இலக்கிய இணைய இதழ்
30 டிசம்பர் 2006 - இதழ் எண் : 62

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் மதுரைத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட பிரதாபமுதலியார் சரித்திரத்தின் 8 அத்தியாயங்களை இணைத்துள்ளேன். தமிழின் முதல் நாவலான இதனை படித்துப் பார்க்கவும். முழுமையும் படிக்க விரும்பினால் மதுரைத்திட்டத்திற்குள் சென்று இதனை இலவசமாக வலையிறக்கிப் படித்து மகிழவும். நாவலின் அனைத்துப் பக்கங்களையும் தட்டச்சு செய்து வலையேற்றியுள்ள மதுரைத் திட்டம் வணங்குதற்குரியதே.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
30 - 12 - 2006


"பிரதாப முதலியார் சரித்திரம்"

ஆசிரியர் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)

அத்தியாயம் - 1

இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் சுவாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு சத்தியபுரி என்னும் ஊரிலே தொண்டைமண்டல முதலியார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனார் ஆகிய ஏகாம்பர முதலியார் இந்த தேசத்தை ஆண்ட நபாபுகளிடத்தில் திவான் உத்தியோகஞ் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூ.திதிகளையும் சம்பாதித்தார். என் பாட்டனார் படித்தது ம், அவருக்குத் திவான் உத்தியோகங் கிடைத்ததும், எல்லாரும் அதிசயிக்கத் தக்க விஷயமானதால், அதை நான் கேள்விப்பட்ட பிரகாரம் விவரிக்கிறேன். என் பாட்டனார் சம்பளங் கொடுத்துப் படிக்க நிர்வாகம் அற்றவராயிருந்தபடியால், அவர் சில உபாத்தியாயர்களை அடுத்து அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து, கல்வி கற்றுக் கொண்டார். அவர் கல்வியில் பூரண பாண்டித்தியம் அடைந்து, யௌவன புருஷனா யிருக்கும்போது, ஒரு நாள் ஒரு துலுக்கன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, சத்தியபுரிச் சாலை மார்க்கமாகச் சாரி போனான்.

அவனுடைய குதிரை எதையோ கண்டு, வெருண்டு மார்க்கத்தை விட்டுக் காட்டிலும் மேட்டிலும் ஓடி அவனைக் கீழே தள்ளிவிட்டது. அவன் காயப்பட்டு பிரக்ஞால பங்கமாய் விழுந்த இடத்திலே பிரேதம் போலக் கிடந்தான். அப்போது அவ்விடத்தி லிருந்தவர்கள், "அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஷாதிப்பிரஷ்டத்துவம் உண்டாகும்" என்று சொல்லிக் கொண்டு, அப்பால் விலகிப் போய்விட்டார்கள். என் பாட்டனார் மட்டும் "அவன் யாராயிருந்தாலும் ஆபத்து வேளையில் உதவ வேண்டும்" என்று நினைத்து அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் மூர்ச்சை தெளியும்படியான பக்குவங்களைச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடனே என் பாட்டனாரைப் பார்த்து, "நீர் செய்த உபகாரத்து க்கு ஏழைப் பக்கிரியான நான் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறேன்" என்று பலவாறாக ஷ்தோத்திரஞ் செய்தான். உடனே என் பாட்டனார் "பிரதி உபகாரத்தை விரும்பி இந்த உபகாரத்தை நான் செய்ய வில்லை; ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவுவது எவ்வளவோ பெரிய சுகிர்தம்; அந்தச் சுகிர்த பலனே எனக்குப் போதும்; இம்மையில் நான் வேறு பிரதிப் பிரயோஷனத்தை அபேஷிக்கவில்லை" என்றார். அந்தத் துலுக்கன் என் பாட்டனாரைப் பார்த்து "இம்மையிலும் உமக்கு அல்லா கிருபை செய்வார்" என, என் பாட்டனார் "நித்தியமான மறுமைப் பலனை நான் அபேஷிக்கிறேனே தவிர இம்மைப் பலனை அபேஷிக்கவில்லை" என்றார். உடனே அந்தத் துலுக்கன் எழுந்து "நான் சொல்லுவதை நீ ஆஷேபிக்கிறாயா?" என்று கோபித்து, என் பாட்டனார் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு, குதிரையின் மேல் ஒரே தாண்டாய்த் தாண்டி ஏறிக்கொண்டு போய்விட்டான். அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என் பாட்டனாரை நோக்கி, "அந்த துஷடத் துலுக்கனுக்கு நீர் உபகாரஞ் செய்தற்குக் கைமேல் பலன் கிடைத்ததே" என்று பரிகாசம் பண்ணினார்கள். என் பாட்டனார் வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டு வீட்டுக்குப் போனார்.

அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு, நபாபினிடத்திலிருந்து அநேக சேவகர்கள் உருவின கத்திகளுடனே வந்து என் பாட்டனாரைப் பிடித்துக் குற்றவாளிபோற் பின்கட்டு முறையாகக் கட்டி, நபாபு சமூகத்திற்குக் கொண்டு போனார்கள். அதற்குக் காரணந் தெரியாமையினாலே, என் பாட்டனார் சித்தங் கலங்கி "நான் ஒரு பாவத்தையும் அறியேனே" என்று அழுதுகொண்டு போனார். எங்கள் பந்துக்களும், அவரைத் தொடர்ந்து, பரிதபித்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது சிங்காதனத்தின் மீது வீற்றிருந்த நபாபு என் பாட்டனாரைக் கண்டவுடனே எழுந்து, ஓடிவந்து என் பாட்டனாரைத் தழுவிக் கொண்டு சொல்கிறார். "நான் பக்கிரி போல மாறுவேஷம் போட்டுக் கொண்டு பல ஊர்களைச் சுற்றிப் பார்த்து வருகையில், சத்தியபுரியில் எனக்கு நேரிட்ட பிராணாபத்தைத் தீர்த்து இரஷித்தீரே, அந்த உபகாரத்துக்காகவும், உம்முடைய அபார யோக்கியதைக்காகவும் உம்மைத் திவான் உத்தியோகத்தில் நியமித்திருக்கிறோம்; உமக்குச் சம்மதா?" என்று கேட்டார். உடனே என் பாட்டனார் "இம்மைப் பலன் வேண்டாமென்று முன்னே நான் சொல்லிப் பட்ட பாடு என் ஞாபகத்திலிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறவாது; ஆகையால் உங்கள் சித்தப்படி நடக்கக் காத்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்டவுடனே நபாபு சிரித்துக் கொண்டு, "நீர் ஆஷேபிக்காமலிருக்கும் பொருட்டு உம்மைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தோம்" என்று சொல்லி உடனே என் பாட்டனாரைத் திவான் உத்தியோகத்தில் நியமித்துச் சன்னதுங் கொடுத்தார்.

இப்படிப்பட்ட திவான்கள் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்று ஷகப்பிரக்கியாதியாய் யாவருஞ் சொல்லும்படியாக என் பாட்டனார் அதிகாரஞ் செலுத்திவந்தார். ஒவ்வொரு நபாபும் அவருக்குப் பல சமயங்களில் கனகாபிஷேகஞ் செய்ததுந் தவிர, எண்ணிக்கையில்லாத கிராமங்களையும் பூமிகளையும் சர்வ மானியமாகக் கொடுத்தார்கள். என் பாட்டனார், விருத்தாப்பியம் மேலிட்டவுடனே, அவருடைய திரவியங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவர் காலஞ் சென்றபிறகு, அவருடைய திதிகளெல்லாம் என் பிதாவுக்குக் கிடைத்தது. அவர் அநுபவித்து வந்தார். என் தகப்பனார் பெயர் கனகாசல முதலியார். என் தாயார் பெயர் சுந்தரத்தண்ணி. என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாயிருக்கின்றது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை; மேலும் என்னுடைய பெயரை எழுதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் பு.தகமும் அந்தப் பெயருக்கே சரியா யிருக்கும்; ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி, "பிரதாப முதலி" என்று என்னை எல்லாரும் கூப்பிடுகிறது வழக்கம். என் தாய் தந்தைகளுக்கு நான் ஏக புத்திரனாதலால், என்னை மிகவும் அன்பு பாராட்டி அருமையாக வளர்த்தார்கள். என் தகப்பனாருடைய பிரியத்துக்கும் தாயாருடைய பிரியத்துக்கும் பேதம் என்ன வென்றால், என் தகப்பனார் நாளை வருவதை யோசியாமல், இன்றைக்கு நான் சந்தோஷமாயிருந்தாற் போது மென்று, நான் என் இஷடப்பிரகாரம் கொட்டம் அடிக்கும்படி விட்டுவிடுவார். என் தாயார் எப்போதும் நான் ஷேமமாயிருக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் என்னை நயமும் பயமுமாக நடத்தி வந்தார்.

எனக்கு அஞ்சாம் பருவம் ஆரம்பமானது முதல் வித்தை கற்பிக்க வேண்டுமென்று என் தாயார் சர்வப் பிரயத்தனம் செய்தும் பலிக்க வில்லை. எனக்கு வயது போதாது போதாது என்று என் தகப்பனார் காலஷரணம் செய்து வந்தபடியால், என்னை எட்டாம் வயது எட்டிப் பார்க்கிற வரையில், நான் சுத்த நிரஷர குஷியாயிருந்தேன். என் மாதாவினுடைய அலட்டைப் பொறுக்க மாட்டாமல், என் தந்தையார் என்னை ஒரு நாள் தனியே அழைத்து, "உன் தாயார் உன்னைப் பள்ளிக் கூடத்தில் வைக்கவேண்டுமென்கிறாளே, நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டார். உடனே நான் தந்தையை நோக்கி, "ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுய புத்தி போதாதா? ஏழைகள் ஷீவனஞ் செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந் தான்; நான் படிக்க வேண்டிய அகத்திய மென்ன? ஏதாவது வாசிக்க வேண்டி யிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஷதர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?" என்றேன். இது நான் சுயமாகச் சொன்னதல்ல; என் பாட்டியார் அடிக்கடி அந்த வார்த்தைகளைச் சொல்ல நான் கேள்விப்பட்டிருந்ததால் அந்தப் பிரகாரம் நான் பாடம் பண்ணிக் கொண்டு சொன்னேன். அந்த வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளென்று என் பிதா எண்ணி, ஆனந்த சாகரத்தில் மூழ்கினார். இவ்வளவு சாதுரியமாய் நான் பேசின சமாச்சாரம் வீடு முழுவதும் பரவி, எங்கள் காரியஷதர்கள், கணக்கர்கள், பந்துக்கள், பணிவிடைக்காரர்கள் முதலான சகலரும் ஒவ்வொருவராய் வந்து, என்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ ஆரம்பித்தார்கள்.என்னுடைய பாட்டியாரும் தம்முடைய உபதேசம் என்பதை மறந்துவிட்டு, என்னைக் கட்டித் தூக்கிக்கொண்டு, "என் கண்ணே! பொன்னே! இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச யாருக்காவது வருமோ?" என்று சொல்லிக் கொண்டு, நான் சுவாசம் விடுவதற்கு இடமில்லாமல் வாயாலும் பல்லாலும் அநேக முத்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒவ்வொரு முத்தமும் எனக்குப் பிராணாவஷதையாயிருந்தது. அப்போது அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு கருங்குரங்கு, என் பாட்டியார் என்னை ஏதோ உபத்திரவஞ் செய்வதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் மேலே தாவி விழுந்து, அவர்களைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த வேதனை பொறுக்க மாட்டாமல், என் பாட்டியார் என்னைக் கீழே விட்டுவிட்டார்கள். நானும் அவர்கள் பற்கடிக்குத் தப்பிப் பிழைத்தேன்.

இவ்வளவு நடந்ததும் என் மாதாவுக்குத் தெரியாது. பிற்பாடு எவ்விதமாகவோ தெரிந்து கொண்டு, துயர முகத்தோடு வந்து என் பிதாவை நோக்கி, "ஏன் இவ்வளவு கூக்குரல்?" என்று வினாவ, "கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக் கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஷனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கின்றது? கல்வியை உணராவிட்டால் கடவுளது யதார்த்த சொரூபத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தர்மாதர்மங்களின் பேதங்களையும், ஞான சா.திரங்களையும், பூகோளம், ககோளம், கணிதம் முதலிய சாஷதிரங்களையும், இகபர சுகங்களை அடையத்தக்க மார்க்கங்களையும் நாம் எப்படி அறியக்கூடும்? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஷனம்? முகக் கண்ணுக்குக் கல்வியாகிய ஞானப்பிரகாசம் அவசியம் அல்லவா? சாணைக்கல்லில் தேய்க்கப்படாத நவரத்தினங்கள் பிரகாசிக்குமா? பிருதிவி ரூபமாயிருக்கிற பொன் வெள்ளி முதலான பஞ்ச லோகங்களை எடுத்துக் காய்ச்சித் திரட்டாவிட்டால் அவைகளுக்கு ஒளி உண்டாகுமா? வெட்டித் திருத்திச் சாகுபடி செய்கிற நிலம் மட்டும் பலன் கொடுக்குமேயல்லாது, சீர்த்திருத்தஞ் செய்யப்படாத நிலம் பலன் கொடுக்குமா? வெட்டித் திருத்தாத நிலம் கல்லும், முள்ளும், புல்லும் மண்டிக் கெட்டுப் போவது போல் கல்விப் பயிற்சியில்லாத மனம் துர்க்குணங்கள் நிறைந்து கெட்டுப் போகாதா? கல்வி ஏழைகளுக்குத் தான் முக்கியம் என்கிறாய். பல தொழில்களைக் கற்றுக் கொண்டு கைப்பாடு பட்டுப் பிழைக்க வேண்டியவர்களான ஏழைகளுக்குப் படிக்க நேரமேது? கல்வி வி.யத்தில் செலவளிக்க அவர்களுக்குப் பொருளேது? அவர்கள் படித்தாலும் அரைப்படிப்பு, காற்படிப்புப் படிக்கலாமேயல்லாமல் பூரணமாய்ப் படிக்கக் கூடுமா? நாம் காரிய.தர்களுக்கு மேல் அதிகமாய்ப் படித்திராவிட்டால் அவர்கள் நம்மை மதிப்பார்களா? அவர்களுடைய கணக்குகளிலிருக்கிற பிசகுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கக் கூடும்? வேலைக்காரர்கள், கிராமக் குடிகள் முதலானவர்களை நாம் எப்படி ஆளக்கூடும்? தனவான்கள் படித்தவர்களாயிருந்தால் மட்டும் அவர்களுடைய பொருள்களை சத்வி.யத்தில் உபயோகிப்பார்களே தவிரப் படியாதவர்கள் கையில் அகப்பட்டு தனமானது, பைத்தியக்காரர்கள் கையில் இருக்கிற கத்திபோல், தங்களுக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும். ஆதலால் கல்வி தனவான்களுக்கே முக்கியம்" என்று என் தாயார் கர்ணாமிர்தமாகப் பிரசிங்கித்தார்கள். அதைக் கேட்ட என் தகப்பனார் "நல்லது பெண்ணே! உன் மனதுப் பிரகாரம், பிள்ளைக்கு வித்தியாப்பியாசம் செய்விக்க வேண்டிய முயற்சி செய்கிறேன்" என்றார். கல்வி அனாவசியமென்று என் பாட்டியார் எனக்குப் போதித்த போதம், என் தாயாருடைய பிரசங்கமாகிய பிரசண்டமாருதத்தின் முன் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

உடனே என் தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனஞ் செய்து, எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ் செய்தார். எங்கள் கிராம காரியங்களையும், என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்து வந்த படியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமி.மாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும் தகப்பனாரும் என் கல்வி வி.யத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷடமானபோது நான் படிக்கிறதென்றும், என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக் கூடாதென்றும், ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினே தினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம், சரியாய் நடக்க வில்லை யென்றும் சில உபாத்தியாயர்கள் நீக்கப் பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் "வா, போ" என்று ஏகவசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப் பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரசாயப் பட்டுச் சொல்லிக் கொடுத்துச் சம்பளம் வாங்குகிற சமயத்தில், சம்பளமில்லாமல் நீக்கப் பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்தி வந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம். இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, "நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனி மேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடம் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்" என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாதபோது உபாத்தியார் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார், நான் பாடத்தைச் சரியாய்ப் பாடித்த நேரமுமில்லை; கனக சபை அடிபடாத நேரமுமில்லை. ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு "ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்ய வில்லையே, இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்" என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி, என் கண்ணில் .லம் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன் அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக அவனுக்கு அடி வாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?

