முன்றில். 1989 களில் சென்னையிலிருந்து கலை இலக்கிய விமர்சன இதழாகச் செறிவாக வெளிவந்துள்ளது. இது இதழின் 5 ஆவது இதழ். இந்த இதழ் க.நா.சு. நினைவு மலராக அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் படைப்பாக்களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. க.நா.சு பற்றி வல்லிக்கண்ணன், நகுலன், நீல.பத்மநாபன், வெங்கடேசன், காசியப்பன் போன்ற விமர்சகர்களின் கருத்தாக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. க.நா.சுவின் படைப்புகள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இதழில் காரல்மார்க்சும் தாணு ஆசாரியும் என்ற தமிழவனின் சிறுகதை வெளியாகியுள்ளது. மூளையைப் புரட்டிப்போட்டு அதிர்வேற்றுகிற சிந்தனையை விதைக்கிற இலக்கியக் கதைகளைப் படிப்பவர்கள் குறைவாக இருந்தாலும் இது போன்ற இதழ்கள் அதனை வெளியிட்டு இருப்பதால் தான் அவற்றின் அருமையை இன்றும் உணர முடிகிறது. இதழுக்கு வந்த நூல்கள் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. அக்கம் பக்கம் என்ற தொடரும் காணப்படுகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,