கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 46

வரைந்து பழக

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

மாணவர்கள் வரைந்து பழக அருகிலுள்ள படமானது தரப்பட்டுள்ளது. வளைகோடுகளும் நேர்கோடுகளும் சரியாக வரைந்து பழகினால் அதுவே படம் வரைதலுக்கான அடிப்படையாக இருக்கும்.

இந்தப்படத்தில் ஐங்கோண வடிவத்திலிருந்து படம் உருவாக்கும் முறையானது காட்டப்பட்டுள்ளது. அழகான படத்திற்கு ஒழுங்கமைவான வடிவமே அடித்தளமாகும். எனவே ஏதேனும் ஒரு முறைபடுத்தப்பட்ட அடிப்படையில் வரைந்து பழக அது மிக அழகான ஓவியமாக இருக்கும்.

படத்தில் காணப்படுகிற ஒவ்வொரு இலையும் ஒரே அளவிலான வடிவமைப்பில் இருப்பதைக் காணலாம். மாணவர்களும் இந்த நுணுக்கத்தை மனதில் வைத்துப் படங்கள் வரையத் தொடங்கினால் அவர்கள் வரைகிற படமும் மிகச் சிறப்பானதாக அமையும்.

வரைந்து பழக வாழ்த்துகள்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278