கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 22

அழகிய எழுத்துகள் எழுத.

கீழே நேர்கோட்டுப் படங்களும், வளைகோட்டுப் படங்களும் தரப்பட்டுள்ளன.

3 அகவையுடைய இளம் மழலையர்களுக்கு விரல் தசைகளும், கைத்தசைகளும் நுட்பமாக இயங்காது. விரல்களுக்கிடையில் எழுதுகோலைப் பிடிப்பது என்பதே சிரமமானதாக இருக்கும். அவர்களை நெருக்கி, கையில் எழுதுகோலைக் கொடுத்து, "எழுது எழுது" என்று வலியுறுத்தினால் எழுதுவார்கள். ஆனால் அது அவர்களது ஆழ்மனதில் வெறுப்பையே தேக்கி வைக்கும்.

எழுதுதல் இயல்பானதாக, விருப்புடையதாக, மகிழ்வூட்டுவதாக அமையவேண்டும். இதனைத் திட்டமிட்டு இந்த நேர்கோடு, வளைகோட்டுப் பயிற்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள அனைத்து மொழிகளினது எழுத்துகளும் இநத இரண்டு வகையான கோடுகளுக்குள் அடங்கும். மழலையர்கள் முதலில் இந்த நேர்கோடு, வளைகோடுகளை எழுதிப் பழகி அதனைச் சரியாக, அழகாக எழுதக் கற்றுக் கொண்டால் அவர்களது எழுத்துவடிவம் என்றுமே அழகாக இருக்கும்.

நேர்கோடு, வளைகோடு என்பதனை வரைந்து, பிறகு படங்களை வரைய ஊக்குவிக்கும் பொழுது, ஆர்வமுடன், அமர்ந்து எழுதி மகிழ்வார்கள். அனைத்துப் படங்களையும் அழகாக வரையும் வரை காத்திருக்கவேண்டும். அவசரப்படுத்தி வேகம் வேகமாக எழுத விரட்டக்கூடாது.

( நண்பர்கள் இதனைப் படியெடுத்து. பெரியதாக்கி, உங்கள் பகுதியிலுள்ள இளம் மழலைகளுக்குக் கொடுத்து வரைந்து பழகச் சொல்லவும். இதனுடைய விளைவு சிறப்பாக இருக்கும். பயன்படுத்திக் கொள்ளவும்)www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278