கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 38

சித்திரக்கட்டம்

கண்ணன் தீபாவளி மலரில் வெளியான இதனை ஆக்கியவர் க.திருநாவுக்கரசு.

எழுத்துகளை எழுதி, கட்டங்களை நிரப்பவேண்டிய - கட்டங்களைச் சுற்றிலும் படங்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திற்கு அருகிலும் எண்கள் தரப்பட்டுள்ளன. அதேபோல நிரப்பப்படாத கட்டங்களுக்குள்ளும் எண்கள் தரப்பட்டுள்ளன. படத்திற்குரிய சொற்களை அந்தக் கட்டத்தில் தொடங்கவேண்டும். மேலிருந்து கீழ், வலமிருந்து இடம் என எழுத்துகளை நிரப்பும் பொழுது சரியாக நிரப்பவேண்டும். இடைப்பட்ட கட்டங்களையும் எழுத்துகளால் நிரப்ப வேண்டும்.

இக்கட்டங்களை நிரப்புகிற மழலையர்களுக்குச் சொற்களுக்கான எழுத்துகள் தெரிவதோடு, பொருத்திப் பார்த்து இடைப்பட்ட எழுத்துகளைக் கண்டுபிடிக்கிற தன்மையும் கிடைக்கிறது.

இளம் மாணவர்களுக்கு இது மகிழ்வூட்டுவதாக அமையும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278