தமிழ் நிலம். 1987 இல் வெளிவந்த 86 ஆவது இதழ் இது. மொழி, குமுகாயம், அரசியல், பொருளியல், கலை, அறிவியல், பண்பாடு ஆகிய ஏழு துறைகளிலும் உலகத் தமிழினத்தை மேம்பாடுறச் செய்யும் ஓர் உண்மை உழைப்பியக்கம் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற குறிப்பினை இதழில் வெளியிட்டுத் தொடர்ந்துள்ளது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் சென்னையிலிருந்து இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். தென்மொழி அச்சகம் அச்சாக்கியுள்ளது. தமிழ் நாட்டை மீட்காமல் தமிழினத்தை முன்னேற்ற முடியாது என்கிற சிந்தனைபோடு, தரமான தெளிதமிழ்க் கட்டுரைகளையும், கூர்மையான அறிவுச் செறிவான கருத்துகளையும், நடக்கிற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி வழிநடத்துகிற குறிப்புகளையும் இதழில் வெளியிட்டு தமிழர்களுக்கான தரமான இதழாகத் தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,