உணர்வு. 1987 களில் மாதம் இருமுறை இதழாகத் தொடர்ந்து வெளிவந்த இதழ். ஆசிரியர் அ.சேப்பன்., இது ஆறாவது ஆண்டின் 87 ஆவது இதழ். 1987 டிசம்பர் 15 இல் வெளிவந்தது. சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த இதழ். இதழாசிரியர் புத்தரின் தம்மபதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளார். இதழ் அம்பேத்கர் கருத்துகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. தமிழன் என்ற உணர்வில் தமிழர்கள் ஒன்றுபடாமல் சாதி அடிப்படையில் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதை இந்த இதழ்வழிக் காண முடிகிறது. இதுவும் ஒரு வகையான பிரித்தாளும் சூழ்ச்சியே. சூழ்ச்சி வலையில் சிக்கிய தமிழன் தமிழை மறந்தான் - சாதியை கையிலெடுத்தான். இன்றும் அடிமையாகி வீழ்ந்து கிடக்கிறான்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,