கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 19

பொருத்தமானது எது ? கண்டுபிடி

மெத்தப்படித்த நண்பர் ஒருவர் நேர்முகத்தேர்விற்குச் சென்று இருந்தார். அவர் அடுக்கி வைத்திருந்த சான்றிதழ்களை அந்த நிறுவனம் பார்க்கவேயில்லை. அவர்கள் வடிவமைத்திருந்த நுண்ணறிவுச் சோதனைக்கான தேர்வினை எழுதச் சொன்னதாம். நண்பர் அந்தத் தேர்வில் தோல்வியடைந்துவிட்டார்.

தற்பொழுது B.E., M.E., போன்றவைகள்கூட திறமையற்ற புத்தகப்படிப்பாக மட்டுமே ஆகிவிட்டதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

எனவே மாணவர்களுக்கான இந்த வகை வினாக்களை வடிவமைக்கவும், வரிசைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இது முழுமையடைந்ததும் அறிவிக்கிறோம். இந்த வகையில் உதவ விருப்பம் இருப்பவர்கள் தங்களது நூல்களை, கருத்துகளை எங்களுக்கு அனுப்பி உதவலாம்.

வலது புறத்தில் உள்ள மூன்று படங்களுக்கு அடுத்ததாக, எந்தப்படம் வரும் என்பதை - இடது புறத்திலுள்ள படங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் குறிப்பதே இந்தத் தாளில் நாம் காண்கிறோம்.

இதுபோலுள்ள மாணவர்களின் நுண்ணறிவுச் சோதனை வகைகளை நூல்களிலிருந்து திரட்டி, அவற்றை வயதுக்குத் தகுந்தவாறு வரிசைப்படுத்தி, முதல் வகுப்பிலிருந்தே நம் தமிழ் மழலையர்களுக்குப் பயிற்றுவிப்போமாக. ஒவ்வொரு தேர்வுத் தாளிலும் 10 சோதனைகள் என 40 தாள்களை உருவாக்கி ஒவ்வொரு வாரமும் பயிற்சி கொடுத்தால் மாணவர்களது திறன் நுட்பமாக வளரும்www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278