இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 13

15 மார்ச்சு 2004


அன்புடையீர். வணக்கம்,

இது 13 ஆவது இணையஇதழ். நண்பர்கள் பலரது வேண்டுகோளின்படி குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்கான தெளிதமிழ்ப் பெயர்களின் பட்டியல் இந்த இதழில் வெளியிடப்படுகிறது. நம்தமிழ் மழலைகளின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக இருந்தால்தான் அவர்களுக்குள் தமிழுணர்வு மேலோங்கும். பெற்றோர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வார்களாக. திருமணநிகழ்வு, காதணிவிழா போன்ற வீட்டு நிகழ்வுகளிலும், பொது நிகழ்வுகளிலும், பெயர்ப்பட்டியலை அச்சாக்கித்தந்தால் தமிழ்ப்பெயர்கள் பரவுதலுக்கான வாய்ப்புமிகும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


பெண் பெயர்கள்

அகல்விழி, அகவழகி, அங்கயற்கண்ணி, அஞ்சொலி, அழகிற்கினியாள், அமுது, அமுதரசி, அமிழ்தம், அமிழ்தவல்லி, அரங்கநாயகி, அரசி, அருநெறி, அருமைச்செல்வி, அரசம்மாள், அரசம்மை, அருண்மொழி, அருண்மொழித்தேவி, அருள், அருளரசி, அருளழகி, அருட்குவை, அருவிமொழி, அருள்மொழி, அரும்பாலை, அல்லி, அல்லிவிழி, அலர்மேலு, அவ்வை, அழகு, அழகரசி, அழகுமணி, அழகோவியம், அறம், அறச்செல்வி, அறப்பாவை, அறிவுமதி, அறிவுமணி, அறிவுக்கனி, அறிவழகி, அன்புவிழி, அன்புமதி, அன்பரசி, அன்புளம், அன்புச்செல்வி, அன்னம், அறிவரசி, அறிவொளி, அருவி, அறிவை, அணிநிலா, அழகெழில், அருள்வடிவு, அறிவம்மை, அருட்செல்வி, அருந்தமிழ், அன்பெழிலி, அனிச்சஅடி, அன்னக்கிளி,

ஆசைக்கிளி, ஆசைமொழி, ஆடற்செல்வி, ஆடநல்லாள், ஆண்டாள், ஆதிரை, ஆம்பல், ஆய்வளை, ஆயிழை, ஆராயி, ஆராவமுதம், ஆற்றலரசி, ஆவுடைநாயகி, ஆடலரசி, ஆடல்தேவி, ஆதித்தமிழ், ஆதிமொழி, ஆழிநங்கை, ஆழிமுத்து, ஆரறிவு, ஆரெழில்

இசையரசி, இசைச்செல்வி, இசைமகள், இசைமொழி, இசையமுது, இசையமுதம், இயலரசி, இளவரசி, இளநங்கை, இளவெயினி, இளங்குயில், இன்பவல்லி, இனிமை, இன்னிசை, இன்மொழி, இளங்கொடி, இளமதி, இளம்பிறை, இளநகை, இளவெழிலி, இனியவள், இன்னிலா, இன்முல்லை, இருவாட்சி, இளங்குமரி, இளவழகி, இளங்கிளி, இன்தமிழ், இயலிசை, இயலிசையாள், இலக்கியா, இலக்கணி, இசையறிவு, இயலரசி, இயற்றமிழ், இளநிலா, இன்நிலா, இளந்தென்றல், இனியள், இனியவள்,

ஈழமின்னல், ஈசுவரசி, ஈகைவிரும்பி, ஈழச்செல்வி, ஈழவேந்தி, ஈழமுல்லை, ஈழமகள், ஈதலரசி, ஈழமதி, ஈர்ப்பரசி,

உணர்வரசி, உயிரோவியம், உலகோவியம், உலகம்மை, உலகமுதல்வி, உலகி, உவகை, உவகைமொழி, உள்ளொலி, உயிர்நாயகி, உளம்கவர் அழகி, உலகநாயகி, உண்மைமொழி, உண்மை விளம்பி,

ஊழிமுதல்வி, ஊருணிதேவி,

எண்குணச்செல்வி, எயினி, எல்லி, எல்லம்மா, எல்லம்மை, எழில், எழில் நிலவு, எழிலம்மை, எழின் மகள், எழிலரசி, எழில்விழி, எழிலோவியம், எழிற்செல்வி, எழிலன்பி, எழுஞாயிறு,

ஏந்திழை, ஏந்திசை, ஏழிசை, ஏழிசைச்செல்வி, ஏழிசைப்பாமகள், ஏழிசைமொழி, ஏழிசைப்பாவை, ஏழிசைமுதல்வி, ஏழிசைநாயகி, ஏர்விழியாள்,