-------------

அத்தியாயம் - 2

நான் படிப்பு வி.யத்தில் மந்தமாயிருந்தாலும், விளையாடுகிற வி.யத்தில் அதிக முயற்சி உள்ளவனாக இருந்தேன். என்னுடைய பால்ய சே.டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்குமானதால் அவைகளை அடியில் விவரிக்கிறேன். என் வீட்டில் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதை பட்டார்கள். அவர்களைப் பல பேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமா யிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால் நான் ஒரு மூலையில் அழுதுகொண்டு இருந்தேன். எல்லாரும் ஓடிவந்து, "ஏன் அப்பா!`அழுகிறாய்" என்று கேட்டார்கள். "எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!" என்று தேம்பித் தேம்பி அழுதேன்.

நானும் சில பிள்ளைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒரு பையன் என்னைப் பார்த்து, "நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு வித்தை செய்கிறேன்; நீ அந்த வித்தையை இரண்டு கண்ணையுந் திறந்துகொண்டு செய்வாயா?" என்று கேட்டான். அதற்கு நான், "நீ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு செய்கிற வித்தையை, நான் கண்ணைத் திறந்துகொண்டு செய்யக் கூடாதா? அப்படி நான் செய்யாவிட்டால் உனக்கு நான் இவ்வளவு பந்தயம் கொடுப்பேன்" என்று ஒப்புக்கொண்டேன். உடனே அந்தப் பையன் நடுத் தெருவில் உட்கார்ந்து, இரண்டு கண்ணையும் மூடிக்கொண்டு மண்ணை அள்ளி அள்ளித் தன் கண்மேலே போட்டுக் கொண்டான். பிற்பாடு என்னைப் பார்த்து, "நீ இரண்டு கண்களையும் திறந்துகொண்டு இந்த வித்தையைச் செய்" என்று மண்ணை அள்ளி என் கையில் கொடுத்தான். நான் கண்ணை இழந்துபோவதைப் பார்க்கிலும் காசை இழப்பது நலமென்று நினைத்துப் பந்தயக் காசை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்.

எங்கள் வீட்டு மேல் மாடியில் அதிக விலை பெற்ற நிலைக் கண்ணாடிகள் மாட்டியிருந்தன. ஒரு கண்ணாடியில் நானும் சில பிள்ளைகளும் எங்களுடைய முக அழகைப் பார்த்தபோது எல்லாருடைய முகமும் அழகாயிருக்க, என் முகம் மட்டும் எனக்கே பார்க்கச் சகிக்காமல் விகாரமாயிருந்தது. அது கண்ணாடியினுடைய பிசகென்றெண்ணிக் கையை ஓங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியில் பலமாக ஒரு குத்து குத்தினேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் துண்டாக உடைந்து போயிற்று.

எந்த வேலையிலும் சோம்பலாக இருக்கக் கூடாதென்றும் தொட்ட காரியத்தை உடனே முடித்துவிட வேண்டுமே தவிர நாளைக்கென்று நிறுத்தி வைக்கக் கூடாதென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி புத்தி சொல்லி வருவார்கள். நான் அந்தப் புத்தியை ப.ண வி.யங்களில் உபயோகப் படுத்தி, எத்தனை ப.ணங்கள் அகப்பட்டாலும், நாளைக்கென்று வையாமல் உடனே சாப்பிட்டு, மந்தப் பட்டு வைத்தியர்களுக்கு ஓயாது வேலை கொடுத்து வந்தேன். எல்லாரிடத்திலும் மரியாதையாய்ப் பேசவேண்டுமென்றும், யாராவது வந்தால் அவர்களுக்கு உடனே ஆசனம் கொடுத்து உபசாரம் செய்ய வேண்டுமென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லி வருவார்கள். நான் அந்தப்படி வண்ணான், அம்பட்டன், தோட்டிக்குக் கூட ஆசனம் கொடுத்து மரியாதை செய்யத் தலைப்பட்டேன்.

தினமும் பொழுது விடிந்தவுடனே, உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால், பொழுது விடியாமலிருப்பதற்கு, என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிறபடியால், கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று நினைத்து, கோழி வளர்க்கவேண்டாமென்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன்.

ஒரு நாள், ஒரு பையனிடத்தில் நான் இரண்டு வராகன் கடன் வாங்கினதாகவும், அவன் என்னை அடித்ததாகவும் சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு, அந்தப் பையனை மறுநாள் பார்த்தபோது, அந்தச் சொப்பனத்தை அவனுக்குத் தெரிவித்தேன். உடனே அவன் .அந்தக் கடனைக் கொடு" என்று என் மடியைப் பிடித்துக் கொண்டான். நான் அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு மூன்று அறைகள் கொடுத்தேன். அவன் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டான். "இராத்திரி நீ என்னை சொப்பனத்தில் அடித்தபடியால் அதற்காக நான் இப்போது நான் உன்னை அடித்தேன்" என்றேன். அவன் "கடனுக்கும் அடிக்கும் சரியாய்ப் போய்விட்டது" என்று சொல்லிப் போய்விட்டான்.

ஒரு நாள், நான் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு து.டன் அவனுடைய மாட்டை ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டிக் கொண்டு போனான். நான் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டதற்கு அவன் "என் மாட்டை எப்படியாவது நான் உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்றான். நான் உடனே என் கையில் இருந்த கழியால் அவனை அடித்து, "என் கழியை நான் எப்படியாவது உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்று சொல்லிப் போய்விட்டேன்.

எங்கள் வீட்டில் ஒரு பெரியவருக்கு அசாத்திய ரோகம் நேரிட்டு, வைத்தியர்களும் கைவிட்டுவிட்டார்கள். எமன் வந்து உயிரைக் கொண்டு போகின்றதென்று நான் கேள்விப் பட்டிருந்த படியால், கதவை மூடி வைத்திருந்தால், எந்த வழியாய் வருவான் என்று நினைத்து, அந்தப் பெரியவர் படுத்திருந்த அறையின் கதவை மூடி, துவாரங்களை யெல்லாம் அடைத்து விட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் து.ட யமன், எந்த வழியாகவோ வந்து பிராணனைக் கொண்டுபோய்விட்டான்.

நான் ஒரு நாள், கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபிறகு, முதுகின் அழகைப் பார்க்கும் பொருட்டு கண்ணாடியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன். ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

என்னுடைய நேசன் ஒருவன், ஒரு பு.தகம் அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தபால் வழியாய்க் கடிதம் அனுப்பினான். நான் அந்தப் பு.தகத்தை அனுப்ப வில்லை. சில நாளைக்குப் பிறகு நான் அவனைக் கண்டபோது "பு.தகம் அனுப்பும்படி நீ எழுதிய கடிதம் என்னிடத்தில் வந்து சேரவில்லை" என்றேன். "கடிதம் வந்து சேராவிட்டால், நான் பு.தகம் வேண்டுமென்று எழுதிய சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று அவன் கேட்க, நான் ஆடு திருடிய கள்ளன் போல் விழித்தேன்.

ஒரு முக்கியமான சங்கதியைப் பற்றி, ஒரு சிநேகிதனுக்கு நான் கடிதம் எழுதி அதன் கடைசியில் "இந்தக் கடிதம் வந்து சேரா விட்டால், உடனே எனக்குத் தெரிவி" என்று எழுதினேன். கடிதம் போய்ச் சேராவிட்டால் என்ற அந்தக் கடைசி வாக்கியத்தால் என்ன பிரயோசனமென்பதை நான் கவனிக்கவில்லை.

ஒரு பிரசித்தமான பொய்யன் என்னிடத்தில் வந்து, தன்னுடைய ஆயுசு முழுமையும் தான் ஒரு நிசம் சொன்னதில்லை என்றான். "நீ ஒரு நிசம் சொல்லியிருக்கிறாய்" என்று நான் சொல்ல, அவன் "இல்லை, இல்லை" என்றான். "ஆயுசு முழுமையும் நிசம் சொன்னதில்லையென்று நீ சொல்வது நிசம் அல்லவா?" என்றேன். அவன் சரியென்று ஒப்புக் கொண்டு என்னைப் பார்த்து "நீ ஒரு பொய் சொல்ல வேண்டும்" என்றான். நான் உடனே "நீ, யோக்கியன்" என்றேன். ஒரு நாள் இராத்திரி, நான் தங்கக் காப்புகளும் கொலுசுகளும் போட்டுக்கொண்டு நித்திரை செய்தேன். ஒரு திருடன் எவ்விதமாகவோ உள்ளே நுழைந்து, எல்லாரும் தூங்குகிற சமயத்தில் என்னுடைய கைக் காப்பையும் கொலுசையுங் கழற்றிக்கொண்டு ஓடினான். நான் உடனே "திருடரே! திருடரே! இன்னொரு கைக் காப்பையுங் கொலுசையும் மறந்துவிட்டீரே" என்று கூவினேன். அந்த அரவம் கேட்டு, எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். திருடனும் ஓடிப் போய் விட்டான்.

என் பாட்டியாருக்கு, மூன்றாம் முறை சுரம் வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்று விட்டால் சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்து கடியாரத்தை நிறுத்தி விட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் திருட்டுச் சுரம் வராமலிருக்கவில்லை. நானும் கனகசபையும் பின்னும் சில பிள்ளைகளும் எங்களுக்குத் தேகபலம் உண்டாவதற்காகச் சில நாளாய்ச் சிலம்பம் பழகிக்கொண்டு வந்தோம். ஒரு நாள் இராத்திரி வெகுநேரம் வரையில், நாங்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்து வீட்டுக்கு வந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வே.ம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்தபோது இராமரும், சீதையும், லட்சுமணரும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்போது தசரதர், கௌசலை முதலான சகல .னங்களும், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவுடனே, நான் கனகசபையைப் பார்த்து, "அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாடவும் சம்பவித்திருக்கின்றதே! இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பது தர்மமா?" என்று கேட்க, அவன் "இந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல" என்றான். நானும், அவனும் மற்றப் பிள்ளைகளும், எங்கள் கைகளிலிருந்த சிலம்பக் கழிகளுடனே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த .னங்களின் தலைமேல் ஏறி மிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்து விட்டோம். அங்கே தன் பிள்ளைக்குப் பட்டாபிே.கம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த கைகேசியை வளைத்துக் கொண்டு, எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் "பரதனுக்குப் பட்டம் வேண்டாம், வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்போது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்.ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்; காட்டுக்குப் போகிற இராமரிடத்துக்குப் போய், நகரத்துக்குத் திரும்பும்படி சொன்னோம். அவர் "பிதுர் வாக்கிய பரிபாலனம் செய்வதற்காக நான் காட்டுக்குப் போவது அகத்தியம்" என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோமென்று வழி மறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்து க் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் "சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங் கட்டிக்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்குச் சம்மதித்து ஊரெங்கும் முரசறைவித்த பிற்பாடு, உமக்குக் கொடுத்த இராச்சியத்தைப் பரதனுக்குக் கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்திருந்தால் அது அசத்தியமல்லவா? உமக்குப் பட்டாபிே.கம் ஆனால் தான் உமது தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.

"என்னே அரசர் இயற்கை யிருந்தவா தன்னே ரிலாத தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்"

என்று கம்பரும் சொல்லியிருக்கிறபடியால், ஊருக்குத் திரும்பும்" என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்குப் பயந்து உடனே நகரத்துக்குத் திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிே.கம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தானென்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச் சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ரா..ியபாரம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.

ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு, அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்துகொண்டேன். கனகசபை "ஏன் ஒளிகிறீர்கள்?" என்று கேட்டான். "நமக்குச் சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்குக் கோபமாயிருக்குமென்று பயந்து ஒளிந்து கொண்டேன்" என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, "பூர்வீக மனு.ர்களெல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனு.ர்களுக்கு ஆயுசு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து "பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் பூர்வீக மனு.ர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து போய்விட்டது" என்றேன்.

நானும் சில பிள்ளைகளும் நீந்தக் கற்றுக் கொள்வதற்காக ஒரு குளத்துக்குப் போனோம்; "நானும் நீந்தக் கற்றுக் கொள்வதற்கு முன் தண்ணீரில் இறங்கமாட்டேன்" என்று கரையில் உட்கார்ந்தேன். "தண்ணீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்கிறது?" என்று எல்லாரும் என்னைப் பரிகாசம் செய்தார்கள்.

நானும் சில பிள்ளைகளும் குதிரைப் பந்தயம் விட்டபோது என் குதிரை எல்லாருடைய குதிரைகளுக்கும் பிந்திப் போய்விட்டதால், எல்லாரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தார்கள். நான் "என்னுடைய குதிரை எல்லாருடைய குதிரைகளையும் துரத்துகிறது. என்று சொல்லி அவர்களுக்கு மேல் அதிகமாகச் சிரித்தேன்.

ஒரு நாள் நானும் கனகசபையும் பின்னுஞ் சிலரும் எங்களுடைய வீரப் பிரதாபங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கனகசபையை நோக்கி "அநேக சத்துருக்களை நான் ஓடும்படி செய்தேன்" என்றேன். அவன் "எப்படி ஓடச் செய்தீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே ஓட ஆரம்பித்தேன்; அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தார்கள்; இப்படி நான் சத்துருக்களை ஓடச் செய்தேன்" என்றேன். கனகசபை என்னுடைய சவுரியத்தை மெச்சிக்கொண்டு, "நீங்கள் சத்துருக்களை எப்படி வெல்லுவீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே அதிவேகமாக ஓடுவேன்! என்னுடைய ஓட்டத்தைப் பிடிக்க அவர்களாலும், அவர்கள் பாட்டனார்களாலும் முடியாது; இவ்வகையாக அவர்களை நான் வெற்றி கொள்வேன்" என்றேன். அப்போது கூட இருந்த ஒரு சிப்பாய், தான் சண்டையில் எதிரியினுடைய காலை வெட்டினதாக வீரம் பேசினான். நான் அவனைப் பார்த்து "எதிரியினுடைய தலையை வெட்டாமல் காலை வெட்டின காரணம் என்ன?" என்று கேட்க, அந்தச் சிப்பாய் "நான் என்ன செய்வேன்? எதிரியினுடைய தலையை வேறொருவன் முன்னமே வெட்டிக் கொண்டு போய்விட்டான்; பிறகு நான் காலை வெட்டினேன்" என்றான்.

சில காலத்துக்கு முன் நானும் கனகசபையும் சேர்ந்து சில கவிகள் உண்டு பண்ணினோம். அந்தக் கவிகளை இந்தக் கிரந்தத்திலே சேர்க்கலாமென்று யோசித்து, அவைகளைப் பார்வையிட்டோம். சில கவிகளின் அர்த்தம் எனக்கு மட்டும் தெரிகின்றது. கனகசபைக்குத் தெரியவில்லை. சில கவிகளின் அர்த்தம் கனகசபைக்கு மட்டும் புலப்படுகின்றது; எனக்குப் புலப்படவில்லை. சில கவிகளின் பொருள் அவனுக்கும் விளங்கவில்லை; எனக்கும் விளங்கவில்லை. அன்றியும் அநேக கவிகளுக்குச் சந்தமே தெரியவில்லை. சந்தந் தெரிகிற கவிகளுக்குப் பொருள் தெரியவில்லை. பொருள் தெரிகிற கவிகள், இலக்கண விதிக்கு ஒத்திருக்கவில்லை. ஆகையால் அந்தக் கவிகளை, இந்தப் பு.தகத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன்.ரு புலவர், நான் பாடின ஒரு கவியைப் பார்த்து, அதை நான் கம்பராமாயணத்திலிருந்து திருடிக் கொண்டதாகக் குறை கூறினார். "நான் திருடவே யில்லை" என்றேன். அவர் அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதாகக் காட்டினார். நான் உடனே அவரைப் பார்த்து, "நான் அந்தக் கவியைக் கம்பராமாயணத்திலிருந்து திருடி எடுத்துக் கொண்டு போனால், பிறகு அந்தக் கவி கமபராமாயணத்தில் எப்படி இருக்கக் கூடும்? ஆகையால் நான் திருடவில்லையென்பதற்கு அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதுவே சா.ி" என்று மெய்ப்பித்தேன்.

ஒரு மூடன் என்னைப் பார்த்து, "சகல மனு.ர்களும் பிழை செய்வது சக.ம்; இந்த வி.யத்தில் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம்?' என்றான். நான் அவனை நோக்கி "அவிவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியாது; உலகத்துக்கெல்லாம் தெரியும்; விவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியும்; உலகத்துத் தெரியாது" என்றேன்.

