கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 51

ஈரிக்க மூவிலக்க எண்களை எளிய முறையில் பெருக்குதல்

தேவையானவை

ஒன்றுகளைக் குறிக்க ஒரே வண்ணத்தில் 9 குச்சிகள்
பத்துகளைக் குறிக்க ஒரே வண்ணத்தில் 9 குச்சிகள்
நூறுகளைக் குறிக்க ஒரே வண்ணத்தில் 9 குச்சிகள்
1000 எழுதப்பட்ட சிறு அட்டைகள்
100 எழுதப்பட்ட சிறு அட்டைகள்
10 எழுதப்பட்ட சிறு அட்டைகள்
1 எழுதப்பட்ட சிறு அட்டைகள்

செயல்பாடு : 124 14 பெருக்கி விடை கூறு.

124 இல் 1 நூறு உள்ளது. எனவே நூறைக் குறிக்கும் குச்சி ஒன்றையும், 2 பத்துகள் குச்சிகளையும், 4 ஒன்றுகள் குச்சிகளையும் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி வரிசையாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக பெருக்க வேண்டிய 14 இல் 1 பத்தும் 4 ஒன்றுகளும் இருப்பதால் 1 பத்துகள் குச்சியும், 4 ஒன்றுகள் குச்சிகளையும் எடுத்து - முதலில் வைத்த குச்சிகளின் மேல் குறுக்காகப் படத்தில் காட்டியுள்ளபடி வைக்கவும்.

இப்பொழுது இரண்டு குச்சிகளும் சேரும் இடத்தில், இரண்டு குச்சிகளுக்கான பெருக்குத் தொகையை உடைய சிறு அட்டையை வைக்கவேண்டும். எடுத்துக் காட்டாக 100 ம் 10 ம் சேரும் இடத்தில் 1000 எழுதிய சிறு அட்டையை வைக்க வேண்டும். இதுபோல 100 ம் ஒன்றும் சேரும் இடத்தில் 100 எழுதிய சிறு அட்டையையும், 10 ம் 10 ம் சேரும் இடத்தில் 100 எழுதிய சிறு அட்டையையும், ஒன்றும் 10 ம் சேரும் இடத்தில் 10 எழுதிய சிறு அட்டையையும் 1ம் 1ம் சேரும் இடத்தில் 1 எழுதிய சிறு அட்டையையும் வைக்கவும்.

குச்சிகள் இணைந்துள்ள அனைத்து இடங்களிலும் அதன் பெருக்குத் தொகைக்கான எண்களுள்ள சிறு அட்டையை வைத்தபிறகு, வைத்துள்ள சிறு அட்டைகளின் எண்ணிக்கையை தனியாக எழுதவும். படத்தில் பார்க்கவும். இதனைக்கூட்ட பெருக்குத் தொகை கிடைக்கும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278