கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 33

வரைவதற்கான வளைகோட்டுப் பயிற்சி.

வரைகிற திறன் மாணவர்களுக்கு மகிழ்வூட்டுவதோடு, தொடருகிற கல்விச் செயற்பாடுகளுக்கு அடித்தளம் அமைப்பதாகவும் இருக்கும். எனவேதான் தொடக்க நிலையிலேயே மாணவர்களது வரைதல் திறனை வளர்த்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள சிறிய சதுரத்திற்குள் வளைகோடுகளை வரைந்து, புதிய புதிய வடிவங்களை உருவாக்கும் பொழுது அவர்களது கை பழக்கப்படுவதோடு அழகிய எழுத்துகளை எழுதுவதற்கும் உந்துசக்தியாக இருக்கும்.

முதலில் மாணவர்கள் இந்தப் படத்தின் மீது வரைந்து பழகுவதும், பிறகு கட்டத்தின் உள்ளே இயல்பாக வரைந்து பயிற்சி எடுப்பதும் வளைகோட்டினை வரைவதற்கான படிநிலையாக அமையும்.

உடைந்த வளையல் துண்டுகளை இந்த அடிப்படையில் அட்டையில் ஒட்டி உருவங்கள் உருவாக்குவது இன்னும் சிறப்பாக இருக்கும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278