--------------

அத்தியாயம் - 3

எனக்காகக் கனகசபை படிப்பதும், எனக்காக அவன் அடிபடுவதும், என் தாயாருக்குச் சிலநாள் வரைக்கும் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்ததாகக் தோன்றுகிறது. ஒருநாள், அவர்கள் என்னையும் கனகசபையையும் அழைத்து, இருவருக்கும் இலைபோட்டுக் கனகசபை இலையில் மட்டும், அன்னம் பட்சணம் முதலியவைகளைப் படைத்து, என்னுடைய இலையில் ஒன்றும் படையாமல் வெறுமையாய் விட்டுவிட்டார்கள். என் மாதாவைப் பார்த்து, எனக்கும் அன்னம் படைக்கும்படி வேண்டினேன். அவர்கள் .கனகசபை அமுது செய்வதைப் பார்த்துக் கொண்டிரு. என்றார்கள். .அவன் அமுது செய்கிறதைப் பார்த்துக்கொண்டிருந்தால், எனக்குப் பசி அடங்குமா?. என்றேன். .அவன் படிக்கிறதையும் அடிபடுகிறதையும் நீ பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு வித்தை வருமா?. என்றார்கள். நான் உடனே நாணம் அடைந்து, மாதாவின் முகத்தைப் பார்க்கிறதைவிட்டு பூமிதேவி முகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அன்றைய தினம் எனக்கு அன்னப்பிடி வெல்லப்பிடியாய் விட்டது. எனக்காக ஒரு ஏழைப்பிள்ளையை அடிபடும்படி செய்வித்தது பெரிய அக்கிரமமென்று என் தாயார் வி.தாபிர.ங்கஞ் செய்தது மின்றி என்னைப் பார்த்து .நீ படவேண்டிய அடியை கனகசபை ஏற்றுக்கொண்டால், நீ அனுபவிக்கிற சுகங்களிலும் அவனுக்குப் பங்கு கிடைக்கவேண்டியது நியாயம். என்று சொல்லி, அன்று முதல் அன்ன வ.திரபூ.ணாதி வி.யங்களில், எனக்குங் கனகசபைக்கும் யாதோரு பேதமு மில்லாமல் இருவரையும் ஒரே தன்மையாய் நடத்தி வந்தார்கள். இனிமேல் நான் என் வீட்டில் படிப்பது சரியல்லவென்று, என் மாதா அபிப்பிராயப்படி எங்களுடைய சம்பந்தி முதலியார் வீட்டில், அவருடைய மகளோடுகூட வேறொரு தகுந்த உபாத்தியாரிடத்தில், நானும் கனகசபையும் படிக்கும்படி திட்டம் செய்தார்கள். அன்று முதல் என் படிப்பும் பிழைத்தது; கனகசபை முதுகும் பிழைத்தது. கனகசபையிம் தகப்பனார் சாந்தலிங்கம் பிள்ளையை என் தாயார் கைவிடாமல், அவரை எங்கள் குடும்பத்தில் பிரதான காரிய.தராக நியமித்து, அவரையும் அவருடைய குடும்பத்தையும் சம்ரட்சணை செய்து வந்தார்கள்.

சம்பந்த முதலியார் யாரென்றால், அவர் என் தாயுடன் பிறந்த அம்மான். அவருடைய பாட்டனார், என்னுடைய பாட்டனாரைப் போலவே கருநாடக ரா.ாங்கத்தில் உத்தியோகஞ்செய்து அநேக திரவியங்களை ஆர்.ித்துக் கொண்டு சத்தியபுரியில் வந்து வசித்தார்.அவருடைய குமாரன் சந்திரசேகர முதலியாருக்குச் சம்பந்தி முதலியாரும் என் தாயாரும் சந்ததிகள். அவர்களுக்கும் எங்களுக்கும் நெடுங்கால அநுபந்தம். மேற்படி சம்பந்தி முதலியாரும், எங்களைப் போலவே தனத்தில் மிகுந்தவர். அவருக்கு வெகு காலம் பிள்ளையில்லாமலிருந்து, பிற்பாடு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு ஞானாம்பாள் என்று நாமகரணம் செய்தார்கள். உலகத்திலிருக்கிற அழகுகளெல்லாம் கூடி ஒரு வடிவம் எடுத்து வந்தாள் போல, அவள் அதிரூபலாவண்ணியம் உடையவள்; அவளுடைய குணாதிசயங்களை யோசிக்குமிடத்தில், ஞானாம்பாள் என்கிற பேர் அவளுக்கே தகும்! அவளுடைய பிதா சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவளிக்கிற வி.யத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத் தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லாது பணத் தியாகம் செய்யமாட்டார். "கொடு" என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல் இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் "தா, தா" என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர் தாதனைப் பார்த்து "தாதா" என்று கூப்பிட்டாலும் அவர் சகிக்க மாட்டார். இப்படிப்பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள் ஐந்து வயதுக் குழந்தையாயிருக்கும்போது ஒரு வார்த்தையினாலே திருப்பி விட்டாள். எப்படியென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்து க் கொண்டு ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை அவர், பொக்கி. அறைக்குள் அழைத்துக் கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்து தரம் எண்ணி வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியே போகும்போது, "அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள் தான். அவரும் பணத்தைப் பார்க்கிறதைத் தவிர செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு போனார்கள். அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டு தகப்பனாரிடம் போய் "ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டாள். அவர் "லோபி என்றால் ஈயாதவன்" என்று சொன்னார். அவள் "அப்படியானால், உங்களைப் பல பேர்கள் லோபி லோபி என்று சொல்லுகிறார்கள்.. உங்களுக்கு மகளாயிருக்க எனக்கு வெட்கமா யிருக்கிறது" என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி அன்று முதல் அவர் லோப குணத்தை விட்டு "தாதா" என்று பல பேரும் சொல்லும்படி புது மனு.னாக மாறிவிட்டார்.

ஞானாம்பாளுடைய புத்தி தீ.ண்ணியம் தெரியும்படியாக இன்னொரு விசே.ம் தெரிவிக்கிறேன். ஒரு நாள் தமக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்கிற கர்வத்தோடும் கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுகு வந்திருந்தார்; அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள் ஞானாம்பாளைக் காட்டி "இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில் அதிக தீ.ண்ணியம் உள்ளதாயிருக்கிறது" என்கிறார்கள். அதைக் கேட்ட அந்தப் பெரியவர் "சிறு வயதிலே புத்திசாலியா யிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டியாய்ப் போகிறது சக.ம்" என்றார். உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து "தாங்கள் சிறு பிராயத்தில் அதிக புத்திசாலியா யிருந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்" என்றாள். உடனே அவர் நாணமடைந்து அவருடைய கர்வத்தை விட்டு விட்டார்.

என் தாயார் உத்தரவுப்படி நானும் கனகசபையும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளுடைய உபாத்தியாயராகிய கருணானந்தப் பிள்ளையிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தோம். எங்களுடைய படிப்பைப் பரிசோதிப்பதற்காக, அந்த உபாத்தியாயர் எங்களைப் பார்த்து .உயிரெழுத்து எத்தனை, மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரம் சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்.; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.

உடனே உபாத்தியாயர் அதிகாரஞ் செய்து "நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்திலே போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள் "உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். "நான் உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியாயர் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டுபோய் உபாத்தியாயர் முன்பாக விட்டேன். அவள் அவரிடத்திலும் முன் சொன்னபடியே சொன்னாள். உபாத்தியாயர் அவள் சொன்னதுதான் சரியென்று எங்களுக்குத் தெரிவித்தார். இவ்வகையாக நாங்கள் ஞானாம்பாளுக்கு வயதில் மூத்தவர்களா யிருந்தாலும் கல்வியில் அவளுக்குக் கனி.டர்களா யிருந்தோம். நாங்கள் அவளுடன் வாசிக்க ஆரம்பித்தபோது, அவள் எடுத்த பு.தகம் வாசிக்கவும் அர்த்தம் சொல்லவும் பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலான கணக்குகள் பார்க்கவும் திறமையுள்ளவளா யிருந்தாள். "பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெரு மூச்சு விட்டது போல் ஞானாம்பாளுடைய கல்வித் திறமையை அறிந்தவுடனே எங்களுக்குப் பொறாமையும் வெட்கமுமுண்டாகி, அன்று முதல் நாங்கள் கல்வியில் அதிகக் கவனம் வைக்கத் தொடங்கினோம். சீக்கிரத்தில் அவளை வித்தையில் வெல்ல வேண்டுமென்பது எங்களுடைய மனோரதமாயிருந்தது. நாங்கள் எவ்வளவு பிராயசப் பட்டுப் படித்தாலும் அவளும் மேலும் மேலும் படித்துத் தினந்தோறும் கல்வியில் அபிவிருத்தி அடைந்து வந்தபடியால், அவளுடைய ஓட்டத்தைப் பிடிக்க எங்களால் முடிய வில்லை. எட்டி எட்டிப் பார்த்தும் எட்டாமையினால் கொட்டாவி விடத் துவக்கினோம். ஆயினும் அவளுடன் சேர்ந்து படிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்த பிற்பாடு நாங்களும் கல்வியில் முயன்று கல்விமான்களென்கிற பெயரும் பிரதி.டையும் பெற்றோம்.

ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கின்றோ மென்கிற வித்தியா கர்வமில்லாமல், சுத்த நிகர்வ சிரோமணியா யிருந்தாள். நாங்கள் கல்வியில் தனக்குக் குறைவாயிருப்பதற்காக வருத்தப் படுகிறோமென்று தெரிந்து கொண்டு, அந்த வருத்தத்தை நீக்கும் பொருட்டு எங்களைப் பார்த்து ஞானாம்பாள் சொல்கிறாள்: ".திரீகள் எவ்வளவு படித்தாலும் புரு.ர்களை வெல்ல மாட்டார்கள்; .திரீகள் சொற்பகாலத்தில் வளர்ந்து பு.பித்து சீக்கிரத்தில் கெட்டுப் போகிற சிறு செடிகளுக்குச் சமானமா யிருக்கிறார்கள். புரு.ர்களோ என்றால், வெகுநாள் தாமதப் பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விரு.ங்களுக்குச் சமானமா யிருக்கிறார்கள். .திரீகளுக்கு யௌவனமும், புத்தியும் சீகிரத்தில் வந்து, சீக்கிரத்தில் மாறிப் போகின்றன. புரு.ர்களுக்கு யௌவனமும் புத்தியும் தாமதித்து வருகிற படியால், நெடுங் காலம் நீடித்திருக்கிறது" என்றாள். அதைக் கேட்டவுடனே எங்களுடைய வெட்கம் நீங்கி, நாங்கள் மேலும் மேலும் கல்வியில் முயல மனோற்சாகம் உண்டாயிற்று.

-------------

அத்தியாயம் - 4

ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பாட்டியார் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே, ஞானாம்பாள் அவ்விடத்திலே கிடந்த பிரம்பை எடுத்து ஒளிப்பது போல் .ாலம் செய்தாள். "என்னைக் கண்டவுடனே ஏனம்மா பிரம்பை எடுத்து ஒளிக்கிறாய்?" என்று என் பாட்டியார் கேட்க, ஞானாம்பாள் "உங்களுடைய பேரனுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்னை அடிப்பீர்களென்று பயந்து, பிரம்பை ஒளித்தேன். அடி படுவதற்குக் கனக சபை அண்ணனும் இங்கே இல்லையே!" என்றாள். உடனே என் பாட்டியார் ஞானாம்பாளைக் கட்டிப் பிடித்து "என் புத்தியுள்ள செல்வமே!" என்று ஒரு முத்தம் கொடுத்து விட்டுப் பிறகு என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது போல ஞானாம்பாள் இவ்வளவு சிறு பிராயத்தில் நடக்கிற கிரமத்தையும் ஒழுங்கையும் யோசிக்குமிடத்தில், அவள் அறிவிலும் நற்குணங்களிலும், உன் தாயாருக்குச் சமானம் ஆவாளென்று நினைக்கின்றேன்; உன் தாயாருக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் நடந்த ஒரு அதிசயத்தைத் தெரிவிக்கிறேன் கேள்!" என்று என் பாட்டியார் சொல்லத் தொடங்கினார்கள். "உன் தாயார் கன்னிகையா யிருக்கும்போது, அவளுடைய குண அழகையும் ரூபலாவண்ணியத்தையும் கேள்வியுற்று, அவளை மணஞ் செய்வதற்கு நம்முடைய பந்து க்களில் அநேகர் விரும்பியும், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல, அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. நமக்கு நெருங்கிய பந்துத்வம் உடைய பேராவூர் நீலகண்ட முதலியும் உன் தாயாரைக் கொள்ள, பகீரதப் பிரயத்தனஞ் செய்தான்; அந்தப் பிரயத்தனம் பலிக்காமற் போய்விட்டதால், தாயாரை எவ்வகையிலாவது சிறை எடுத்துக் கொண்டுபோய், பலவந்தமாய் விவாகஞ் செய்துகொள்ளுகிறதென்று தீர்மானித்துக் கொண்டு அதற்குத் தகுந்த சமயமும் தேடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு சமயமும் வாய்த்தது. எப்படியென்றால், உன்னுடைய மாதாமகர் முதலான புரு.ர்களெல்லாரும் இருகாதவழி தூரமான மங்கனூருக்குப் போயிருந்தார்கள்; வீட்டில் உன் தாயார் முதலான சில .திரீகளும், சில வேலைக்காரர்களும் மட்டும் இருந்தார்கள்; அந்தச் சமயத்தில் மேற்கண்ட நீலகண்ட முதலி, அவனுடைய இரண்டு குதிரைகள் பூட்டின நாலு சக்கர ரதத்தையும், சாரதியையும் சத்தியபுரிக்கு அனுப்பி, மங்கனூருக்குப்போயிருந்த உன் மாதாவின் தகப்பனாருக்குத் திடீரென்று மார்பு அடைத்துப் பேச்சு மூச்சு இல்லாமல், அத்தியாவ.தையாக இருப்பதாகவும், அதற்காக உன் தாயார் உடனே வரும்படி வண்டி அனுப்பியிருப்பதாகவும், அபாண்டமாய்த் தெரிவிக்கும்படி திட்டஞ் செய்தான்; அந்தப் பிரகாரம் சாரதி வந்து தெரிவித்தவுடனே, உன் தாயார் நி.மென்று நம்பி, உடனே அவளும் அவளுடைய தோழியும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள். அந்த வண்டி நீலகண்ட முதலியினுடைய வண்டி என்பது, உன் தாயாருக்குத் தெரியாது; தன் தகப்பனாருடைய வண்டிகளில் ஒன்றென்று நினைத்தாள்; இரண்டு குதிரைகள் கட்டின வண்டியைத் தொடர்ந்து கொண்டு ஓடுவது அசாத்திய மாகையால், வேலைக்காரர்கள் ஒருவரும் வண்டியுடன் கூடப் போகவில்லை; அந்த வண்டியைச் சாரதி அதி வேகமாய் நடத்திக் கொண்டு, தெற்கு ர.தா வழியாகப் போனான். தெற்கு ர.தாவில் ஒரு காதவழி தூரம் போய்ப் பிறகு மங்கனூருக்கு, மேற்கு ர.தா வழியாகத் திரும்ப வேண்டியதாயிருக்க, அந்தப்படி மேற்கு ர.தாவில் திரும்பாமல், பேராவூருக்குப் போகிற கிழக்கு ர.தா வழியாக வண்டியை நடத்திக் கொண்டு போனான்.

