கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 63

உற்றுப் பாருங்கள்...படத்திற்குள் படம் தெரியும்

பாட்டி, தாத்தா உள்ள இந்தப் படத்தை உற்று நோக்குங்கள்.

தாத்தாவின் புருவம் தலைப்பாகையாகவும், தாத்தாவின் முகம் கண்ணாகவும், தாத்தாவின் மூக்கு கையாகவும், தாத்தாவின் தாடிப்பகுதி காலாகவும் இருக்கும் ஆண் படத்தைக் காணலாம். படத்திலுள்ள ஆண் கையில் இசைக்கருவி வைத்து வாசித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். காதில் பெண் படத்தையும் காணலாம்.

பாட்டியின் கண் பகுதி பெண் படத்தின் தலைப்பகுதியாகவும், பாட்டியின் மூக்கு பெண் படத்தின் கையாகவும், பாட்டியின் கழுத்து பெண் படத்தின் காலாகவும் இருப்தைக் காணமுடியும்.

பாட்டியின் முகத்திற்குள் பெண் உருவமும், தாத்தாவின் முகத்திற்குள் ஆண் உருவமும் இருப்பதை நன்று உற்று நோக்கினால் தான் கண்டுபிடிக்க முடியும்.

படமாகப் பார்த்தால் தாத்தா பாட்டி மறைந்து விடுகின்றனர்.தாத்தா பாட்டியாகப் பார்த்தால் ஆண், பெண் படங்கள் மறைந்து விடுகின்றன. இப்படி நுட்பமாக ஒவியம் வரைவது வாழ்த்துதற்குரியதல்லவா ?www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278