தருமபுரியிலிருந்து நெஞ்சத்தரசு, ஓடைக் கவியரங்கத்தின் தொடர்பு இதழாக தனிச்சுற்றுக்காக வெளியிட்ட இதழ் இது. கவிதை இலக்கிய இதழ். இது இதழ் எண் 4. 1987 சனவரியில் வெளிவந்துள்ளது. உரை வீச்சுகளை உள்ளடக்கிய பாவிதழ். மக்களை நெஞ்சில் நிறுத்தி, மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்துகளை உரை வீச்சுகளாக வெளியிட்டுள்ள இதழ் இது.

உன்னை மறக்கலாம் !
உன் நிலையை மறக்கலாம்
இன்னும், பற்று பாசம்
ஈயும் முறைகள்,
எல்லோரா ஓவியங்கள்,
உன் அன்றாட உத்திகள்,
இவைகளை மறக்கலாம் !
ஆனால்
உன்னையும் என்னையும்
உறவாடவைக்கும் உயிர்த் தமிழை
கவிதைகள் செறிந்த தமிழை
நீ மறக்கலாமா.
எப்பற்றுக்கும் மொழிப்பற்றே
சிறந்ததென உனக்குத் தெரியாதா?
உனக்குள் ஆய்ந்து பார்.

சாத்தப்பாடி - வைரிதரளம்


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,