நாத்திகம். 1987 களில் சென்னையிலிருந்து பி.இராமசாமி பெரியார் அச்சகத்திலிருந்து அச்சாக்கி வெளியிட்ட சமூக விழிப்புணர்வு அதிரடி வார இதழ். இந்த இதழ் நிறுவியது 1958 இல்.விலை ரூ1.20 காசு. பதிவு பெற்ற இதழாகத் தொடர்ந்துள்ளது. துணை சபாநாயகர் வாங்கிய லஞ்சம், மயிலாடுதுறை அதிகாரி லஞ்ச வேட்டை, சினிமா பற்றிய கூத்தரங்கம் என அவலங்களைக் கிழித்தல், நாடும் நடப்பும் என பல பகுதிகளில் நடக்கிற ஊழல்களை வெளிச்சமிட்டுக் காட்டுதல், ஆற்று மணல் விற்பனை கலெக்டர் ஆர்டிவோ சண்டை, திருவாடுதுறை ஆதினம் நிர்வாகி மர்மச் சாவு, அதிகாரிகள் சம்பளம் ரூ 10 இல்ட்சம் பாழ், பேராவூரணி ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் செய்த கொடுமை. எம்.எல்.ஏ அட்டகாசம் ஒரு தொண்டர் அழுகிறார் - இப்படி அதிரடியான செய்திகளை வாரா வாரம் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னும் இதே நிலைதானா? இன்றும் இது தொடர்கிறதே ! சுதந்திர நாட்டில் இது கொடுமை இல்லையா?


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,