கல்வி ஆராய்ச்சிகள்  
 
வரிசை எண் : 56
  
தாள் குவளை செய்து தண்ணீர் சுட வைத்து மகிழலாமே. 
  
படத்தில் காட்டியுள்ளபடி தாளை மடக்கவும். தாளை மடக்கினால் இறுதியில் தாளினாலான குவளை கிடைக்கும். 
  
இக் குவளையில் நீரை நிரப்பி எரிகிற மெழுகுவர்த்திக்கு மேலாகப் பிடிக்கவும். தாளினாலான குவளை தீப்பிடித்து எரியாது. 
மெழுகு வர்த்தியிலிருந்து கிடைக்கிற வெப்பம் குவளையிலுள்ள நீரைச் சுடவைக்கும். நீர் சூடாகும். மாணவர்கள் 
சூடான நீரைத் தொட்டு மகிழ்வர். 
  
தாள் குவளை மெழுகுவர்த்திக்கு மேலே பிடிக்கும் பொழுது எரியாமல் நீர் கொதிப்பது மாணவர்களுக்கு வியப்பாகவும், 
அறிவியலில் ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.
 
 
 
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
 
 |