ஐயை, ஐவணம்,

ஒண்டமிழ், ஒண்டமிழ் அரசி, ஒண்டொடி, ஒண்மையள், ஒண்டமிழ்தம், ஒண்ணிலா, ஒப்பிலாமொழி, ஒலிப்பாவை, ஒளியவள், ஒள்ளறிவு, ஒளிவென்றி, ஒளிர்மதி, ஒளிர்மலை, ஒளிநிலவு, ஒளிச்செல்வி, ஒளிப்பாவை, ஒளியழகி,

ஓவியா, ஓவியச்செல்வி, ஓதற்கினியாள், ஓவியப்பாமொழி, ஒளவை,

கடற்கண்ணி, கண்ணம்மா, கண்ணகி, கண்மனி, கண்ணுக்கினியாள், கதிர்மணி, கதிர்மதி, கதிர்செல்வி, கதிரொளி, கயற்கண்ணி, கயல்விழி, கருங்குழலி, கருத்தம்மா, கருப்புமொழி, கலையரசி, கலைமதி, கலையழகி, கலைக்குவை, கலைமொழி, கலைச்செல்வி, கலைமகள், கலைநிலவு, கவினி, கல்விச்செல்வி, கவின்மொழி, கவின்நிலவு, கனனல் மொழி, கன்னல், கனிமொழி, கன்னிமொழி, கவின்அரசி, கனலி, கனல், கனிச்சாறு, கலைவல்லி, கலைமான்,

காக்கைப்பாடினி, காந்தமொழி, காந்திமதி, காவிரி, கார்குழலி, காயாம்பு, கார்முகில், காரிகை, காந்தல், காரெழிலி

கிள்ளை, கிள்ளைமொழி, கிளிமொழி, கிளிக்கண்ணி,

குடியரசி, குடியரசு, குணவழகி, குணமாலை, குணமழை, குணமல்லிகை, குணமல்லி, குணமதி, குணக்கடல், குமரி, குமரிச்செல்வி, குமரிமதி, குமுதள், குமுதினி, குயிலி, குயில்மொழி, குழலி, குறள்மொழி, குறளமுது, குறள்செல்வி, குறள்கொண்டாள், குறள்நெறி, குறளன்பி, குறிஞ்சிநங்கை, குறிஞ்சி, குறிஞ்சியழகி, குழந்தைநெஞ்சாள்,

கூர்வாள்விழி, கூர்வாளொளி, கூர்விழி, கூடல்நாயகி, கூர்வேலழகி, கூன்பிறை, கூன்பிறைநுதழி, கூந்தலழகி,

கொல்லிப்பாவை, கொற்றவை, கொன்றைமலர், கொன்றைசூடி, கொடி, கொண்டல்மகள், கொள்கைவாழி,

கோமகள், கோமதி, கோதை, கோவரசி, கோவழகு, கோவழகி, கோப்பெருந்தேவி, கோதைநாயகி, கோவைமொழி,

சண்பகம், சந்தனச்சிந்து, சந்தனம், சமன்நெஞ்சாள், சமமொழி, சாத்தம்மை,

சிட்டுமொழி, சிந்தைமொழி, சிரிப்பழகி, சிந்து, சிந்துமொழி, சிந்திழை, சிந்திசை, சிந்தைமணி, சித்திரைச்செல்வி, சித்திரைச்செந்தாழை, சித்திரப்பாவை, சிவமாலை, சிவமொழி, சிவந்தி, சிவகாமி, சிலம்பரசி, சிலையழகி, சிந்தழகி, சிலம்பொலி, சிந்தனைச்சிற்பி, சிந்தனையாழி,

சீர்விழி, சீரிளஞை, சீர்திருத்தி, சீர்தூக்கி, சீராழி, சீர்மொழி, சீரடியாள்,

சுடர்மணி, சுடரொளி, சுடர்கொடி, சுரும்பார்குழலி, சுரிகுழலி, சூடாமலை, சூடாமாலை, சூடாமலர், சூடிக்கொடுத்தாள்,

செங்கண்ணி, செங்கனிவாய்மொழி, செங்காந்தள், செங்கதிர், செங்கொடி, செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழரசி, செந்தாமரை, செந்தளிர், செங்கதிரொளி, செந்தாழை, செம்பியன்மாதேவி, செம்மலர், செம்மதி, செம்மை, செம்மனச்செல்வி, செம்மொழி, செய்தவம், செல்லம், செல்வி, செல்வக்கொடி, செல்வநாயகி, செவ்வந்தி, செவ்வந்திமணி, செவ்வல்லி, செவ்விழி, செம்மணமொழி, செந்திரு, செந்நாந்தம், செல்லக்கிளி, செழுமலை, செந்நிலா, செம்மணி,

