அஸ்வமேதா: பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த இலக்கிய விமர்சன இதழ். பின் அட்டையோடு நான்கைந்து தாள்களில் விளம்பரம் பெற்று 50 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இரண்டாவது இதழின் தலையங்கத்தில் " ....முதல் இதழ் வழக்கம் போலவே எந்தவிதச் சாதனையும் செய்யவில்லை. தூசுகூட கிளப்பவில்லை. பத்திரிகையின் உள்ளீடை விமர்சித்த கடிதங்கள் எங்கள் அறிவுக்கு எட்டிய தரத்தில் இல்லை. ஆனாலும் பத்திரிகை நின்று போகாது. ஓசியில் எவ்வளவு நாட்களுக்குத்தான் நம் இலக்கிய அன்பர்களின் ஜனம் படிக்கிறது என்று பார்ப்போம்..." இப்படியாக நீளுகிறது. இந்த இதழின் இரண்டு இதழ்கள் நமது நூலகத்தில் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,