திசைநான்கு. 1989 களில் கோவையிலிருந்து வெளிவந்த காலாண்டிதழ். இது முதல் இதழ். சிறப்பாசிரியர் பிரேமிள். இதழ் தொகுப்பாளர் கே சுப்பிரமணியன். தனிச்சுற்றாக வெளிவந்த இதழ். விலை ரூ4. இதழில் எஸ்ரா பவுண்டின் எதிர்ப்புக் கவிதைகள், க.நா.சு வின் லட்சிய வித்துகள், லட்சியத்தின் பரிமாணங்கள் மற்றும் கிசு கிசு சிறுகதை இதழில் காணப்படுகிறது. தொடர்புக்கு சமுதாயம் பிரசுராலயம் என அறிவித்துள்ளது. இதழின் பின் அட்டையில் மு.தளையசிங்கம் எழுதியுள்ள போர்ப்பறை, மெய்யுள், கலைஞனின் தாகம் என்கிற தனது வெளியீகள் பற்றி அறிவித்துள்ளது. இலக்கிய விசாரம் என்று மூலம் திருட்டு பற்றி விவரிப்பது சுவையாகவே உள்ளது. அதீத மூளை உள்ளவன், பார்வையில் நறுக்குத் தெறிக்கும் வெளிப்பாடுகள், போலிப் படைப்பாளிகளை சுட்டெரிக்கும் என்பதனை இதழ்வழிக் காணமுடிகிறது. இந்த முதல் இதழுக்குப் பிறகு இதழ் வந்துள்ளதா என்பதும் தெரியவில்லை.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,