கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 34

களிமண் உருண்டையும், குச்சிகளும் கோர்த்தல்

களிமண்ணால் உருண்டைகள் செய்து, ஒவ்வொரு உருண்டையிலும் குச்சி நுழையும் அளவிற்கு இரண்டு, அல்லது மூன்று, அல்லது நான்கு ஓட்டைகளை ஏற்படுத்திக் காய வைக்கவும். பிறகு களிமண் உருண்டைக்கு வண்ணம் அடித்து வைத்துக் கொள்ளவும்.

படத்தில் காட்டியபடி குச்சிகளைக் களிமண் உருண்டையில் நுழைத்து இணைக்கவும். இப்பொழுது முப்பரிமாண வடிவங்கள் கிடைக்கும்.

மாணவர்களது கற்பனைக்கும், விருப்பத்திற்கும் தகுந்தவாறு வேறு வேறு வடிவில் கோர்த்து வடிவங்கள் உருவாக்க ஊக்குவிக்கவும். உருவாக்குகிற வடிவங்கள் மாணவர்களுக்கு மகிழ்வையும் ஆக்கத்திறனையும் ஏற்படுத்தும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278