கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 13

கீழேயுள்ளவன் மேலே, மேலேயுள்ளவன் கீழே

மாணவர்கள் மகிழ்வாக விளையாடுவதற்குரிய விளையாட்டு அட்டை இது.

உணவு வலை பாடத்தினைக் கற்பிக்க இந்த விளையாட்டு அட்டை உருவாக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்து பேர் விளையாடலாம். முதலில் அனைவரும் தங்களுக்குரிய அடையாளப் பொருளை எண் 1 உள்ள கட்டத்தில் வைக்கவேண்டும். பிறகு ஒவ்வொருவராகத் தாயக்கட்டை அல்லது எண்குறியிடப்பட்ட சதுரக்கட்டையை உருட்டி, அவர்களுக்குக் கிடைக்கும் எண்ணுக்கு ஏற்றவாறு தங்களது பொருளை நகர்த்த வேண்டும். கட்டத்தில் அம்புக்குறி மேல்நோக்கி இருந்தால் மேலே செல்லலாம், கீழ்நோக்கி இருந்தால் கீழே வரவேண்டும். பாம்பு --- தவளையைப் பிடிக்கும், பட்டாம்பூச்சி --- மலரில் தேன் குடிக்கும்.

பரமபத விளையாட்டுப் போன்றதே இது. பரம பதத்திலுள்ள பாம்பு, ஏணிக்குப் பதிலாக அம்புக்குறிகள் தரப்பட்டுள்ளன. கட்டத்திற்குள் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. கட்டத்திற்குள் படங்களை ஒட்டியும் விளையாடலாம். முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் விளையாடுவதாக இருந்தால் அம்புக் குறிக்குப் பதிலாக பாம்பு, ஏணியைக் கூடப் பயன்படுத்தலாம்.

இது போல, பாடத்திறனை உள்ளடக்கியவாறு தாள்களை வடிவமைத்துக் கொண்டு எந்தப் பாடத்திற்கு வேண்டுமானாலும் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

போட்டி மனப்பான்மையில் மாணவர்கள் மேலே கீழே செல்லும் பொழுது, கட்டத்திலுள்ள சொல்லும் படமும் அவர்களுக்குள் விளையாட்டு வழியில் நுட்பமாகப் பதிந்துவிடும். கூடவே கற்றல் இலக்குகளும் அவர்களுக்குள் பதியும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278