உதயம். 1986 களில் சிதம்பரத்திலிருந்து - எஸ்.வேணுகோபால் ஆசிரியராக இருந்து வெளிவந்த இதழ். இந்த இதழில் சிங்கார வேலரும் தமிழகத்தின் சிகப்புச் சிந்தனையும் என்ற கட்டுரையை பெ.மணியரசன் எழுதியுள்ளார். இந்த இதழில் பாவண்ணன் நலிவு என்ற சிறுகதை எழுதியுள்ளார். தமிழகத்தின் மழலையர்கள் அண்ணா அண்ணா என்று பிச்சை எடுக்கின்றன என்ற உரைவீச்சினை இரண்டாம் நக்கீரன் எழுதியுள்ளார். அதன் இறுதியில் - நீ உள்ளூர்க்குள்ளேயே கை நீட்டுகுகிறாய்... இந்திய கடல் கடந்து சென்று கை நீட்டுகிறது - என்று எழுதியுள்ளார்,

ஓ மெழுகுகளே என்ற இரண்டாம் நக்கீரனின் கவிதை ---

நெருப்புக் குடம் தூக்கி, நிற்கின்ற மெழுகுகளே,
குடமுடைந்து தண்ணீர் ஒழுகிடுதா ? இல்லை,
குடச் சுமையால் உம்மேனி உருகிடுதா?

தீயிலே கண்ணாடி செய்து அணிந்ததனால்
விழிகளிலே வெள்ளைச் சீழ் வடிகிறதா இல்லை
விழியே கரைந்திங்கு வழிகிறதா ?

தீ நடனம் தாளாமல்
மேடை அழுகிறதா ? இல்லை
ஒளி தீபம் ஏற்றியதால்
விளக்கே உதிர்கிறதா ?

நெருப்புக் குடம் தூக்கி
நிற்கின்ற மெழுகுகளே
இன்னும் நீரு அழவேண்டும்
ஆமாம்
இன்னும் நீர் அழவேண்டும் - இங்கே
இருள் கொட்டம் விழ வேண்டும்,


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,