வண்டியின் பலகணிகள் மூடப் பட்டிருந்தமையாலும், தகப்பனார் வியாதியாயிருக்கிறாரென்கிற துயரத்தினாலும், வண்டி கிழக்கு ர.தா வழியாகப் போகிறதை உன் தாயார் கவனிக்கவில்லை. அந்தச் சாரதி சாராயப் பெட்டியைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு, வழியிற் போகும்போதே சாராயத்தைக் குடித்துக் கொண்டு போனதால், அவன் அறிவு மயங்கி, அவனுடைய வெற்றிலைப் பாக்குப் பையைக் கை நழுவிக் கீழே விழும்படி விட்டு விட்டான்; அது விழுந்த வெகு நேரத்து க்குப் பிற்பாடு அவனுக்குத் தெரிந்து, அதைத் தேடிப் பார்ப்பதற்காக, அவன் வண்டியை நிறுத்திக் கீழே குதித்தான். வண்டி நின்றவுடனே, அது நிற்கவேண்டிய காரணம் என்ன என்று விசாரிப்பதற்காக உன் தாயார் .ன்னலைத் திறந்தாள்; உடனே அந்தச் சாரதி குடிவெறியுடனே வந்து, "வெற்றிலை பாக்குப் பை கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிக்கொண்டு வருகிறேன் அம்மா" என்று சொல்லிவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போனான்; அவன் போன பிற்பாடு, கிழக்கு ர.தா வழியாக வண்டி போகிற விவரம், உன் தாயாருக்குத் தெரிந்தது. உடனே வண்டியை விட்டுக் கீழே குதித்தாள். அந்த வண்டியில் ஒரு பக்கத்தில் "நீலகண்ட முதலி" என்று பெயர் வரையப்பட்டிருந்ததாலும், அந்தக் கிழக்கு ர.தா அவனுடைய ஊருக்குப் போகிற மார்க்கமென்பது உன் தாயாருக்குத் தெரியுமானதாலும் சகலமும் அவனுடைய கபட நாடகமென்று உன் தாயார் ஒரு நிமி.த்தில் கண்டுபிடித்துக் கொண்டாள். அவள் சிறு பருவ முதல், குதிரை கட்டின வண்டிகளில் ஏறி, சில சமயங்களில் சாரத்தியம் செய்வதும் அவளுக்குப் பழக்கமாயிருந்தபடியால், அவள் ஒரு நிமி.த்தில் அந்த வண்டியில் சாரதி .தானத்தில் ஏறி உட்கார்ந்து குதிரைகளை மேற்கே திருப்பி, வாயு கதியாக வண்டியை நடத்த ஆரம்பித்தாள், பையைத் தேடிப் போன சாரதி, வண்டி திரும்பி வருவதைக் கண்டு குடி மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுந்துகொண்டு, வண்டியை மறிக்க ஓடிவந்தான். அவன் கிட்ட நெருங்காதபடி உன் தாயார் குதிரைச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடித்தாள்; அந்த அடியும் அவனுடைய குடியும் அவனைக் கீழே தள்ளி விட்டன; உன் தாயார் மனோகதியும் பிந்தும்படி மங்கனூர்ச் சாலை மார்க்கமாக வண்டியை நடத்திக் கொண்டு போகும்போது, நீலகண்ட முதலி, ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வண்டியைத் தொடர்ந்து வந்து வண்டிக்கு முன்னாலே மறித்தான்; வண்டியிலே பூட்டிய இரண்டு பரிகளும் நிற்காமல், நீலகண்ட முதலி மேலே தாவிப் பாய்ந்து ஓடின படியால், அவன் ஏறிய குதிரை வெகுண்டு மார்க்கத்தை விட்டுத் தாண்டிக் குதித்து , அவனை ஒரு படு குழியில் வீழ்த்திவிட்டுப் ப.ிபோல் பறந்து போய்விட்டது. இவ்வண்ணமாக உன் தாயார் தெய்வானுகூலத்தால் தப்பி மங்கனூர் போய்ச் சேர்ந்தாள்; அவ்விடத்தில் அவளுடைய தகப்பனார், அவளைக் கண்டவுடனே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டு "அவள் ஊரை விட்டு இவ்வளவு சடுதியில் வந்ததற்குக் காரணம் என்ன" என்று கேட்க, அவள் நடந்த காரியங்களையெல்லாம் ஆதியந்தமாய்த் தெரிவித்தாள். அதைக் கேட்டவுடனே, அவள் தகப்பனாருக்கும் மற்றவர்களுக்கும் நீலகண்ட முதலி மீது பிரமாதமான கோபம் உண்டாகி, அவனைச் சி.ிக்கத் தொடங்கினார்கள். எப்படி என்றால், தம்முடைய .ாதியார் எல்லாரும் ஏகமாய்க் கூட்டங்கூடி, அவனைச் சாதிப் பிர.டம் ஆக்கி, சுபாசுபங்கள் இல்லாமலும், நீர் நெருப்பு இல்லாமலும் விலக்கி விட்டார்கள். அவனுக்கு .ாதியார் ஒருவரும் பெண் கொடாதபடியால், அவன் இன்னமும் பிரமசாரியாகவே இருக்கிறான். பிள்ளையாருடைய பிரமசாரித்துவம் நீங்கினாலும், அவனுடைய பிரமசாரித்துவம் நீங்காதென்பது நிச்சயம். மேற்படி சங்கதி நடந்த பிறகுதான் உன் தாயாரை, உன் தந்தையாகிய என் மைந்தனுக்கு விவாகம் செய்துவைத்தது. உன் தாயாரைப் போலச் சர்வ குணாலங்கிருத பூ.ணிகள் உலகத்தில் இருப்பார்களா? அவள் எனக்குச் செய்யும் அன்பும், ஆதரவும், வணக்கமும், மரியாதையும் யாருக்காவது வருமா? எனக்கு நூறு புத்திரிகள் இருந்தாலும் இந்த விருத்தாம்பியக் காலத்தில் என் மருமகளைப் போல என்னை ஆதரிப்பார்களா? நான் வியாதியாய் இருக்கும் காலங்களில் எனக்குப் பத்திய பாகங்கள் செய்து கொடுத்து, உன் தாயாரே எனக்குச் சகல பணிவிடைகளையும் செய்து வருகிறாள். அவள் இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும். அவள் அன்னமில்லாதவர்களுக்கு அன்னமும், வ.திரமில்லாதவர்களுக்கு வ.திரமும் கொடுத்து எத்தனையோ ஏழைக் குடும்பங்களைக் காப்பாற்றி வருகிறாள். அவளுக்காகவே தான் மழை பெய்கிறது; அவளுக்காகவே வெயில் எரிகிறது. அவளுக்குக் கடவுள் நீடிய ஆயுசைக் கொடுத்து உனக்கும் எனக்கும் என்னுடைய மகனுக்கும் மற்ற ஏழைகளுக்கும் அவள் ஆதரவாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்பது என்னுடைய இடைவிடா பிரார்த்தனையா யிருக்கிறது" என்றார்கள். 'மாமியார் மெச்சிய மருமகள் இல்லை' என்கிற பழமொழிக்கு விரோதமாக என் தாயாருடைய சுகுணப் பிரபாவங்களை என் பாட்டியார் எடுத்துப் பிர.தாபித்தவுடனே இப்படிப் பட்ட புண்ணியவதி வயிற்றிலே பிறந்தோமே என்கிற சந்தோ.த்தினால் நான் புளகாங்கிதமாகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன். என்னுடைய மாதாவை உலக மாதாவென்றே நினைத்து, நித்தியமும் நான் பக்தி பண்ணிக் கொண்டு வந்தேன்.

------------

அத்தியாயம் - 5

எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் எண்ணிகையில்லாத பல விரு.ங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டமும், பூஞ்சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இருந்தன. நாங்கள் படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் இந்திரனுடைய கற்பகச் சோலைக்குச் சமானமான அந்தச் சிங்காரத் தோட்டத்தில் விளையாடுகிறது வழக்கம். "அவப் பொழுதிலும் தவப்பொழுது" என்பது போல் விளையாடுகிற நேரத்தையும் ஞானாம்பாள் தர்ம வி.யங்களில் உபயோகப் படுத்தி வருவாள். எப்படியென்றால், சிங்காரத் தோட்டத்தில் பழுத்திருக்கிற மாங்கனிகள், தேங்கனிகள், வாழைக்கனிகள், பலாக்கனிகள், விளாங்கனிகள் முதலியவைகளைப் பறித்து ஏழைகளுக்குக் கொடுத்து வருவாள். அந்தத் தோட்டத்தில் இருக்கிற ப.ிகளை, ஒருவரும் பிடிக்காமலும், உபத்திரவஞ் செய்யாமலும் ஞானாம்பாள் பாதுகாத்து வந்தபடியால், அவைகள் மென்மேலும் பெருகி அவளைக் கண்டவுடனே ஆடிப்பாடி குதித்து விளையாடி மகோற்சவங் கொண்டாடும். சாதுக்களைக் கண்டால் சந்தோ.ப் படாதவர்கள் யார்?

ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மரத்தில் அபூர்வமாய்ப் பழுத்திருந்த இரண்டு பழங்களை, ஞானாம்பாள் பறித்துக் கொண்டு வந்து என் முன்பாகவும் கனகசபை முன்பாகவும் வைத்துப் புசிக்கும்படி சொன்னாள். நான் கணக்கில் என் வல்லமையைக் காட்டுவதற்காக, இவளைப் பார்த்து "இவைகள் எத்தனை பழங்கள்?" என்றேன். அவள் "இரண்டு பழம்" என்றாள். நான் .மூன்று பழம். என்றேன்; அவள் .எப்படி?. என்று கேட்க, அந்தப் பழங்களை வரிசையாக வைத்து எண்ணும்படி சொன்னேன்; அவள் "ஒன்று, இரண்டு" என்று எண்ணினாள்; உடனே "ஒன்றும் இரண்டும் மூன்றல்லவா?' என்றேன். அவள் "ஆம் ஆம்" என்று கனகசபையைப் பார்த்து "அண்ணா! நீங்கள் ஒரு பழம் தின்னுங்கள். நான் ஒரு பழம் எடுத்து க் கொள்கிறேன். அத்தான் ஒரு பழம் அருந்தட்டும்" என்று சொல்லி, அவள் ஒரு பழத்தைத் தின்றுவிட்டாள்; கனகசபை ஒரு பழத்தை விழுங்கிவிட்டான்; நான் ஒன்றுமில்லாமல் வெறும் வாயைச் சப்பினேன். இவ்வகையாக என் கணக்கின் சாமர்த்தியத்தைக் காட்டப் போய்க் கனியை இழந்து ஏமாறினேன்.

கனகசபை நற்குணமும், நற்செய்கையும் உடையவனாயும், விவேக விற்பன்னனாயும், சர்வ .ன ரஞ்சகனாயும் இருந்தான். அவனுடைய புத்திநுட்பந் தெரியும் பொருட்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு காரியத்தைத் தெரிவிக்கிறேன். அஃதென்னவெனில், சென்னைபுரி கவர்னர் தேச சஞ்சாரஞ் செய்துகொண்டு வருகையில், சத்தியபுரியில் கூடாரம் அடித்துக் கொண்டு அவருடைய பரிவாரங்களுடன் சில நாள் தங்கி இருந்தார். அப்போது ஒரு நாள் அவர் மட்டுந் தனியாய்ப் புறப்பட்டு வாகனாரூடராய், ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது அவருக்கு மறுபடியும் கூடாரத்துக்குப் போக மார்க்கந் தெரியாமையினால், வழியில் நின்று கொண்டிருந்த கனகசபையைக் கூப்பிட்டுக் கூடாரத்துக்குப் போகிற மார்க்கத்தைக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். அவர், கவர்னர் என்பது கனகசபைக்குத் தெரியாதாகையால் :நான் அவ்வளவு தூரம் எப்படி நடந்துவந்து வழி காட்டுவேன்?" என்று ஆே.பித்தான். உடனே கவர்னர், தம்முடன் கூட வண்டியில் ஏறிக் கொள்ளும்படி சொன்னதால், அந்தப் பிரகாரம் கனகசபையும் வண்டியில் ஏறி வழி காட்டிக் கொண்டு போனான். அவர்கள் வழியிற் போகும்போது கனகசபை கவர்னரை நோக்கி, "ஐயா! கவர்னர் அவர்களுடைய கூடாரத்தில் பல துரைமார்கள் இருப்பார்களே! அவர்களுக்குள் கவர்னர் இன்னாரென்று தெரிந்து கொள்வதற்கு விசே. அடையாளம் என்ன?" என்று கேட்க, கவர்னர் கனகசபையைப் பார்த்து, "கவர்னரைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றி நின்றுகொண்டு வணங்குவார்கள்; கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார். இது தான் அடையாளம்" என்றார். இவ்வகையாகச் சம்பா.ித்துக் கொண்டு அவர்கள் கூடாரத்தைச் சமீபித்தவுடன், கூடாரத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழட்டிக் கொண்டு கவர்னர் வருகிற வண்டியை நோக்கி வந்தனஞ் செய்தார்கள். அப்போது கவர்னர் கனசபையைப் பார்த்து "இப்போது கவர்னர் இன்னாரென்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்க, உடனே கனகசபை "நீங்களாவது கவர்னராயிருக்க வேண்டும். அல்லது நானாவது கவர்னராயிருக்க வேண்டும். ஏனென்றால் நாமிருவர் மட்டும் உட்கார்ந்தபடி இருக்கிறோம்; நம்மைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றிக் கொண்டு, நமக்கு வந்தனம் செய்கிறார்கள்" என்றான். சமயோ.ிதமாகவும் சாதுரியமாகவும் கனகசபை சொன்ன மறுமொழியைக் கவர்னர் வியந்து கொண்டு, அவனுக்குக் கனகாபிே.கம் செய்து அனுப்பினார்.

