோ அவர்களது படத்தினையும், விமானியாக உரிமம் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண் பிரீதி சுந்தர்ராம் அவர்களது படத்தினையும் வெளியிட்டுள்ளது. இதழில் வல்லிக்கண்ணன் அவர்களும் எழுதியுள்ளார். வினாவிடைப் பகுதியும் உண்டு. சட்ட அம்புகள் என பெண்களது எழுச்சியையும், அவர்களுக்கான சட்டக் குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. இதழில் உரைவீச்சுகளும் புகைப்படங்களும் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,