திராவிட சமயம்.1987 களில் சமய ஒப்பியல் ஆய்விதழாக வெளிவந்த திங்களிதழ். இது 19 ஆவது இதழ். அறிவொளி வீசட்டும், அக இருள் நீங்கட்டும், என்கிற தொடரை தலைப்பிலிட்டு கருத்துச் செறிவேற்றி உள்ளது. வெள்ளைக்கார ஆரிய அடிமைத்தளையிலிருந்து விடுபட்டுத் தங்கள் இனம், மொழி, சமயம் இவைகளுக்காகப் பாடுபடும் உண்மைத் திராவிடர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்கிற கருத்தினை ஆசிரியர் உரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழகக் கோயில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்கிற விளக்கக் கட்டுரையும் இதழில் உள்ளது.நான் அடிமை ஆக மாட்டேன், தன்மானத்தை இழக்க மாட்டேன் என்கிற கருத்துச் செறிவேற்றுகிற இலக்கியக் காட்சிகளையும், கருத்துரைகளையும் காட்டி வழிநடத்துகிறது. திராவிட சமய ஆய்வு இயக்கத்திற்காக மு.தெய்வநாயகம் தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாக இந்த இதழ் தொடர்ந்து வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,