எப்போதும் விநோத சல்லாபப் பிரியனான கனகசபை சில நாளாக நன்றாய் விளையாடாமலும், பேசாமலும், துக்காக்கிராந்தனாய் மௌனஞ் சாதித்தான். "அதற்குக் காரணம் என்ன?" வென்று அவனை நான் பலமுறை கேட்டும் அவன் தக்க மறுமொழி சொல்லாமல் மழுப்பிவிட்டான். ஒரு நாள், சிங்காரத் தோட்டத்தில் கடைசியில் இருக்கிற ஒரு பெரிய தாமரைத் தடாகத்தின் ஓரத்தில், நானும் ஞானாம்பாளும் கனகசபையும் விளையாடிக் கொண்டிருந்த போது கனகசபை கால் தவறி அந்தத் தடாகத்தில் விழுந்து விட்டான்; அவன் நீந்தத் தெரியாதவனானதால், தன்னீரில் முழுகுகிறதும் கிளம்புகிறதுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான். நானும் நீந்தத் தெரியாதவனானதால் இன்னது செய்கிறது என்று தோன்றாமல் மலைத்துப் போய், .தம்பாகாரமாய் நின்றுவிட்டேன். ஞானாம்பாள் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிப் பார்த்தும் உதவி செய்யத்தக்கவர்கள் ஒருவரும் அகப்பட வில்லை; எங்கள் வீடு வெகு தூரமானதால் அங்கே போய் யாரையாவது அழைத்துக் கொண்டு வருவதும் அசாத்தியமாயிருந்தது. இதை யெல்லாம் ஞானாம்பாள் ஒரு .ணப் பொழுதில் ஆரோகித்துக் கொண்டு, சிங்காரத் தோட்டத்தின் கடைசியிலிருக்கிற திட்டி வாசலைத் திறந்து கொண்டு, வெளியே ஓடினாள். அவ்விடத்திலும் ஒருவரும் சமீபத்தில் இல்லையால் தூரத்தில் ர.தாவில் நடந்து கொண்டிருந்த ஒரு சந்நியாசியை "ஐயா! ஐயா!" வென்று கூப்பிட்டுக் கொண்டு, மான் போலவும், மயில் போலவும் அதி வேகமாக ஓடினாள். அவள் தனிமையாக ஓடுகிறதைப் பார்த்து நானுங் கூட ஓடினேன். ஞானாம்பாள் சந்நியாசியாரை நோக்கி, "ஐயா! ஒரு சிறுவன், குளத்தில் விழுந்து விட்டான்; தாங்கள் தயவு செய்து வந்து அவனைக் கரையேற்ற வேண்டும்" என்று மிகவும் வணக்கத்துடனே பிரார்த்தித்தாள். அந்தச் சந்நியாசியாரும் உடனே திரும்பி எங்களுடன் ஓடி வந்தார். அவர் ஓடி வரும்போதே ஞானாம்பாளைப் பார்த்து, "அந்தப் பிள்ளையை நான் கரையேற்றினால், நீ காதில் போட்டிருக்கிற வயிர ஓலைகள் முதலிய நகைகளைக் கொடுப்பாயா?" என, அவள் "அப்படியே தருகிறேன்" என்றாள். நாங்கள் வரப் பின்னுஞ் சற்று நேரம் தாமதப் பட்டிருக்குமானால், கனகசபை .லத்தில் மூழ்கி இறந்து போயிருப்பானென்பது நி..ந்தேகம். ஞானாம்பாளுடைய அதி தீவிர முயற்சியால் அவன் பிழைத்தான். எப்படியென்றால், சந்நியாசியார் ஒரு நிமி.த்தில் தடாகத்தில் குதித்துக் கனகசபையைக் கரையேற்றி விட்டார். அவன் .லத்தைக் குடித்து மூர்ச்சையா யிருந்ததால், அவன் குடித்த .லம் வெளிப்படும்படி, சந்நியாசியார் தகுந்த பக்குவங்கள் செய்து அவன் பிராணனை ர.ித்தார். உடனே ஞானாம்பாள் தன் காதில் இருந்த பூ.ணங்களைக் கழற்ற ஆரம்பித்தாள். சந்நியாசியார் "வேண்டாம்! வேண்டாம்!" என்று கையமர்த்தி, ஞானாம்பாளைப் பார்த்து "உன்னுடைய மனோதர்மத்தை அறிவதற்காக அந்த நகைகளைக் கேட்டேன். அவைகளை நீ கொடுத்தாலும் நான் அங்கீகரிப்பேனா? ஒரு பிராணனை ர.ித்த புண்ணியம் எனக்குப் போதாதா? எனக்கு இயற்கையாக இல்லாவிட்டாலும் உன்னைப் பார்த்த பிறகாகிலும் எனக்குத் தர்ம சிந்தனை இல்லாமற் போகுமா? இவ்வளவு சிறு பிராயத்தில் ஒரு பிராணனைக் காப்பாற்ற நீ எவ்வளவோ முயற்சி செய்தாயே, உனக்குச் சமானமான புண்ணியவதிகள் உலகத்தில் இருப்பார்களா? இம்மையிலும் மறுமையிலும் சகல பாக்கியங்களையும் கடவுள் உனக்குத் தந்தருள்வாராக" என்று ஆசீர்வாதஞ் செய்து "சந்நியாசி பயணம் திண்ணையில்" என்பது போல் ஒரு நிமி.த்தில் போய் விட்டார். நாங்கள் ஒன்றும் பேச நாவெழாமல் பிரமித்துப் போய் நின்றோம். "பதினாயிரம் பொன் பெற்ற ஆபரணங்களைக் கொடுக்கச் சம்மதித்த ஞானாம்பாளுடைய குணம் பெரிதா? அவைகளை வேண்டாமென்று நிராகரித்த சந்நியாசியாருடைய குணம் பெரிதா?" வென்று நான் சற்று நேரம் ஆலோசித்து, ஞானாம்பாளுடைய குணமே விசே.மென்று தெரிந்து கொண்டேன் இதுவரையில் பேசச் சக்தி இல்லாமல் களைத்துப் போயிருந்த கனகசபைக்குக் கொஞ்சம் திடம் உண்டாகி, அவன் எங்களைப் பார்த்துத் "தாய் தகப்பன் இல்லாமல் நிராதரவாயிருக்கிற எனக்கு இவ்வளவு பெரிய உபகாரஞ் செய்து பிராணனைப் பிரதி.டை செய்தீர்களே! அதற்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்?" என்று பல விதமாக உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினான். எனக்கு ஆச்சரியம் உண்டாகி, "உனக்குத் தாய் தந்தைகள் இருக்கும்போது, தாய் தகப்பனற்ற பிள்ளையென்று நீ சொன்னதற்குக் காரணமென்ன?" என்று நான் வினவ, கனகசபை கண்ணீர் விட்டு அழுதுகொண்டு சொல்லுகிறான். .என் பிரியமான அண்ணனே! தங்கையே! என் பிராணனைக் காப்பாற்றின உங்களுக்கு இனிமேல் நான் உண்மை சொல்லாமலிருக்கலாமா? உங்களுடைய முந்தின ஆசான் ஆகிய சாந்தலிங்கம் பிள்ளையையும் அவருடைய பத்தினியையுமே, நான் தந்தை தாய் என்று நினைத்திருந்தேன். அவர் சில நாளைக்கு முன் கடின வியாதியா யிருந்தபோது இனிமேல் .ீவதசைக்கு ஏதுவில்லையென்று நினைத்துக் கொண்டு, என்னை ரகசியத்தில் கூப்பிட்டு "அப்பா! குழந்தாய்! உனக்குத் தெரியாமல் இந் நாள் மட்டும் நான் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை உனக்கு வெளிப் படுத்துகிறேன். அஃதென்னவென்றால், நானும் என் பெண்சாதியும் உன்னைப் பெற்றவர்கள் அல்ல; இதற்குப் பன்னிரண்டு வரு.த்துக்கு முன் நீ ஆறு மாசக் குழந்தையாயிருக்கும்போது ஒருவன் உன்னைக் கொண்டுவந்து பிள்ளைக்குப் பால் வேண்டும் என்று கேட்டான். அதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் என் பெண்சாதிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துபோய். பால் வற்றாமல் இருந்ததால், அவள் உன்னை வாங்கி மார்பிலே வைத்து அணைத்தாள்; உடனே அவளுக்குப் பால் சுரந்து நீ சம்பூரணமாகப் பால் குடித்தாய். உன்னைக் கொண்டு வந்தவன், மறுபடியும் உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு அவனால் கூடிய மட்டும் பிரயாசைப் பட்டும், நீ என் பெண்சாதியை விடாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாய்; அவன் "இந்தப் பிள்ளை உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் போய் விட்டான். இப்படிப்பட்ட அதி சௌந்தரியமான பிள்ளை, நமக்குக் கிடைத்ததே என்கிற ஆநந்தத்தினால், நீ யாருடைய பிள்ளையென்று அவனை விசாரியாமல் உன் மேலே நோக்கமா யிருந்துவிட்டோம். ஆனால் அவன் கேவலம் சாமானியன் ஆனதால், அவனுக்கு நீ பிள்ளை அல்லவென்று நிச்சயம்; அது முதல் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தோம்; நீயும் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகச் சகல விதத்திலும் திருப்தியாக நடந்து வந்தாய்; இனி நான் பிழைப்பேனென்கிற நம்பிக்கை இல்லாமையினாலும், சில விசை உன் மாதா பிதாக்கள் உன்னைத் தேடி வந்தால் உனக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டியதானதினாலும், இந்தக் காரியத்தை உனக்குத் தெரிவித்தேன். இப்போது நம்மை ஆதரிக்கிற சுந்தரத்தண்ணியாரும், அவருடைய பர்த்தாவும், உன்னையும் உன்னுடைய செவிலித்தாயையும் கைவிடார்கள். நீ மனம் வருந்தாதே" என்றார்.

"பிற்பாடு ஏதோ கடவுளுடைய அனுக்ர.த்தால், என்னை வளர்த்த பிதாவாகிய சாந்தலிங்கம் பிள்ளை, ஆரோக்யம் அடைந்து பிழைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமே! அவர் சொன்ன விருத்தாந்தத்தைக் கேட்டது முதல் எனக்கு உண்டாகியிருக்கிற கிலேசமும் துக்கமும் கடவுளுக்குத் தான் தெரியும். அந்தக் காரணத்தைப் பற்றித் தான் சில நாளாக நான் சரியாய் விளையாடாமலும் பேசாமலும் இருந்தேன். என்னைப் போல் நிர்ப்பாக்கியர்கள் உலகத்தில் இருப்பார்களா? தாய் தகப்பன் இன்னாரென்று தெரியாத பிள்ளைகளும் இருக்குமா? பால் குடிக்கிற குழந்தையைக் கைவிடுகிற தாய் தந்தைமார்களும் பூமியில் இருப்பார்களா? லோகாபவாதத்தை யார் தடுக்கக் கூடும்? தடாகத்தில் விழுந்த என்னைக் கரையேற்றி ஏன் என்னைப் பழிக்கும் நிந்தைக்கும் ஆளாக்கினீர்கள்? நான் அப்போதே இறந்து போயிருந்தால் என்னுடைய துக்கமும் அவமானமும் என்னுடன் இறந்துபோயிருக்குமே" என்று சொல்லிக் கனகசபை தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டு அழுதான். அவனுடைய துக்கத்தைப் பார்த்து, நானும் ஞானாம்பாளும் கூட அழுதோம். பிற்பாடு எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, எங்களாலே கூடிய வரையில் அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியும் அவன் மனந் தேறவில்லை. அவனுடைய மனோ வியாகூலத்தால், அவன் நாளுக்கு நாள் துரும்பு போல் ஆனான். அவனுடைய சங்கதியை வெளிப் படுத்தினால், அவனுக்கு அவமானம் உண்டாகும் என்று நினைத்து, அதை நாங்கள் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் தாயார் மட்டும், அந்த ரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு, கனகசபையிடத்தில் அத்தியந்த கிருபையும் அன்பும் பாராட்டி வந்தார்கள்.

---------

அத்தியாயம் -6

இவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்பு, ஒரு நாள் நானும் ஞானாம்பாளும், கனகசபையும் தெருத் திண்ணையில் வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அநேக ஆனைகளும், குதிரைகளும், வண்டிகளும், கொடிகளும், குடைகளும், காலாட்களும் நானாவித வாத்திய முழக்கத்துடன் தெருவில் வந்து எங்கள் வீட்டுக்கு எதிரே நின்றன. அவைகளின் மத்தியில், நான்கு குதிரைகள் கட்டின சொர்ணமயமான ரதத்திலிருந்து ரா. வடிவான ஒரு புரு.னும், .திரீயும் இறங்கினார்கள். தடாகத்தில் விழுந்தபோது கரையேற்றி விட்ட சந்நியாசியாரும் அவர்களுக்கு முன்னே வந்து கனகசபையைக் கையாலே தொட்டுக் காட்டினார். உடனே மேற்படி ரதத்திலிருந்து இறங்கின அந்த ம.ா புரு.ன். கனகசபையைத் தழுவி மார்போடு அணைத்துக் கொண்டு "என் மகனே! என் கண்மணியே! என் குலதிலகமே! இந்நாள் வரைக்கும் உன்னைப் பார்க்கக் கொடுத்து வைக்காமற் போனேனே! என்ன பாவமோ உன்னைப் பிரிந்திருந்தேனே! இப்போதாவது உன்னைக் காணாமல் கண்டேனே! இனி மேல் என்னைப் போலே பாக்கியசாலிகள் உண்டா?" என்று சொல்லி, தேகபரவசமாய் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். அவருடன் வந்த .திரீயும் கனகசபையைக் கட்டித் தழுவிக் கொண்டு "மகனே! மகனே!" என்று பிரலாபித்தாள். பிற்பாடு அந்த ம.ாபுரு.ன் ஞானாம்பாளை நோக்கி "ஓ! பாக்கியவதியே! .திரீ ரத்னமே! குண பூ.ணியே! நீயே தர்மாவதாரம்! உனக்குச் சமானமான குணவதிகள் இந்த உலகத்தில் இருப்பார்களா? தடாகத்தில் விழுந்த என் புத்திரனை நீ அல்லவோ ர.ித்தாய்? உன்னால் அல்லவோ அவனைக் காணும்படியான பாக்கியம் பெற்றேன்!" என்று சொல்லித் துதித்தார்.

இப்படியாக நிகழ்ந்த அதிசயங்களைக் கேள்விப் பட்டு, எங்கள் தாய் தந்தைமார்கள் சுற்றத்தார் யாவரும் வந்து சூழ்ந்து கொண்டு அவருக்கும், அவருடைய பத்தினிக்கும் தகுந்த ஆசனங்கள் கொடுத்து வீற்றிருக்கச் செய்தார்கள். அவர்கள் இன்னாரென்றும் அவர்களிடத்தில் என்னது பேசுகிறதென்றுந் தெரியாமல் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் எங்களை நோக்கி, "ஓ! புண்ணியவான்களே! புண்ணியவதிகளே! நீங்கள் இந்நாள் மட்டும் என் மகனுக்குச் செய்து வந்த உபகாரங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நான் இன்னானென்றும் இந்தப் பிள்ளையை நான் பிரிந்திருந்த காரணத்தையும் நீங்கள் அறிய விரும்புவீர்களாதலால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதிக செல்வமும் சிறப்பும் பொருந்திய ஆதியூர் பாளையப்பட்டுக்கு நான் அதிபதி. நாங்கள் பூர்வீக அரசர்களுக்கு முடியெடுத்து வைக்கிற வேளாளர்களானதால், எங்களுக்கு அநேக கிராமங்களும் பூமிகளும் தானமாய்க் கிடைத்து, சர்வ சுதந்திரமாக அநுபவித்து வருகிறோம். என்னுடைய தகப்பனார் ஆதிமூலம் பிள்ளைக்கு நானும் என் தம்பியாகிய தெய்வநாயகம் பிள்ளையும் புத்திரர்கள்; என் பேர் தேவரா.ப் பிள்ளை; எங்கள் குடும்பத்தில் ே..ட புத்திரர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் பட்டம் ஆகிறதே தவிர, கனி.டர்களுக்குப் பட்டம் ஆகிறதில்லை; ஆனால் ே..டர்களுக்குச் சந்ததி இல்லாவிட்டால், கனி.டர்களுக்குப் பாத்தியம் உண்டாகும்; நான் மூத்தவன் ஆனதால் எனக்குப் பட்டாபிே.கம் ஆகி, என் தம்பி என்னுடைய சம்ர.ணையிலிருந்து வந்தான்; இதற்குப் பன்னிரண்டு வரு.த்துக்கு முன், இந்தக் குழந்தையை என் பத்தினி பிரசவித்தாள்; ஆறு மாசத்துக் குழந்தையாயிருக்கும்போது எனக்குக் குரூரமான வியாதி கண்டு, எங்கள் குடும்ப வைத்தியர்கள் பலர் ஔ.தம் கொடுத்தும் சௌக்கியப்பட வில்லை; இங்கிலீ. டாக்டர்கள் மருந்து கொடுத்துக் கொஞ்சம் சௌக்கியமான உடனே, நான் தேச யாத்திரை செய்தால், எனக்கு முழுதும் சௌக்கியமாகுமென்று வற்புறுத்திச் சொன்னார்கள்; இந்தக் குழந்தை அதி பால்யமாயிருந்ததால் அதை நாங்கள் கூடக் கொண்டுபோகாமல், என் தம்பி வசத்தில் ஒப்புவித்துப் பாளையத்தைச் சேர்ந்த காரியங்களையும் அவனே பார்க்கும்படி திட்டஞ் செய்து, நானும் என் பெண்.ாதியும் பரிவாரங்களும் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டோம். பங்காளம் பம்பாய் முதலான இடங்களெல்லாம் சுற்றிக் கொண்டு நாங்கள் திரும்பிவர ஆறுமாசம் சென்றது; நாங்கள் பங்காளத்தில் இருக்கும்போது, எங்கள் தம்பி யிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தங் கண்டு இறந்து போனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும் பிள்ளை வி.யத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பியிடத்தில் இருந்த விசுவாசத்தினால் அவள் சந்தேகப்படுவது சரியல்ல என்று கண்டித்தேன்; நாங்கள் ஊருக்கு வந்த பிறகு பிள்ளை இறந்தது வா.தவமென்று சகலரும் பிர.தாபித்து வந்தபடியால், என் மனையாளுடைய சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது.

பிற்பாடு சீமாமூலகாரியங்களை நானே வகித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன். என் தம்பி சில நாள் வியாதியாயிருந்து, ஒரு மாசத்துக்குமுன் தேக வியோகமானான். அவன் இறந்த விசனத்தால் அவன் பிரேதத்தின் மேல் விழுந்து புலம்பி அழுதேன். அப்போது அவன் இடுப்பிலிருந்து ஒரு கடிதம் வெளிப்பட்டது; அது என் பேரால் மேல் விலாசம் எழுதப் பட்டு, முத்திரிக்கப்பட்டிருந்த படியால், நான் தனியாக ஒரு அறைக்குள்ளே போய், அதனை வாசிக்கத் தொடங்கினேன்; அது வருமாறு:

