கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 10

தாள் மடக்குதல், (சப்பான் நாரை ஆக்குதல்)

சதுரமான வண்ணத்தாளை எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு மடக்கி சப்பான் நாரையை உருவாக்கவும்.

சப்பான் நாரையைச் செய்பவர் 100 ஆண்டுகாலம் வாழ்வர். இது சப்பான் மாந்தரின் நம்பிக்கை. உலகப் போரின் பொழுது ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதால் நாடு பலத்த அழிவுக்குள்ளாகியது. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அனேகர் நேரடியாகவும், பலர் கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்டனர். கதிர்வீச்சினால் பாதிப்பிற்குள்ளாகிய சிறுமி ஒருத்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். அந்த மண்ணின் நம்பிக்கையின்படி அவள் சப்பான் நாரை செய்யத் தொடங்கினாள். 100 நாரைகள் செய்வதற்குள் அநதச் சிறுமியின் உயிரும் பிரிந்தது, அணுகுண்டின் கொடுமையை உலகத்திற்குத் தெரிவிக்கும் வகையில் ஒரு சிறுமி தன் கைகளில் சப்பான் நாரையைத் தலைக்குமேல் பிடித்துள்ள உருவமானது இன்றும் சப்பானில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த உருவத்திற்கு மாலையாக உலகச் சிறுவர்கள் ஆக்குகிற சப்பான் நாரையால் தோரணம் கட்டி விழிப்புணர்வை ஊக்குகிறார்கள்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278