தமிழன். 1990 ஆம் ஆண்டு, ச.அ. டேவிட் அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட தரமான தமிழுணர்வு ஆய்வு இதழ். முதல் இதழிலேயே சிந்து வெளி நாகரிகம் பற்றிய சாலை இளந்திரையன் அவர்களது கட்டுரையானது இடம்பெற்றுள்ளது. தந்தை பெரியார், தந்தை செல்வா வினது சிந்தனைகளை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டுப் பொருளாதாரம் பற்றிய தொடர் கட்டுரைகள் இதழில் இடம் பெற்றுள்ளன. ஈழப் போரின் உண்மை நிலையையும் விளக்கியுள்ளது. தமிழர்களது கலை, பண்பாடு பற்றிய விழிப்புணர்வூட்டுகிற வகையில் மிகத் தரமாகத் தொடர்ந்த இதழிது. 13 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதற்குப் பிறகு இதழ் வந்துள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் 13 இதழ்களுக்குள் மிகப் பெரிய பதிவை இந்த இதழ் ஆக்கியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,