"ஐயோ! அண்ணா! நான் உங்களுக்குப் பரம சத்துருவே தவிரத் தம்பியல்ல; தாங்கள் பங்காளத்திலிருந்தபோது தங்களுடைய பிள்ளை வியாதியால் இறந்து போனதாக நான் தங்களுக்கு எழுதினது சுத்த அபத்தம். தங்களுக்குப் பிறகு எனக்குப் பட்டம் நிலைக்க வேண்டியதற்காகத் தாங்கள் ஊரில் இல்லாத காலத்தில், தங்களுடைய பிள்ளையை எப்படியாவது தொலைத்துவிட வேணுமென்று என் பிரிய நேசனாகிய முத்துவீரனுக்குச் சொன்னேன்; அவன் அப்படிச் செய்யக் கூடாதென்று, எனக்குப் பல வகையில் போதித்தான்; நான் பிடிவாதஞ் செய்ததனால், அவன் பிள்ளையை வாங்கிக் கொண்டு "உன் மனதுப்படி செய்கிறேன்" என்று சொல்லிப் போய்விட்டான்; அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தவளுடைய பிள்ளை சுழி மாந்தத்தினால் இறந்து போனதால், அவளைப் பொருள் மூலம் .வாதீனப் படுத்திக்கொண்டு, அவள் பிள்ளையைத் தங்கள் பிள்ளையென்று பேர் பண்ணி, சகலரும் அறிய இராக் காலத்தில் அந்தப் பிள்ளையைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கஞ் செய்தோம். இந்த ரகசியம் எனக்கும் அந்தப் பாற்காரிக்கும் அவளுடைய புரு.னுக்கும் மட்டும் தெரியும். தங்களுடைய புத்திரனைக் கொண்டு போன முத்துவீரனை வெகு காலமாக நான் பார்க்கவில்லை; அவன் உலகத்தைத் துறந்து சந்நியாசியாகப் போனதாகக் கேள்விப்பட்டேன்; அவன் தங்கள் பிள்ளையைக் கொலை செய்திருப்பானென்றே எண்ணியிருந்தேன். முந்தாநாள் வந்த சந்நியாசி, தங்கள் பிள்ளையைக் கொலை செய்யவில்லையென்றும், சத்தியபுரியில் சாந்தலிங்கம் பிள்ளை வீட்டில் அந்தப் பிள்ளை வளருவதாகவுஞ் சொன்னான்; அந்தச் சந்நியாசியை இங்கே இருக்கும்படி சொல்லியிருக்கிறேன்; அவனை விசாரித்தால் ஆதியோடு அந்தமாகச் சகல சங்கதிகளும் விசிதமாகும்; தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்காக என் மனச் சா.ி எனக்குச் செய்த தண்டனை சாமானியம் அல்ல; என் வியாதிக்கும் மரணத்திற்கும் காரணம் என் மனச் சா.ியேயன்றி வேறல்ல. இனி எழுத எனக்குச் சக்தி இல்லை; சாகப் போகிற என்மேலே கோபம் வைக்க வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நான் வாசித்த உடனே ஒரு பக்கத்தில் பெரிய ஆச்சரியமும், ஒரு பக்கத்தில் என் கனி.டன் மேலே பிரதாபமான கோபமும் .னித்து, இன்னது செய்கிறதென்று தெரியாமல் சற்று நேரம் சித்திரம் போல அசைவற்றிருந்தேன். பிறகு பிள்ளை .ீவந்தனாயிருக்கிறானே, அவனைக் காணலாமென்கிற சந்தோ.ம் மேலிட்டு, சந்நியாசியார் வந்திருக்கிறாராவென்று விசாரித்தேன்; அவர் வந்திருக்கிறதாகக் கேள்விப்பட்டு அவரை ரகசியமாக அழைத்து, அவர் மூலமாகச் சகல சங்கதிகளையும் பரி.காரமாக அறிந்து கொண்டேன். என் தம்பியினுடைய உத்தரக்கிரியைகளெல்லாம் முடித்துக் கொண்டு நானும் என் பத்தினியும், பரிவாரங்களும் புறப்பட்டு வந்து, என் பிள்ளையையும் உங்களையும் கண்டேன்; ஆனந்தங் கொண்டேன். இப்படிப்பட்ட பிரமானந்தத்தை நான் பிறந்தது முதல் ஒருநாளும் அநுபவித்ததில்லை; ஆனால் இதுவெல்லாம் மெய் தானோ, அல்லது கனவோ என்கிற சந்தேகம் ஒன்று மத்தியில் போராடுகிறது; முந்தி நாம் பார்த்த காரியங்களைக் கனவில் காணுகிறதே யல்லாமல், பாராத காரியங்களைக் கனவில் காணக்கூடுமோ? இந்த ஊரையும், ரா. கிரு.ங்களுக்குச் சமானமாகிய உங்கள் கிரு.ங்களையும், அவைகளின் நானாவித அலங்காரங்களையும் மகா புண்ணியாத்துமாக்களான உங்களையும், இதற்குமுன் நான் ஒருநாளும் பாராதிருக்க இப்போது நான் பார்க்கிறபடியால் இவ்வளவும் கனவல்ல, உண்மையென்றே நிச்சயிக்கிறேன்." என்றார். பிறகு கனகசபையைச் சிறு பிள்ளை முதல் வளர்த்தவர் எங்கே என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு அவரை நோக்கி "ஐயா! உம்மைப் போல நல்லவர்கள் உண்டா? நாங்கள் பிள்ளையைப் பெற்ற கடமையே அல்லாமல், அவனுக்கு ஒரு நன்மையுஞ் செய்ததில்லை. நீர் எவ்வளவோ பாடுபட்டு அவனை அருமை பெருமையாக வளர்த்து அவனை மனு.னாக்கி விட்டீரே! என் கூடப் பிறந்த தம்பி என் பிள்ளையைக் கொலை செய்ய நினைத்தானே! ஒரு சம்பந்தமும் இல்லாத நீர் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகப் பிள்ளையை வளர்த்தீரே! உமக்கு இந்த உலகம் முழுமையும் கொடுத்தாலும், நீர் செய்த உபகாரத்துக்குத் தகுந்த பிரதிப் பிரயோ.னம் ஆகுமா?" என்று சொல்லி, பிறகு என் தாயார் தகப்பனார் பந்துக்கள் முதலிய ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியே .தோத்திரஞ் செய்யத் தொடங்கினார். அவர் செய்கிறதைப் பார்த்தால் உலக முடிகிறவரையில் உபசாரத்தை நிறுத்தமாட்டாரென்று தோன்றிற்று. என் தகப்பனாரும் ஞானாம்பாள் தகப்பனாரும் எழுந்து "போ.னத்துக்கு நேரமாகிறதே, கிருபை செய்ய வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். அவரும் அவருடைய பத்தினியாரும் "எங்களால் எல்லாரும் பசியாயிருக்கிறீர்களே" என்று சொல்லி உடனே எழுந்து .நானம், .பம் முதலிய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு ஒரே பந்தியாய் இ.டான்ன போ.னஞ் செய்தோம். மறு நாள் முதல் எங்கள் கிருகத்தில் அவர்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, பத்து நாள் வரையில் அவர்களுக்கு சோடசோபசாரங்களும் செய்தோம். துரும்பு போல் இளைத்திருந்த கனக சபை, தாய் தகப்பனைக் கண்ட சந்தோ.த்தினால் பாரித்துப் பூரித்து அவர்களுடன் வந்த யானைகளின் ஒன்று போல் ஆனான்.

எங்களைக் கூட அழைத்துக்கொண்டு போய்த் தகுந்த மரியாதைகள் செய்தனுப்ப வேண்டுமென்பது கனகசபையின் தகப்பனாருடைய அபேை.யா யிருந்தாலும், நாங்கள் அதற்குச் சம்மதிக்கமாட்டோமென்று தெரிந்துகொண்டு, அவர் எங்களைப் பார்த்து "நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாத பாக்கியசாலியாயிருக்கிறீர்கள்!`நீங்கள் செய்த பேருபகாரத்திற்குக் கடவுள் கிருபை செய்யவேண்டுமே யல்லாமல், என்னாலே செய்யக் கூடியது யாதொன்றுமில்லை; உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்யவேண்டுமென்று நான் நினைத்தால், என்னைப் போல் நன்றி கெட்டவர்கள் வேறொருவரும் இருக்க மாட்டார்கள்; ஏனென்றால், உங்களுக்கு, ஒரு துன்பம் வந்த காலத்தில் அல்லவே நான் உங்களுக்குச் சகாயம் செய்யவேண்டும்; ஆகையால், உங்களுக்குப் பிரதி உபகாரஞ் செய்ய நினைப்பது, உங்களுக்குத் துன்பம் வரவேண்டுமென்று பிரார்த்திப்பது போலாகுமானதால், நான் பிரதி உபகாரஞ் செய்ய நினைக்கமாட்டேன்" என்றார். அவர் பயணப்படுமுன்னுக்கு எங்கள் பாட்டியார் வந்து, "ஐயா! உங்கள் பிள்ளை என்னால் வெகுவாக அடிபட்டான்! அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாயிருக்கிறது" என்றார்கள். உடனே அவர் என் பாட்டியாரை நோக்கி "அவன் அடிபட்டது அவனுக்குப் பெரிய அநுகூலம். துன்பமே ஞானத்தின் பாடசாலை; துன்பப்படாதவன் ரா.ாங்கத்துக்கு யோக்கியனாக மாட்டான். தான் அடிபடாதவனா யிருந்தால், அடியினால் உண்டாகிற உபத்திரவம் இன்னதென்று தெரியாமல் தன்னுடைய பிரை.களை அடிக்கடி அடிக்கச் சொல்லுவான்; துன்பப்படாதவனுக்கு ஏழைகளுடைய வருத்தம் எப்படித் தெரியும்?" என்றார். அப்போது தான் அடியினால் உண்டாகிற பிரயோ.னம் இன்னதென்று எனக்குத் தெரிந்தது. பிற்பாடு அவரும் அவருடைய பத்தினியாரும் கனகசபையும் அவனை வளர்த்த தந்தை தாய்மார்களையும் அழைத்துக் கொண்டு எங்களிடத்தில் தனித் தனியே விடைபெற்றுக்கொண்டு பரிவாரங்களுடன் சென்றுவிட்டார்கள். கூடப் பிறந்த அன்புள்ள சகோதரன் போல நெடுங்காலம் என்னுடன் கூட இருந்து, சகல சுகதுக்கங்களுக்கும் உடந்தையாயிருந்த கனகசபையைப் பிரிந்தது, எனக்குப் பெரிய மனோதுக்கமும் வியாசங்கமுமாயிருந்தது. அவனுக்கு அதிபால்யத்தில் நேரிட்ட ஆபத்துகளை நீக்கி, அவனை அற்புதமாக வளர்ப்பித்த கடவுளது திருவருட் செயலை வியந்து .தோத்தரித்தேன்.

--------------

அத்தியாயம் - 7

நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் காலையில், வெளித் திண்ணையில் படித்துக்கொண்டு இருக்கும்போது, எனக்குப் பழக்கமான ஒரு ே.ாதிட சா.திரியார் வந்து "செலவுக்கு ஒன்றும் இல்லாமல் வருத்தப் படுகிறேன்; ஏதாவது கொடுக்கவேண்டும்" என்று கேட்டார். அப்போது கூட இருந்த எங்கள் உபாத்தியாயர், அவரைப் பார்த்து "சகலருக்கும் சா.திரஞ் சொல்லிப் பாக்கியத்தைக் கொடுக்கிற உமக்குக் க.டமுண்டா?" என்றார். உடனே சா.திரியாருக்கு ஆக்கிரோ.முண்டாகிச் சொல்லுகிறார்; "நாங்கள் உலகத்தை ர.ிக்கும்பொருட்டு தரித்திர வே.ம் பூண்டுகொண்டு திரிகிறோமே யல்லாமல், எங்களுக்கு ஒரு க.டமுண்டா? நாங்கள் கற்பக விருட்சத்தை வரச்சொன்னால் வராதா? காமதேனுவைக் கூப்பிட்டால், அது வந்து நாங்கள் சொன்னபடி கேளாதா? மகமேருகிரி எங்கள் .வாதீனமல்லவா?" என்றார். அப்போது அவ்விடத்தில் கட்டியிருந்த ஒரு வேட்டை நாய் சா.திரியாரைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருந்தது. அவர் அந்த நாயைப் பார்த்து "கரடி, புலி முதலிய து.ட மிருகங்களின் வாய்களை மந்திரத்தினாலே கட்டிவிடுகிற நான், இந்த நாயின் வாயைக் கட்டி, அது குலைக்காமலும் கடிக்காமலும் செய்ய மாட்டேனா? என்று கையை நீட்டிக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அந்த நாய்க்குக் கோபமுண்டாகி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஒரே பாய்ச்சலாய் சா.திரியார் மேலே பாய்ந்து அவர் தேகத்தைப் ப.ணஞ் செய்ய ஆரம்பித்தது. சா.திரியார் "ஐயையோ! போனேனே! போனேனே!" என்று கூவத் தலைப்பட்டார். உடனே எங்கள் உபாத்தியாயர் ஒரு கழியை எடுத்து க் கொண்டு நாயைத் துரத்திச் சா.திரியாரை விடுவித்து "மந்திரத்தினால் அந்த நாயின் வாயைக் கட்டி விடக்கூடாதா?" என்று சா.திரியாரைக் கேட்டார். அவர் "ஐயா! நாய் கடித்த உபத்திரவம் பெரிதாயிருக்கிறது; அதற்குச் சரியான பரிகாரஞ் செய்தால் உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார். உடனே எங்கள் ஆசிரியர் தகுந்த பக்குவஞ் செய்து வலியைச் சாந்தப் படுத்தினார்.

சா.திரியாருக்குச் சந்தோ.ம் உண்டாகிச் சொல்லுகிறார். எங்கள் வித்தையெல்லம் சுத்தப் பொய்; உலகத்தில் உதரநிமித்தம் பல பேர் பல வே.ங்கள் பூண்டுகொண்டு .ீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வே.ம் போட்டுக் கொண்டு திரிகிறேன்; என்னுடைய சொந்த வி.யத்தில் சா.திரம் பலிக்காமலிருக்கும்போது அன்னியர்கள் வி.யத்தில் கேட்கவும் வேண்டுமா? எனக்கு நாலு புத்திரிகள்; சா.திர சகுனங்கள் பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கலியாணஞ் செய்துக் கொடுத்தேன். அந்த நாலுபேரும் அமங்கலி யாய்விட்டார்கள். மந்திரங்கால் மதி முக்கால் என்பது போல என்னுடைய புத்தியைக் கொண்டு பிழைக்கிறேனே யல்லாது, சா.திரத்தைக் கொண்டு பிழைக்கவில்லை; சகலருக்கும் சுகமுந் துக்கமுங் கலந்து வருகிறபடியால், நானும் சுகத்தையும் துக்கத்தையுங் கலந்து சகலருக்கும் சா.திரஞ் சொல்லிக் கொண்டு வருகிறேன்; ஆனால், சுகத்தையே யாவரும் விரும்புகிறபடியால் சுகத்தையே அதிகமாகச் சொல்லி, யாவரையும் நான் சந்தோ.ப்படுத்துகிறது வழக்கம்; இப்போது காலம் விபரீதமாய்ப் போய்விட்டது.. நான் ஒருவனுக்கு யோகம் வருமென்று சொன்னால் அவனுக்குக் க.டம் சம்பவிக்கின்றது; சுபி. காலமென்று சொன்னால் துர்பி. காலமாய் முடிகின்றது; ஒரு கர்ப்ப .திரீயைப் பார்த்து, அவளுக்குப் பிள்ளை பிறக்குமென்று சொன்னாலும் அந்தக் கர்ப்பம் பொய்யாகி, மகோதரமாய் முடிகின்றது; கர்ப்பத்திலிருக்கிற பிள்ளை கூட என்னை ஒருதரம் மோசம் செய்துவிட்டது. எப்படியென்றால், நான் நெடுநாளாக ஆசிரதம் செய்து வந்த ஒரு பிரபு, என்னை அழைத்து கர்ப்பிணியா யிருக்கிற தன் மனைவிக்கு, என்ன குழந்தை பிறக்குமென்று கேட்டார். நான் ஆண் பெண் இரண்டில் ஒன்றுதானே பிறக்கவேண்டுமென்று நினைத்து, ஆண் குழந்தை பிறக்குமென்று அவரிடத்தில் தனிமையாகச் சொன்னேன் அவருக்குத் தெரியாமல் அவருடைய மனைவியிடத்திலே போய், பெண் குழந்தை பிறக்குமென்று அதி ரகசியமாகச் சொல்லி வைத்தேன். கடைசியாய்ப் பிறந்த குழந்தை ஆணுமல்லாமல், பெண்ணுமல்லாமல் அலியாயிருந்தது. சா.திர வி.யத்தில் சகலருக்கும் இருந்த நம்பிக்கையும், நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இனிமேல் இந்த தொழிலை விட்டுவிடுவதென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்துவிட்டபடியால், இனிமேல் சா.திரத்தைக் கட்டித் தூரத்தில் எறிந்துவிடச் சித்தமாயிருக்கிறேன்." என்றார். அவர் நிசம் சொன்னதற்காக, அவருக்குத் தகுந்தப் பிரயோசனஞ் செய்யவேண்டுமென்று எங்கள் போதகர் சொன்னதினாலே, அவருக்கு நானும் ஞானாம்பாளும் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினோம். இவ்விதமாக ே.ாசியர் காரியம் ஆசியமாக முடிந்தது; எனக்குச் சோதிட வி.யத்திலிருந்த பைத்தியமும் தீர்ந்தது.

சா.திரியார் போனபின்பு, உபாத்தியாயர் எங்களைப் பார்த்து "சோதிடம் பொய்யென்று, அந்தச் சா.திரியே ஒப்புக்கொள்வதால், இனிமேல் உங்களுக்கு வேறே சா.ியம் வேண்டுவதில்லை. இனிமேல் வரும் காரியங்கள் நமக்கு முந்தித் தெரியாதபடி, நம்முடைய நன்மைக்காகவே சுவாமி மறைத்து வைத்திருக்கிறார். இனிமேல் வருகிற துன்பம், நமக்குத் தெரியாமலிருப்பதால், அந்தத் துன்பம் வருகிற நிமி.ம் வரையில் நாம் துக்கமில்லாமலிருக்கிறோம். அது முந்தி நமக்குத் தெரிந்திருக்குமானால் முந்தியுந் துக்கம் பிந்தியுந் துக்கம்; எக்காலத்திலும் துக்கமாக முடியும் அல்லவா? அப்படி நன்மை வருகிறதும் நமக்கு முந்தித் தெரியாமலிருந்து வந்தால், நமக்கு அதிக சந்தோ.த்துக்கு இடமாகும். அப்படியில்லாமல் முன்னமே தெரிந்திருக்குமானால் சந்தோ.ம் மிகவும் குறைந்துபோகும். தீர்க்க தரிசனம் என்பதே, இப்போது உலகத்தில் இல்லை. அந்த மேலான வரத்தை எத்தனையோ புத்திமான்களும் இருக்க, அவர்களுக்குக் கொடாமல் இந்த சா.திரிகளைப் போலொத்த சர்வ மூடர்களுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும், கோணங்கிக்காரர்களுக்கும், குறத்திகள் முதலானவர்களுக்கும் சுவாமி கொடுத்திருப்பாரா? பின்னும் நமக்கு வருகிற நன்மை தீமைகள், நமக்குத் தெரியாமலிருக்க அசேதன .ந்துக்களாகிய பல்லிகளுக்கும் பட்சிகளுக்கும் தெரிந்து, அவைகள் நமக்குத் தெரியப்படுத்தக்கூடுமா?" என்று உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே, என்னைப் பிடித்திருந்த சா.திரப் பேய் பறந்தோடிவிட்டது.