சேரமாதேவி, சேயிழை, சேல்விழியாள், சொல்லின்செல்வி, சொல்லழகி, சொல்லரசி, சொல்லமுது, சொல்விளம்பி, சோலை, சோலையரசி, சோலையம்மை, சோழி, சோழன்மாதேவி, ஞாயிறு,

தங்கம், தங்கம்மா, தண்மதி, தண்நிலா, தத்தை, தமிழிசை, தமிழ் எழிலி, தமிழ் மணம், தமிழ்க்கொடி, தமிழ்ச்செல்வி, தமிழ்க்குரல், தமிழ்ச்சோலை, தமிழ்மலர், தமிழினி, தமிழ்த்தென்றல், தமிழருவி, தமிழின்பம், தமிழ்முலை, தமிழ்ப்பாவை, தமிழணங்கு, தமிழ்ப்பொழில், தமிழ்ச்சிட்டு, தமிழ்மங்கை, தமிழ்மதி, தமிழ்நெஞ்சி, தமிழரசி, தமிழ்நிலம், தமிழ் இலக்கியா, தமிழமுது, தவமணி, தழைமதி, தன்மானம்,

தாமரை, தாயம்மாள், தாயங்கண்ணி, தாமரைச்செல்வி, தாமரைக்கன்னி, தாழ்குழலி, திருமகள், திங்கட்செல்வி, திருமலர், திருவரசி, திருவொழி, திருமொழி, திருவாய்மொழி, தில்லை, தில்லையரசி, தில்லைநாயகி, தில்லை செல்வம், திருமங்கை, திருப்பாவை, திருமாமணி, திருவளர்செல்வி, திருவாய்மொழி,

தீங்குழலி, தீங்குயில், தும்பை, தும்பையரசி, துளசி, துளசியம்மாள், துடியிடை, தூயவள், தூமணி, தூயமணி,

தெய்வச்சிலை, தென்குமரி, தென்றமிழ்ப்பாவை, தென்ற்ல், தென்றல் மொழி, தென்னவன்மாதேவி, தென்றமிழ்ச்செல்வி, தென்றல் மகள், தென்மொழி, தெள்ளியன், தென்குமரிதேவி, தென்றமிழ், தென்னரசி, தென்னவள்

தேமொழி, தேம்பாவணி, தேவி, தேவிமொழி, தேவிசுடர், தேவராட்டி, தேன்கதலி, தேன்குழலி, தேனருவி, தேன்சிந்து, தேன்நிலா, தேனமிழ்தம், தேன்மொழி, தேன்மலர், தேனரசி, தேனம்மா, தைமகள், தைப்பாவை, தையல்நாயகி, தையலம்மை,

நக்கண்ணை, நகைமுகை, நச்செள்ளை, நடனஅரசி, நப்பசலை, நல்லி, நறசெல்வி, நறுநுதல், நன்முளை, நற்குணந்தி, நன்னுதல், நல்லம்மை, நலக்குமரி, நன்னலக்குமரி, நள்ளி, நல்லெழில், நல்லெழிலி, நன்மொழி, நன்மதி, நல்லின்பம், நற்றமிழ், நாகவல்லி, நாகரீகம், நாச்சி, நகையாள், நாவுக்கரசி, நாயகி,

நிலாமணி, நிலாமணிமுடி, நிலவரசி, நிலவழகி, நிறைமதி, நிறைமொழி, நித்தலின்பம், நீலக்குழலி, நீலமலர், நீலமேனி, நீலமணி, நுண்ணிடை, நுதற்பிறை, நூலிழை, நூலிடை, நெய்தல், நெஞ்சுக்கினியாள், நெட்டிமை, நேயமொழி, நேரிழை,

பகுத்தறிவு, பசுங்கிளி, பட்டு, பட்டம்மாள், பணிமொழி, பணிவம்மை, பனிமலர், பனிமொழி, பரணி, பழகுதமிழ், பரிமேலழகி, பவழமொழி, பவழக்கொடி, பன்னீர்மொழி, பன்னீர்ப்பாவை, பாடினி, பாண்டிமாதேவி, பாமகள், பாவரசி, பால்மொழி, பால்விழி, பாலம்மை, பாவொளி, பால்மனம்,

பாவை, பால்மொழி, பிட்சி, பிரியநங்கை, பிறைக்கண்ணி, பிறைநிலா, பிறைநுதல், பிறைமதி, பீலீவளை, புகழ்ச்செல்வி, புகழ்மலர், புகழ்க்கொடி, புதுவை விரும்பி, புதுமை விரும்பி, புதுமலர், புதுமொழி, புதுப்பாவை, புதுமைமொழி, புரட்சிமொழி, புரட்சி வேந்தி, புரட்சித்தலைவி,

