ஏர் உழவன். 1987 களில் இயற்கை மருத்துவத்திற்காகவும், வேளாண்தொழிலை முதன்மைப் படுத்தவும் கோவை, கணபதியிலிருந்து, இரா. கிருஷ்ணசாமிக் கவுண்டர் வெளியிட்ட திங்களிதழ். இந்த இதழ் 17 ஆவது ஆண்டின் மூன்றாவது இதழ். ஆக இந்த இதழ் 1970 களில் தொடங்கப்பட்டிருககலாம். பதிவு பெற்ற இதழாக இதழ் வெளிவந்துள்ளது. ஆண்டு சந்தா ரூ40. சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழன்றும் உழவே தலை - என்ற குறளை தலைப்பிலிட்டுள்ளது. இயற்கை மருத்துவக் கேள்வி பதில், இந்திய நாட்டு விவசாயிகள் இயக்கம், ஜனநாயகப் பாதை, பூமியின் ஆற்றல், இன்றைய இலக்கிய வளர்ச்சி, இயற்கை மருத்துவ முறைகள் (மசாஜ்), திராட்சைக்கு உரமிடுங்கள். இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் தலைப்புகள் இவை. வாசகர் கடிதங்கள் ஊர்வலம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,