எங்கள் கொல்லைக்குப் பின்புறத்தில் இருக்கிற சிங்காரத் தோட்டங்களின் மதிலுக்கு அப்பால், கொஞ்ச தூரத்தில் ஒரு பாழ் மண்டபமும், அதற்குப்பின் ஒரு வி.தாரமான காடும் இருந்தன. அந்தக் காட்டுக்கு அந்தப் பாழ்மண்டபத்தின் வழியாகத்தான் போகவேண்டும். சில காலத்துக்கு முன், அந்தப் பாழ் மண்டபத்தில் யாரோ ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு இறந்து போனதாகவும், அவன் பிசாசு ரூபமாகி அந்த மண்டபத்தில் வாசஞ் செய்வதாகவும், பின்னும் ஒரு சங்கிலிக் கறுப்பு ஒரு மரத்திலிருப்பதாகவும், எப்போதும் சங்கிலி ஓசை கேட்பதாகவும், அந்த மண்டபத்துக்குப் போன ஆடு மாடு முதலான .ீவ .ந்துக்கள் திரும்பி வராமல் பிசாசுகளுக்கு இரையாகி விடுவதாகவும் ஒரு வதந்தி பிறந்து, வெகு காலமாக அந்த மண்டபத்துக்காவது காட்டுக்காவது ஒருவரும் போக்குவரவு இல்லாமல் நின்றுவிட்டது. இராக் காலங்களில், அந்த இடத்தில் பயங்கரமான பல சப்தங்கள் கேட்கிறதும் உண்டு. உபாத்தியாயரிடத்தில் அதைப் பற்றித் தெரிவித்தேன்' அவர் "மனப் பேயே தவிர வேறு பேயில்லை; நீ என்னுடன் கூட வந்தால் காட்டுகிறேன்." என்றார். அவருடைய விவேகமும், தைரியமும் எனக்குத் தெரியுமாதலால் வேட்ட நாயையும் கையில் பிடித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து போனேன்; மண்டபம் சமீபித்தவுடனே, நான் பயப்படுவேனென்று அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். உபாத்தியாயர் கை முன்னே இழுக்கப் பயம் பின்னே இழுக்கக் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல, திகில் கொண்டு நிர்.ீவனாய் நடந்தேன். மண்டபத்துக்குள் நுழையும்போது நமனுடைய வாய்க்குள் நுழைவது போலிருந்தது; நாங்கள் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனே, கணக்கில்லாத பல பட்சிகள் "கா, கூ" என்று சப்தித்துக் கொண்டு புறப்பட்டன; அந்தப் பட்சிகளுடைய எச்சங்களால், மண்டபத்தில் கால் வைக்க இடமில்லாமல் துர்நாற்றம் எங்கள் குடலைப் பிடுங்க ஆரம்பித்தது; உடனே காட்டைப் பார்க்கிறதற்காக, மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம்; எங்களுக்கு முன் எங்கள் வேட்டை நாய் மிருக வாசனை பிடித்துக் கொண்டு, காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது; அதைக் கண்டவுடனே நரிகளும் ஓநாய்களும், காட்டுப் பூனை முதலான பல மிருகங்களும், நாலு பக்கங்களிலும் கத்திக்கொண்டு ஓடத் தலைப்பட்டன. நாங்கள் போகும்போது ஒரு ஓநாய், ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றுகொன்றிருந்தது. அந்த ஓநாய் மேல் எங்கள் வேட்டை நாய் பாய்ந்து பிடித்துக் கொண்டு, எங்களுக்குப் பாதகாணிக்கை கொண்டுவருவது போல், எங்கள் முன்பாக ஓடிவந்தது. உடனே உபாத்தியாயர், என்னை நோக்கிச் சொல்லுகிறார்:- "இந்தக் காட்டைப் பார்த்தால், உலகம் உண்டானது முதல் மனு. சஞ்சாரம் இல்லாதது போலத் தோன்றுகிறது. யாரோ ஒருவன் துர்மரணமாய் இறந்து போனானென்கிற பயப் பிராந்தியினால் வெகு காலமாக ஒருவரும் இவ்விடத்தில் சஞ்சரிக்காதபடியால், பட்சிகளும் பல மிருகங்களும் அந்த மண்டபத்தையும், காட்டையும் தங்கள் வாச.தலங்களாக ஆக்கிக் கொண்டன. அவைகளால் இரவில் உண்டாகிற சப்தங்களைப் பிசாசுகளுடைய சப்தங்களென்று மௌட்டியமாக நினைத்துக்கொண்டார்கள். இந்தக் கானகத்துக்குள்ளே பிரவேசிக்கிற ஆடுமாடுகளை மிருகங்கள் தின்றுவிடுவதை அறியாமல், பிசாசுகள் தின்றுவிடுவதாக நினைத்தார்கள். இவ்விடத்தில் இருக்கிற பலவகையான மரங்களின் இலைகள் காய்ந்துபோய்க் காற்றினால் அடிபட்டுக், கலகலவென்று சப்திப்பதைச் சங்கிலிக்கறுப்பன் என்று நினைத்தார்கள். அறிவில்லாத மிருகங்களும், பட்சிகளும் நிர்ப்பயமாய் வசிக்கிற இடத்தில், அறிவுள்ள மனு.ர் சஞ்சரிக்கப் பயப்படுவது எவ்வளவு மௌட்டியம்?" என்று போதித்தார். அதற்குமுன் சோதிடப்பேய் பறந்ததுபோல் அன்றுமுதல் மனப்பேயும் பறந்துவிட்டது

. அந்தக் காட்டை எங்களிடத்தில் சாசுவதக் குத்தகையாக ஒப்புக்கொண்டு அதை வெட்டித் திருத்திச் சாகுபடி செய்து, பயிரிட்டு அநுபவிப்பதுந் தவிர, அந்த மண்டபத்தில் அவரே குடும்ப சகிதமாய்க் குடியிருந்து வருகிறார்.

எங்கள் உபாத்தியாயரிடத்தில், நான் பல புத்திகளைக் கற்றுக்கொண்டதுபோலவே, என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் அநேக நற்குணங்களையும் கற்றுக்கொண்டேன். எந்தக் காலத்திலாவது அவர்களிடத்தில் கோபம், குரோதம், மூர்க்கம் முதலான துர்க்குணங்களை நான் கண்டதேயில்லை; எப்போதும் அவர்கள் பேசுவது மிருது பாை.யே தவிரக் கடூர வார்த்தைகளை அவர்களிடத்தில் நான் கேட்டதே யில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் உண்மையே தவிரப் பொய்யென்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஒருநாள் என் முகத்தைக் கடுகடுத்து க்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு என் வேலைக்காரனைக் கோபித்தேன். அப்போது கூட இருந்த ஞானாம்பாள் ஒன்றும் பேசாமல் எழுந்துபோய் விட்டாள். பிறகு அவளை நான் கண்டு "ஏன் போய்விட்டாய்?" என்று கேட்க, .உங்களுக்குக் கோபம் வரும்போது, உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது; நீங்கள் கோப முகத்தோடு கண்ணாடியைப் பார்த்தால், உங்களுக்குத் தெரியும்" என்று சொன்னாள். நான் தனிமையாகப் போய்க் கோப முகத்துடனே கண்ணாடியைப் பார்த்தேன்; அப்போதிருந்த கோரம் எனக்கே சகிக்காமல் அன்று முதல் கோபத்துக்கு விடை கொடுத்துவிட்டேன். ஞானாம்பாள் எனக்கு இளையவளாயிருந்தாலும், அவளுடைய விநய காம்பிரியமும் நாகரிகமும் சுசீல ஒழுக்கமும் எப்படிப்பட்டவையென்றால், பெரியோர்கள் சமூகத்தில் இருக்கும்போது எவ்வளவு மரியாதையும் சிரத்தையும் உண்டாகுமோ, அவ்வளவு மரியாதை அவளிடத்தில் இருக்கும்போதும் என்னை அறியாமலே உண்டாகும். அவள் .தோத்திரப்பிரியை அல்லவென்று சில திரு.டாந்தங்களால் நான் அறிந்துகொண்டேன்.

எப்படியெனில், ஒரு நாள் சிங்காரத்தோட்டத்திலிருந்து ஒரு ரோ.ாப் பு.பத்தைப் பறித்து அவள் கையிலே கொடுத்து "உன்னுடைய முகம் இந்தப் பு.பத்துக்குச் சமானம்" என்றேன். அவள் "அந்தப் பு.பம் சீக்கிரத்தில் வாடிப்போவதுபோல, அழகும் சீக்கிரத்தில் அழிந்துபோகும்" என்றாள்; "அந்தப் பூவை உபமானித்தது சரியல்ல. உன் முகம் சந்திரனுக்குச் சமானம்" என்றேன். அவள் சற்று நேரம் சும்மா இருந்து, பிற்பாடு சொல்லத் தொடங்கினாள்; "சந்திரனுக்கு .வயம் பிரகாசம் இல்லையென்றும், சூரியனுடைய ஒளியினால் சந்திரன் பிரகாசிக்கிறதென்றும், நாம் பு.தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியே மனு.ர்களுடைய வடிவெல்லாம் சூரியனாகிய கடவுளிடத்திலிருந்து உண்டாவதால், அவரே .தோத்திரத்துக்குப் பாத்திரர்" என்று சொல்லிக்கொண்டு அப்பாற் போய்விட்டாள்; அன்று முதல் அவளை .தோத்திரம் செய்கிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டேன். அதற்குச் சில நாளுக்குப் பின்பு, நானும் ஞானாம்பாளும் வழக்கப்படி சிங்காரத் தோட்டத்துக்கு விளையாடப் போனோம். நான் கொஞ்ச தூரத்தில் பு.பம் பறித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு மரத்து நிழலில், ஒரு சின்னவாத்தியப் பெட்டியை வைத்து வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சப்தங் கேட்டவுடனே அவ்விடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு து.டக் காளை, அலறிக்கொண்டு சமீபத்திலிருக்கிற சித்திர மண்டபத்துக்கு ஒரு பக்கம் துரத்த, ஒரு பெரிய ஆட்டுக் கடா இந்தப் பக்கத்தில் துரத்த ஆரம்பித்தன. இப்படி இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அவள் அவ.தைப்படும்போது, நான் ஒரே ஓட்டமாய் ஓடி ஞானாம்பாளைத் தூக்கிச் சித்திரமண்டபத்து வெளித் திண்ணையின்மேல் ஏறிக்கொண்டேன். அந்தச் சித்திரமண்டபத்துத் திண்ணை அதிக உயரமானதாலும், அதன் படிகள் அந்தப் பக்கத்தில் இல்லாமல் வேறே பக்கத்தில் இருந்தமையாலும், அந்தச் சமயத்தில் நான் இல்லாமல் இருந்தால் அவளுக்குப் பெரிய அபாயம் நேரிட்டிருக்கும். இந்தச் சமாசாரம் ஞானாம்பாள் மூலமாக எங்கள் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து, அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த .தோத்திரம் அபரிமிதமே. இராவணாதி அசுரர்களை நாசஞ்செய்து சீதையைச் சிறை மீட்டுக்கொண்டுபோன இராமருக்கு எவ்வளவு பிரதாபம் கிடைத்ததோ, அவ்வளவு பிரதாபம் எனக்கு வாய்த்தது.

----------------

அத்தியாயம் -8

ஒரு நாள் எங்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாத விடுமுறை நாளாயிருந்தபடியால், நாங்கள் பழைய பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் தாயார் வந்து எங்களுடைய படிப்பைப் பரிசோதித்தார்கள். பிறகு ஞானாம்பாள் என் தாயாரைப் பார்த்து "அத்தையம்மா! உங்களுக்கு அநேக சரித்திரங்கள் தெரியுமே! யாதொரு பதிவிரதையினுடைய சரித்திரந் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். "அப்படியே சொல்லுகிறேன்" என்று என் தாயார் சொல்லத் தொடங்கினார்கள்.

"சில காலத்துக்கு முன் திரிசிரபுரத்தில் அரசு செய்து வந்த வி.யரங்க சொக்கலிங்க நாயகர் சந்ததியில்லாமல் இறந்து போனபடியால், அவருடைய பத்தினியாகிய மங்கம்மாளுக்குப் பட்டாபிே.கமாகி, அவள் து.டநிக்கிர.ம் சி.ட பரிபாலனஞ் செய்து, மநுநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தாள். அவளுக்குக் காமியப்ப நாயக்கன் என்கிற பெயருடைய தம்பி ஒருவன் இருந்தான். மங்கம்மாளுக்குத் தம்பி மேலிருந்த பிரியத்தினால், தன்னுடைய நாட்டில் சில ஊர்களைப் பிரத்தியேகமாய்ப் பிரித்து இவனுடைய .வாதீனப் படுத்தி, தனக்குள்ளாக அவன் சிற்றரசாயிருந்து அரசாட்சி செய்யும்படி திட்டஞ் செய்தாள். அவன் புதுக்கோட்டையைத் தனக்கு ரா.தானி ஆக்கிக்கொண்டு, அரசாட்சி செலுத்திவந்தான். அவனுக்கு மகோன்னத பதவி கிடைத்த உடனே மதிமயங்கி, சம.தான காரியங்களை எவ்வளவுங் கவனிக்காமல் காமாது ரனாய்ப் பர.திரீ கமனம் முதலிய துர்வி.யங்களிற் காலத்தைச் செலவளிக்கத் தலைப்பட்டான். அவனுடைய ஆ.தான உத்தியோக.தர்களில் ஒருவனாகிய மங்களாகரம் பிள்ளையினுடைய பத்தினி கற்பலங்காரி என்பவள், திவ்விய சுந்தரமும் அவளுடைய பெயருக்குத் தகுந்த சுகுணமும் உள்ளவளாயிருந்தாள். அவளிடத்தில், அந்த து.டரா.னுக்கு மோகம் உண்டாகி அவளைத் தன் கைவசப்படுத்தும் பொருட்டு, அவளிடத்துக்குச் சில .திரீகளைத் தூதாக அனுப்பினான். அவர்கள், அவளுடைய புரு.ன் வீட்டிலில்லாத சமயம் பார்த்து, அவளிடஞ் சென்று "அம்மா! நீ செய்த தவ மகிமையினால் உனக்கு ரா.யோகம் வந்துவிட்டது! உன்னைப்போல் அதிர்.டசாலிகள் உண்டா? நம்முடைய அரசரே உன்னுடைய அழகை விரும்புவாரானால் உன்னுடைய பாக்கியத்துக்கு ஒரு வரம்பு உண்டா? அவருடைய தயவைப் பெற எத்தனையோ .திரீகள் தவஞ்செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் சிந்திக்காமல் உனக்கு அவருடைய கிருபை கிடைத்தது எவ்வளவு பெரிய அதிர்.டம்! இனி இந்த நாட்டுக்கெல்லாம் நியே அரசி! சம.தான காரியங்களெல்லாம், உன்னுடைய ஏவலின்படியே நடக்கும். ஆகையால் அவருடைய இ.டபூர்த்தி செய்து, அ.ட ஐசுவரியங்களையும் கைக்கொள்ளு!" என்றார்கள். இதைக் கேட்டவுடனே கற்பலங்காரிக்கு கோபமுண்டாகிச் சொல்லுகிறாள். .எனக்கு அரசரும், குருவும், தெய்வமும் என்னுடைய பர்த்தாவே அன்றி வேறல்ல; அவருடைய கிருபையே எனக்கு ஐசுவரியம்! அவருக்கு முன்பாக மற்ற அரசர்கள் எல்லாரும் அ.க.ாந்தரம்; உங்கள் அரசருடைய கிருபைக்காகத் தவஞ் செய்கிற .திரீகளே அந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும். எனக்கு வேண்டாம்!" என்றாள்.

