கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 45

உற்றுப் பாருங்கள் - தெரிவது என்ன ?

காணுவதெல்லாம் மெய்யல்ல

அருகிலுள்ள படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். தெரிவது என்ன ? உங்களுக்குத் தெரிவது சரியான தோற்றமா ? அல்லது பொய்யான தோற்றமா? ஏன் இப்படித் தெரிகிறது ? எந்தப் படிக்கட்டிலிருந்து பார்த்தாலும் கீழிறங்குவது போலத் தோற்றம் அளிப்பது உண்மையா ? அடுத்த படத்தில் அடிப்பகுதி இரண்டாகவும் மேற்பகுதி மூன்றாகவும் தெரிவது ஏன் ? முக்கோணத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்றுப் பார்க்கும் பொழுதெல்லாம் வேறு வேறு தோற்றம் தெரிகிறதே இது ஏன் ? இதுதான் கண்களில் தெரிகிற மாயத்தோற்றம். இது போலப் பல படங்கள் உள்ளன. இவைகளையெல்லாம் திரட்டி மாணவர்களுக்குத் தந்து வியப்பேற்படுத்தி விளக்கினால் மாணவர்கள் மிகுந்த மகிழ்வு அடைவார்கள்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278