இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 2

20 செப்டம்பர் 2003


*********************************** அன்புடையீர்.

வணக்கம்,

இது இரண்டாவது இதழ். முதல் இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..


சென்னையில் உளள நண்பர் திரு.பா.விஸ்வநாதன் - தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள், ஆக்கி வருகிற, அழகியின் ஆசிரியர் (vishy@azhagi.com)அவர்களை இந்த முறை சென்னை சென்ற பொழுதும சந்தித்தேன்.

இந்த முறை அவர் காட்டியது என்னை வியக்க வைத்தது,

அழகி எழுத்தில் தொடர்களைத் தட்டச்சு செய்து, அதன் மீது சறுக்கியோடியை (cursor) வைத்து இயக்கினால்

ஒவ்வொரு எழுத்தாகக் கணனி படித்தது. வியந்தேன்,

எப்படி இவரால் மட்டும் முடிகிறது ?

வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்கிற உறுதியும் துடிப்பும்

கொண்டு இயங்குகிற இவரை நாம் வாழ்த்தி வளர்த்தெடுப்போமாக.

இதழாளர்களின் தொடர்பிற்காகவும், படைப்பாளிகளின் படைப்பாக்கத் தளத்திற்காகவும் இந்த சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ் தொடர்ந்து வெளிவரும்.

படைப்பாளிகள் த்ஙகளது தரமான, மக்கள் நலம் சார்ந்த, மக்களுக்கு உணர்வேற்றுகிற படைப்பாக்கங்களைப் படைத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதனைகள் பல புரிந்து வருகிறார்கள். இந்தச் சாதனைகள் பற்றிய குறிப்புகளை இந்த இணைய இதழில் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன், சாதனையாளர்கள் தங்களது ஆக்கங்கள் பற்றிய குறிப்புகளை அனுப்பி உதவவும்,

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்நத போதிலும் அவர்களது ஆழ்மனதில் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. இவை பல்வேறு படைப்புகளாக அவர்களால் ஆக்கப்படுகின்றன. இப்படி ஆக்கப்படுகிற படைப்புகளும் இந்த இதழில் இடம் பெறும், படைப்பாளர்கள் எழுதி அனுப்பவும்.

தமிழகத்திலுள்ள இதழாளர்கள், படைப்பாளிகள் இந்த இதழைப் பயன்படுத்திக் கொளவார்களாக.

உரிய படைப்புகள் வரும் வரை இதழில் சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உளள படைப்புகள் வெளியிடப்படும்.

தற்பொழுது 15 நாள்களுக்கு ஒருமுறை இதழைப் புதுப்பிப்பதாக எண்ணியுள்ளேன்.



என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


***********************************

குறும்பாக்கள்


கடற்கரை

உடல் நலம்

தேடி

காற்று வாங்க

வந்து போகும்

பெரிய இடத்து

மாடிகள்

இங்கேயே

நோயோடும்

நொடியோடும்

ஒடுங்கிக் கிடக்கும்

மீனவர்

குடிசைகள்,

காசி ஆனந்தன் நறுக்குகள்


திரையரங்கினுள்

மக்கள் வெள்ளம்

வெள்ளைத் திரையை

வெறித்து நோக்கினர்,

திரைப்படம்

ஓட்டுபவரோ

மாடிமேல் நின்று

வீதி மக்களை

வெறித்து நோக்கினார்.

செந்தில் - சரவணம்பட்டி


ஒன்றினுள் இரண்டு

கல்லூரி நாள்களில்

நண்பர்களுடன் நேரம் கழிப்பதில்

மனம் மகிழ்ந்தேன்.

சில நாள்களுக்குள்

மனித மனங்களின்

போக்கும் தன்மையும்

என் வசப்பட்டன,...........

சிறிது ஆராய்ச்சியிலேயே

தெளிவு கிடைத்தது,

பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண

செயற்பாடுகள்தான் தேவையென்று.........

இனி

மனம் மகிழ என்ன இருக்கிறது ?

விஞ்ஞானிபோல

புதியதை ஆராய்ந்து படைப்பது

அல்லது

மனிதப் பிரச்சனைக்குத்

தீர்வுகாணச் செயற்படுவது,

இரண்டே வழிகள் தான்.....

இதில்

மனிதப் பிரச்சனைகளுக்குத்

தீர்வு காணச் செயற்பட்டால் போதும்,,,,,,,,

நிறைய விஞ்ஞானிகளை

உருவாக்கலாம்,

வெற்றிவேல் - கேத்தனூர்


***********************************
பரிதி ஆத்திச்சூடி - 2

தயக்கம் விடு

தாய்மொழியில் கல்

திருத்தமாய்ச் செய்

தீண்டாமை ஒழி

துயரில் துவளாதே

தூய்மையே நலம்

தெள்ளியபார்வை கொள்

தேடலே வாழ்க்கை

தையல் மானுடத்தின் பாதி

தொழாதே எதையும்

தோற்றப் பொலிவு கொள்

நம்பிக்கையே நாற்று

நாவினிக்கப் பேசு

நிகழ்காலம் உண்மை

நீர்த்துப் போகாதே

நுண்கலை நுட்பம் கொள்

நூல்களைக் காதலி

நெடிதுயர் மரம் வளர்

நேர்மையே தூய்மை

நைந்து போகாதே

நொடியையும் சேமி

நோயெதிர்த்து வாழ்

பல்லூடகப் புலமை கொள்

பார்வையில் ஈர்ப்புக் கொள்

மா. தமிழ்ப் பரிதி - சின்ன சேலம்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061