"மறுபடியும் அவர்கள் அந்த உத்தமியின் புத்தியைக் கலைக்கிறதற்குச் சகல தந்திர வித்தைகளை உபயோகப் படுத்தியும், அவள் இசையவில்லை; அவர்கள் உடனே புறப்பட்டுப் போய், அரசனுக்கு நடந்த காரியங்களைத் தெரிவித்தார்கள். அவள் நிராகரித்த சங்கதி தெரிந்தவுடனே, அவனை அதிக அதிகமாக ஆசைப்பேய் பிடித்து ஆட்டத் தலைப்பட்டது. அவளைப் பலாத்காரமாகக் கொண்டு போகிற ப.த்தில், தன்னுடைய சகோதரி மங்கம்மாளுக்குத் தெரிந்தால், தன்னைச் சிரசாக்கினை செய்வாளென்று பயந்து அவன் பலாத்காரஞ் செய்யத் துணியவில்லை. பணமென்றால் பிணமும் வாயைத் திறக்குமானபடியால், பணத்தைக் கொண்டே, அவ்ளை வசியஞ் செய்யவேண்டுமென்று நினைத்து, அவன் ஒரு பெரிய பெட்டியில் தங்க நாணயங்களையும் வேறொரு பெட்டியில் ரத்னாபரணங்களையும் நிரப்பி, அந்தத் தூதிகள் கையில் கொடுத்து, அவளிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் அந்தப் பெட்டிகளைக் கற்பலங்காரி வீட்டுகுக் கொண்டுபோய்த் திறந்துகாட்டி, அவளுடைய புத்தியை மயக்கப் பிரயாசப்பட்டார்கள். அவள் அவர்களைப் பார்த்து ".திரீகளுக்குக் கற்பே சிறந்த ஆபரணம்; அந்த ஆபரணம் போய்விட்டால், இந்த ஆபரணங்களினால் வரும் பிரயோசனம் என்ன?" என்று சொல்லி, அந்த ஆபரனங்களை உதைத்துத் தள்ளி, அவர்களைத் தூ.ித்துத் துரத்திவிட்டாள். அவர்கள் போய் சற்று நேரத்து க்குப் பின்பு வீட்டுக்கு வந்த தன் பர்த்தாவிடத்தில் சகல சங்கதிகளையும் தெரிவித்து "இந்த அரசனிடத்தில் உத்தியோகஞ் செய்வது முறையல்ல; உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பிச்சையெடுத்தாயினும் பிழைப்பது உத்தமம்" என்றாள். அவளுடைய வார்த்தையைப் புரு.ன் அங்கீகரித்துக் கொண்டு உத்தியோகம் வேண்டாமென்று ஒரு பத்திரிகை அனுப்பிவிட்டு, அவரும் அவருடைய பத்தினியும் ஊரைவிட்டுப் புறப்பட்டு அடுத்த கிராமத்துக்குப் போய், ஒருவருக்குந் தெரியாமல் அந்தரங்கமாக வசித்தார்கள். உத்தியோக வரும்படியைத் தவிர வேறே சீவனத்துக்கு மார்க்கம் இல்லாதபடியால், உத்தியோகம் போன பிற்பாடு அவர்கள் பட்ட க.டம் சொல்லி முடியாது. அவர்களுடைய நகைகள், பாத்திர சாமான்கள் முதலியவைகளை விற்றுச் சில நாள் காலே.பஞ் செய்தார்கள். பிற்பாடு, கையில் காசும் இல்லாமல், கடன் கொடுப்பாருமில்லாமல் கைப்பாடுபடவுந் தெரியாமல், இராப்பட்டினி பகற்பட்டினியாயிருக்க ஆரம்பித்தார்கள். அந்த அரசனுக்கு அவர்கள் போயிருக்கிற இடம் சில நாள் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்தது. சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு உபாயங்களைச் செய்துவிட்டோம். இனி மேல் நாலாவது உபயோகமாகிய தண்டத்தை உபயோகிப்பதே காரியமென்று அவன் நிச்சயித்து, தானாயிறந்து போன ஒரு அநாதைப் பிரேதத்தை, நடுச் சாமத்தில் அவர்கள் இருக்கிற வீட்டிற் போட்டுவிடும்படியாயும், மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டிப் பிடிக்கும்படிக்கும் .ாக்கிரதை செய்தான். அந்தப் பிரகாரம் சேவகர்கள் வந்து, மங்களாகரம் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்; கற்பலங்காரி வெளியே போகாதபடி வீடைச் சுற்றிப் பாரா வைத்துவிட்டார்கள்.

உத்தியோகம் போனபிற்பாடு, தரித்திர முதலிய சகல க.டங்களையும் தைரியமாகச் சகித்த அந்தக் கற்பலங்காரி, தன் புரு.னைக் குற்றவாளியாக்கி, சேவகர்கள் பிடித்துக் கொண்டுபோனதைச் சகிக்க மாட்டாதவளாய் நெருப்பிலே போட்ட பு.பம் போல வாடிப் பதைத்து விம்மி அழுதாள். அந்தச் சமயத்தில் அந்தக் கொடுங்கோல் மன்னவனுடைய தாதிகள் வந்து, கற்பலங்காரியை நோக்கி "தானாய் வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவது போல, நீயே உன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறாய். உன் புரு.ன் கொலை செய்ததாகச் சாட்சிகளால் குற்றம் .தாபிக்கிறபடியால், மரண தண்டனை கிடைக்குமென்பது நிச்சயம். ஆனால் நாங்கள் சொல்லுகிறபடி, நீ கேட்டால் உன் புரு.னுக்கு .ீவலயம் நேராது; நீயும் எப்போதும் சுமங்கலியாகவும், பாக்கியவதியாகவும் இருப்பாய்! எங்களுடைய வார்த்தையை நீ தள்ளி விட்டால் நீ அமங்கலி தான்" என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்ட உடனே அந்தப் பதிவிரதையினுடைய சித்தம் சிறிதும் சலனப் படாமல் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். "எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வந் தண்டிக்காமல் விடாது. மானம் பெரிதே அல்லாமல் .ீவன் பெரிதல்ல; என்றைக்கிருந்தாலும் மனு. தேகம் எடுத்தவர்கள் சாவது நிச்சயமே யல்லாது சாகாத வரம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் ஒருவரும் இல்லை. எப்படியும் ஒரு நாள் சாகப் போகிறவர்கள், சில நாள் முந்திச் செத்தால் பாதகம் என்ன? நான் என் புரு.னின் உயிரைக் காப்பாற்றுகிறதற்காகக் கற்பை இழந்து, பாவத்தையும், பழியையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்கிறதைப் பார்ர்க்கிலும், பதிவிரதா பங்கமில்லாமல் நானும் என் புரு.னும் இறந்து, நித்திய மோ. சாம்ரா..ியத்தை அடைவது உசிதம் அல்லவா?" என்றாள். "அப்படியானால் வருகிறதை நீ அநுபவித்துக் கொள்" என்று அந்தத் து.டர்கள் சொல்லிப் போய்விட்டார்கள். இனிமேல் கடவுளைத் தவிர வேறு திக்கு திசை இல்லாதபடியால், அந்த உத்தமி கடவுளை நோக்கிப் பிரலாபித்துத் தன் குறைகளைச் சொல்லி முறையிடுவாள் ஆயினாள்.

அவளுடைய வீட்டைச் சுற்றிப் பாரா இருக்கிறவர்களில் ஒருவன், அவளுடைய புரு.னுக்கு மித்திரன் ஆனபடியால், குற்ற விசாரணை எப்படி நடக்கிறதென்று விசாரித்துத் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தாள். அதிரக.ியமாய் விசாரணை நடந்தபடியால், அவனுக்குக் கூட சில நாள் வரைக்கும் சங்கதி வெளியாகாமலிருந்து, பிறகு பிரகடனம் ஆயிற்று. மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் .தாபிக்கப்படுகிறதாகவும், ஆனால் மங்கம்மாளுடைய உத்தரவு இல்லாமல் மரண தண்டனை செய்ய அந்தச் சிற்றரசனுக்கு அதிகாரமில்லாதபடியால், மங்களாகரம் பிள்ளையை மரண தண்டனை செய்ய உடனே உத்தரவு அனுப்பவேண்டுமென்று இந்தக் கொடியன் மங்கம்மாளுக்கு ரகசியமாக எழுதிக்கொண்டிருப்பதாகவும், அந்தக் காவற்சேவகன் மூலமாகக் கற்பலங்காரி கேள்விப்பட்டு, அவளுக்கு உண்டான மனக்கிலேசம் எவ்வளவென்று யார் விவரிக்கக்கூடும்? அம்பு பட்டு விழுந்த மயில்போல அவள் கீழே விழுந்து புரண்டு "ஐயோ தெய்வமே! நான் என்ன செய்வேன்! இந்த அநியாயத்தை யாரிடத்திலே சொல்லுவேன்? பிரை.களால் துன்பத்தை அடைந்தவர்கள் அரசனிடத்தில் முறையிடுவார்கள். அரசனே அக்கிரமஞ் செய்தால் உம்மைத் தவிர வேறு யாரிடத்தில் சொல்லுவேன்? என் புரு.னை இர.ித்தருளும் .வாமி" என்று முறையிட்டாள். பிறகு கடவுளது கிருபையால் அவளுக்குத் திடச் சித்தம் உண்டாகி, மங்கம்மாளிடத்திலிருந்து உத்தரவு வருகிதற்குமுன், அந்த அரசியிடத்திற்குத் தான் எப்படியாவது போய்த் தன் புரு.னைக் காப்பாற்றுகிறதற்கு மார்க்கந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தக் காவற்காரனுடைய சகாயத்தால் அவள் நடுச்சாமத்தில் வீட்டை விட்டு வெளிப்பட்டுத் திரிசிரபுரத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போக ஆரம்பித்தாள். ஓடும்போதே தபாற்காரன் எதிரே வருகிறானாவென்று பார்த்துக் கொண்டு ஓடினாள். தங்க விக்கிரகம் போல் அவளுடைய மேனி பிரகாசிக்க, அவளுடைய கூந்தல் அவிழ்ந்து சோர, .லப்பிரவாகமாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்தவர்கள் "இவள் தேவ .திரீயோ! அல்லது ரா. .திரீயோ!" என்று மயங்கி அவள் துக்கத்துக்காக இரங்கி அழாதவர்கள் ஒருவருமில்லை. அவள் நடுவழியில் தபால்காரன் வருவதைக் கண்டு, அவனுக்கு நம.காரஞ் செய்து "ஏதாவது விசே.ம் உண்டா?" என்று வினாவ, அவன் மகாராணியிடத்திலிருந்து மரண தண்டனை உத்தரவைக் கொண்டுபோவதாகத் தெரிவித்தான். அவள் உடனே தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, மரண தண்டனை உத்தரவை மாற்றுவதற்காகவே தான் மங்கம்மாளிடத்துக்குப் போவதாகவும், எப்படியும் அனுகூலம் கிடைக்குமென்றும், ஆகையால் அவன் புதுக்கோட்டைக்குப் போகாமல் தாமதிக்க வேண்டுமென்றும், மிகவும் பரிதாபமாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். இரக்க சுபாவமுள்ள அந்தத் தபாற்காரன், தேவ .திரீக்குச் சமானமாகிய இந்த .திரீயினுடைய பிரார்த்தனையை மறுக்கமாட்டாமல், ஒரு நாள் தாமதஞ் செய்வதாக ஒப்புக் கொண்டான். அந்தப்படி அவனிடத்தில் பிரமாணம் வாங்கிக்கொண்டு, வேடனுக்குப் பயந்து ஓடும் மான்போல, ஒரே ஓட்டமாக ஓடித் திரிசிரபுரத்தை அடைந்து மங்கம்மாளுடைய அரண்மனையில் பிரவேசித்தாள். அரண்மனைக் காவற்காரர்கள் இவள் யாரோ தேவியென்று அவளைத் தடுக்க மனம் வராமல், உள்ளே விட்டுவிட்டார்கள்.

அவள் மங்கம்மாளுடைய கொலு மண்டபத்தை நோக்கி "மகாராணியே அபயம்! மண்டலே.வரியே அபயம்! மங்கையர்க்கரசியே அபயம்! உலகநாயகியே அபயம்!" என்று ஓலமிட்டு, சிம்மாசனத்தின் அடியிற் போய் விழுந்தாள். சில நாளாய் அன்னம் ஆகாரமில்லாதபடியாலும், நாற்காத வழியும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்தபடியாலும், தேக .மரணை தப்பி மூர்ச்சையாய் விட்டாள். அப்போது சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த மங்கம்மாள், உடனே இறங்கி, அவளைக் கட்டித் தழுவி அவளுடைய மூர்ச்சை தெளியும்படி சைத்தியோபசாரங்கள் செய்வித்து மூர்ச்சை தெளிந்தவுடனே, அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டுபோய்த் தன் பக்கத்தில் இருத்தி, அவளுடைய குறையைத் தெரிவிக்கும்படி உத்தரவு செய்தாள். கற்பலங்காரி, அந்தச் சிற்றரசன் செய்த கொடுமைகளை வியக்தமாக விக்ஞாபித்த உடனே மகாராணிக்குத் தன் தம்பி மேல் உக்கிர கோபாக்கினி மூண்டு, அவனையும் சாட்சி முதலானவர்கலையும் உடனே கொண்டுவரும்படி, குதிரைப் பட்டாளத்தைச் சேர்ந்த நூறு போர்வீரர்களைப் புதுக்கோட்டைக்கு அனுப்பினாள். அந்தத் து.ட அரசன் மங்களாகாரம் பிள்ளையைக் கொல்வதற்காகக் கொலைக்களத்திலே கொண்டுபோய் வைத்துக் கொண்டு, இராணியினுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில் நூறு போர்வீரர்களும் போய்ச் சேர்ந்து, இராணியினுடைய உத்தரவைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டவுடனே, அந்த அரசனுக்குக் கோபமுண்டாகி, அந்தப் போர்வீரர்களின் மேல் பாய்ந்து, அவர்களில் இருவரை வெட்டிக் கொன்றுவிட்டான்; மற்றவர்கள் எல்லாரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கிப் பின்கட்டு முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களையும் கொண்டுபோய், மகாராணி சமுகத்தில் விட்டார்கள். மகாராணி சாட்சிகளைப் பார்த்து "மங்களாகாரம் பிள்ளை கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு யாதொன்றும் தெரியாதென்றும், ஆனால் அரசனுடைய ஆக்கினைக்குப் பயந்து தங்களுக்குத் தெரிந்தது போல் பொய் வாக்குமூலம் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். உடனே இராக்கினி, தன் தம்பியைப் பார்த்து, "நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்க, அவன் இராணியைக் கூட மதிக்காமல், சகோதரி என்கிற தைரியத்தால், அலட்சியமாக மறுமொழி சொன்னான்; மகாராணிக்கு அடங்காத கோபம் உண்டாகி, கிங்கரர்களைப் பார்த்து "இவனை நான் உன்னத .தானத்தில் வைத்திருக்க, அந்த .தானத்துக்குத் தன்னை அபாத்திரன் ஆக்கிக் கொண்டபடியால், இவனை உன்னத .தானத்தினின்றே தள்ள வேண்டியது நியாயமாயிருக்கிறது. ஆகையால் இவனைத் தாயுமான.வாமி மலைச் சிகரத்தின் மேலே ஏற்றி, அங்கே இருந்து கீழே தள்ளிவிடுங்கள்" என்று உத்தரவு கொடுத்தாள். அந்தப் பிரகாரம் அவனை மலைமேல் ஏற்றித் தள்ளிவிட்டார்கள். அவனுடைய யோகமும், தேகமும், மோகமும் இவ்வகையாக ஒரு நிமி.த்துக்குள் முடிவு பெற்றன. பிறகு மங்கம்மாள் தனது நியாயசபையில், மங்களாகாரம் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் கொடுத்து, அவனைக் குபேர சம்பத்து உடையவன் ஆக்கினாள். "என்றைக்கிருந்தாலும் பர.திரீ கமனஞ் செய்கிறவர்களுடைய கதி அதோகதி, என்பதற்கு அந்தக் காமியப்ப நாயக்கனே சாட்சி. கற்புள்ள .திரீகள் மேன்மை அடைவார்கள், என்பதற்குக் கற்பலங்காரியே சாட்சி" என்று என் தாயார் சொல்லி முடித்தார்கள். இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நானும் ஞானாம்பாளும் அளவற்ற வியப்புங் களிப்பும் அடைந்தோம்.


பிரதாபமுதலியார் சரித்திர நாவலின் முழுப் பகுதியையும் படிக்க வேண்டுமா?
மதுரைத்திட்டத்தில் சென்று pdf கோப்பினை வலையிறக்கிப் படித்து மகிழவும்.

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061