கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 44

கண்ணைக் கவரும் மெழுகுவர்த்தி விளக்கு

ஒரு காலியான தகர டப்பாவை எடுத்துக் கொள்ளவும். டப்பாவின் உயரம் மெழுகுவர்த்தியின் உயரத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கவேண்டும். டப்பாவின் வெளிப்புறத்தில் படத்தில் காட்டியபடியோ அல்லது விரும்புகிற வகையிலோ, அழகிய வடிவத்தை வரைந்து கொள்ளவும். வரைந்துள்ளதன் மேல் சம அளவு இடைவெளிவிட்டு, ஊசி ஆணியைப் பயன்படுத்தி வரிசையாக ஓட்டை போடவும்.

பொறுமையாக, ஓட்டைகள் அனைத்தும் சமஅளவு உடையனவாக இருக்குமாறு போடவும். ஓட்டை போடும் பொழுது தகரடப்பா வளைந்து விடாமல் இருக்க, துணி அல்லது பஞ்சுப் பொதியின் மேல் வைத்து ஓட்டை போடவும். தகரம் மிக மெல்லியதாக இருந்தால் டப்பாவிற்குள் பஞ்சு அல்லது துணியை நிறைத்த பிறகு ஓட்டை போடவும். இப்பொழுது விளக்கின் பாதுகாப்புக் கவசம் உருவாகி விட்டது.

டப்பாவினுள் நடுப் பகுதியில் மெழுகு வர்த்தியைக் கொளுத்திச் செங்குத்தாக நிறுத்தவும். மெழுகுவர்தியைக் கொளுத்தி இரண்டு சொட்டு மெழுகினை உள்ளே விட்டு அதன் மீது மெழுகுவர்த்தியை நிற்க வைத்தால் ஆடாமல் செங்குத்தாக நிற்கும். இப்பொழுது டப்பாவை நூலில் கட்டித் தொங்கவிடவும். இரவு நேரங்களில் இவ்வாறு எரியவைக்கிற விளக்குகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278