ஆக்கம். 1988 களில் குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த வளர்ச்சிக் கல்வி இதழ். இல்லாமை இல்லாமல் அனைவரும் வாழ ஆக்கப்பணியில் இணைய இந்த இதழ் அழைப்பு விடுத்துள்ளது. அரசியலில் புகும்முன், புகுந்த பின், சொத்து மதிப்பு என்ன எனத் தலையங்கத்தில் எழுதியுள்ளது. சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றிக் கட்டுரை எழுதியுள்ளது, செறுவை சந்திரபாபு பாரத் பந்த் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளார்.காகிதப்பூ சிறுகதை எழுத்தாளனைச் சாடியுள்ளது. பனைத் தொழிலாளரும் அரசு உரிமையும் என்ற அருமையான கட்டுரையை எழுதியுள்ளது. யாருக்காக என்ற தொடர்கதையும் இதழிலுள்ளது. குழந்தை மரணத்திற்கான காரணங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது. மருந்துகளின் பயன்களும் தகாத விளைவுகளும் என்ற கட்டுரையும் உள்ளது. உரை வீச்சுகளும் காணப்படுகின்றன. இந்த இதழ் சிற்றுளியாக இருந்து மக்களைச் செதுக்கியிருக்கும் என்று நம்பமுடிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,