கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 61

வெட்டுத் துண்டுகளை இணைத்துச் சேர்க்கவும்

ஒரு படம் 16 துண்டுகளாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வென்றும் தனித்தன்மைகள் உடையவை. அது பொருத்தப்பட வேண்டிய இடமல்லாது வேறு எந்த இடத்திலும் அது சேராது. வலிந்து அழுத்தாது, இயல்பாக உரிய இடத்தில் வெட்டப்பட்ட துண்டுகளை வைத்து அழுத்தினால் அது மற்ற அட்டையுடன் இணைந்து விடும்.

16 துண்டுகளையும் சரியாக விரைவாக, எத்தனை நிமிடத்திற்குள் மாணவர்கள் பொருத்துகிறார்கள் என்பதில் தான் வெற்றியே உள்ளது.

கூர்மையான பார்வையும், ஒப்புநோக்கி மிகச் சரியானவற்றைக் கண்டறிகிற திறனும், விரைந்து முடிவெடுக்கிற உயர் தன்மையும் இது போன்ற செயலால் வளர்த்தப்படும். போட்டி மனப்பான்மையோடு விரைவாகச் செய்தாலும், சரியாகச் செய்யும் மாணவரே வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278