பூங்கதிர், பூங்கொடி, பூங்காடு, பூங்குழலி, பூவரசி, பூங்கோதை, பூம்பாவை, பூவிழி, பூந்தமிழ், பூந்தளிர், பூமகள், பூஞ்சோலை, பெரியநாயகி, பெருஞ்சித்திரம், பேரரசி, பேரழகி, பேச்சிமுத்து, பேரெயினி,

பைந்தமிழ், பைங்கொடி, பைங்கிளி, பைந்தொடி, பைம்மணி, பொற்கொடி, பொற்பாவை, பொற்றொடி., பொழில்நிலா, பொழிலிலார், பொற்றாமரை, பொன்மதி, பொன்மொழி, பொன்னி, பொன்னவை, பொன்னடி, பொன்னரசி, பொன்னழகி, பொன்மணி, பொன்னாடை, பொன்நிலா, பொன்னடி,

மகிழ்ச்சி, மகிணன், மகிழ்ச்சிமொழி, மங்கை, மங்கலம், மங்கலநாயகி, மஞ்சு, மடந்தை, மட்டுவார்குழலி, மணவழகி, மணவெழிலி, மணிமொழி, மணியொலி, மணிமேகலை, மணிவடிவு, மதியழகி, மதிமொழி, மதியொளி, மயிலம்மை, மயிலார், மயக்கெழிலி, மதியரசி, மணிச்சுடர், மணிமுடி, மதிமகள், மலர்நங்கை, மல்லிகை, மன்னிலா, மலர்மங்கை, மலர்கொடி, மலரொளி, மலர்மதி, மலர்விழி, மலர்மாலை, மலையழகி, மலைமகள், மலையரசி, மழைச்செல்வி, மன்றலரசி,

மாவடுவிழி, மாவிழி, மாதவி, மான்விழி, மாலைமதி, மாதரசி, மாதேவி, மாநிலா, மாமலர், மாந்தளிர், மாரியம்மை, மாணிக்கமொழி, மின்னல், மின்னொளி, மின்விழி, மின்னியல், மின்னழகு, மின்னழகி, மின்னிமை, மின்னல்கொடி, மின்னி, மீன்விழி, மீனார்கண்ணி,

முழுமதி, முத்தமிழ், முக்கனி, முகில், முகில்வண்ணம், முத்தமிழ்மொழி, முத்துநகை, முத்தழகி, முத்தம்மை, முரசொலி, முல்லை, முல்லைக்கொடி, முத்துமொழி, முத்தமிழ் அரசி, முறுவலார், மெய்யன்பு, மெய்நங்கை, மெய்யறிவு, மெய்ம்மொழி, மைவிழி, மைத்தடங்கண்,

மொய்குழலி, மொழியரசி, மொழிவிரும்பி, மொழியறிவு,

யாழிசை, யாழ்மொழி, யாழினி, யாழ்வேந்தி, யாழ்நங்கை,

வடிவு, வடிவழகி, வஞ்சிமகள், வஞ்சியரசி, வஞ்சிப்பாமகள், வண்டார்குழலி, வள்ளி, வள்ளிநாயகி, வள்ளுவமொழி, வள்ளவஅன்பி, வள்ளுவம், வள்ளிக்கொடி, வளர்பிறை, வளர்மதி, வளர்செல்வம், வளர்சிந்து, வளர்மொழி, வளர்அறிவு, வலம்புரி, வலம்புரிமுத்து, வல்லவன்கோதை, வல்லவி,

வாடாமலர், வாகைசூடி, வாகைமொழி, வாழ்வரசி, வார்குழலி, வாலைக்குமரி, வான்மதி, வானருவி, வான்குயில், வானம்பாடி, வானமாதேவி, வான்மதியழகி, வானிலா,

விடிவெள்ளி, விண்ணிலா, விண்ணவள், விடுதலை, விடுதலைக்கனல், விடுதலைவிரும்பி, விடுதலைநாடி, வில்விழி, வில்நுதல், வீரம்மாள், வீரமகள், வீரம்மாதேவி, வீராயி, வீரப்பெண்,

வெண்ணிலா, வெண்டாமரை, வெண்மணி, வெற்றிச்செல்வி, வெள்ளி, வெற்றியரசி, வெற்றியழகி, வெற்றிவேங்கை, வேங்குழலி, வேல்விழி, வேலாயி, வேலுநாச்சி, வேலுத்தாய், வைகறை, வையை, வைரம், வைரமேனி, வைரமொழி, வைரநெஞ்சம், வைரமகள், வைரமணி


( அடுத்த வலையேற்றத்தில் ஆண்பெயர்கள் இடம்பெறும் )தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061