கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 29

தமிழ் எழுத்துகளில் உள்ள.

தமிழ் எழுத்துகளில் கீழ் விலங்கு, மேல் விலங்கு - சுழிமேல் விலங்கு, இறங்கு கீற்று - மடக்கேறு, மடக்கேறு கீற்றுக்கால் - கொம்பு, கொம்பு சுழி - இரட்டைக் கொம்பு, கொம்பு பின்கால் - கொம்பு சுழி பின்கால், கொம்புக் கால் - என்கிற எழுத்தின் வடிவங்களுக்கான பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

இவை எழுத்துகளை நினைவில் நிறுத்துவதற்கும், மீண்டும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆசிரியர்கள் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி மாணவர்களிடம் எழுத்து வரிவடிவங்களை நினைவில் நிறுத்த முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

குறியீடுகளை எழுத்துகளாக எண்ணி, தவறாக ஒலிக்கும் போக்கு மாணவர்களிடம் இருக்கும். இந்தச் சூழலில் இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி விளக்கினால் மாணவர்களுக்குத் தெளிவாகும். சொ, சோ வரிசை எழுத்துகளில் - மூன்றும் சேர்ந்தது ஒரு எழுத்து என்பதை வலியுறுத்த இவை உதவும் என்று நம்புகிறேன்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278