அன்றில் இதழ். 1994 இல் 4அ. மேற்கு வீதி. பாகூர், புதுவை மாநிலத்திலிருந்து வெளிவந்த தெளிதமிழ்த் திங்களிதழ். திசம்பர் 94 இரண்டாமாண்டின் மூன்றாவது இதழ். இந்த இதழ் புதுச்சேரி இடஒதுக்கீட்டுச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. நம்மொழி தமிழ் மொழி, நம் இனம் தமிழ் இனம், இவ்விரண்டையும் பிரிக்கமுடியாது, அப்படிப் பிரியுமானால் மொழியும் இனமும் அழிந்து போகும் - என்பதை நாம் எந்நாளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று தலைப்பிலிட்டு இதழ் தொடர்ந்துள்ளது. சிறுகதை, கட்டுரை, குறிப்பு, உரைவீச்சு என அனைத்துமே தெளிதமிழில் சிறப்பாகத் தொகுத்துள்ளது. பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களும், கெடல் எங்கே தமிழர் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க என்பதற்கிணங்க - விழிப்புணர்வுச் செய்திகளை தமிழ் தமிழர் தமிழ்நாடு நோக்கில் சிறப்பாக விதைத்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,