கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 15

எழுத்தும் படமும்

எழுத்து எழுதுமுறையும் - அந்த எழுத்திலிருந்து ஈர்ப்புடைய படங்கள் வரைகிற முறையும் - தமிழிலுள்ள 40 எழுத்துகளுக்கான படங்களுடன் நூல் உருவாக்கப் பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக இங்கே அ, ஆ, இ ஆகிய மூன்று எழுத்துகளை எப்படிப் படங்களாக மாற்றலாம் என்பதற்கான படங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன. இதுபோல அ முதல் ஒள வரையிலும், க முதல் ன வரையிலுமான எழுத்துகளுக்கும் மற்றும் 1 முதல் 10 வரையிலான எண்களுக்கும் உரிய படங்கள் நூலில் தரப்பட்டுள்ளன.

மழலையர் மற்றும் தொடக்க நிலை மாணவர்கள் எழுத்திலிருந்து படங்கள் ஆக்குகிற இந்த முறையைச் சொல்லிக் கொடுத்தால் கூர்மையாகக் கேட்பார்கள். எழுத்தும் அவர்களது மனதில் ஆழமாகப் பதியும். வரைகலையும் அவர்களுக்கு அறிமுகமாகும்.


இந்த நூலின் படவடிவக் கோப்பைப் பெற சொடுக்கவும்www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278