கல்வி ஆராய்ச்சிகள்  
 
வரிசை எண் : 28
  
 தாளை வெட்டித் தடுக்கு பின்னுதல் 
1 செ.மீ அகலமும், 30 செ.மீ நீளமும் கொண்ட, துண்டுகளாக வண்ணத்தாளை வெட்டி 
எடுத்துக் கொள்ளவும்.
  
வெட்டி எடுத்துக் கொண்டுள்ள 20 துண்டுகளை முதலில் நீள வாக்கில் வரிசையாக அடுக்கவும். கீழ்ப் 
பகுதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஒரு துண்டினை எடுத்து, ஒன்று விட்டு ஒன்று தாளினை மேலே 
தூக்கி, உள்ளே வைக்கவும். பிறகு மேலே தூக்கிய தாளினைக் கீழே வைத்துவிட்டு, கீழிருந்த தாளினை மேலே 
தூக்கி அடுத்த துண்டினை உள்ளே வைக்கவும். முதலில் வைத்த தாள் துண்டோடு தற்பொழுது வைத்த தாள் 
துண்டினை நெருக்கி வைக்கவும். இப்படித் தொடர்ச்சியாக 20 துண்டினையும் நெருக்கமாக ஒன்றன்மேல் 
ஒன்றாக செருகவும். இப்பொழுது அடுத்து அடுத்து சதுரங்கள் உள்ளது போலத் தடுக்கு கிடைக்கும். 
(படத்தின் மேல் பகுதியில் உள்ளது போல)
  
படத்தில் 5 வகையான தடுக்குகளின் அமைப்பானது காட்டப்பட்டுள்ளன. ஒன்றுவிட்டு ஒன்று தாளினை மேலே 
தூக்குவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று தாளினை மேலே தூக்கி, தாள் துண்டினை உள்ளே வைத்து 
வரிசையாக அடுக்க, வெவ்வேறு வகையான தடுக்குகள் கிடைக்கும். உருவாக்கப்பட்ட தடுக்குகள் பிரிந்து 
விடாமல் இருக்க, ஓரங்களில் தாளை ஒட்டி விடவும்.
  
வேறு வேறு வண்ணத்தாளைப் பயன்படுத்தினால் தடுக்குகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 
  
 
 
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
 
 |