கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 66

எழுத்து எழுத எளிய முறை

மேலே உள்ள படத்தில் அடிப்படையாக உள்ளது நேர்கோடு, துணைக்கால், ஒற்றைக் கொம்பு என்ற மூன்று மட்டுமே. இந்த மூன்றினையும் மாணவர்களுக்கு அழகாக, திருத்தமாக எழுதப் பழக்க வேண்டும்.

பிறகு இந்த மூன்றின் அடிப்படையில் உருவாகும் தமிழ் எழுத்துகளை எழுதப் பயிற்றுவிக்க வேண்டும். இப்பொழுது மாணவர்கள் எழுதுவதற்கு சிரமப்பட மாட்டார்கள். இயல்பாக எழுதுவார்கள்.

ஒரு ஆசிரியர் இந்த முறையில் தன் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படையாக உள்ள நேர்கோடு துணைக்கால் ஒற்றைக் கொம்பு என்ற மூன்றை எழுதுவதற்குப் பதிலாக இந்த மூன்று அடிப்படை எழுத்துகளையும் ரப்பர் ஸ்டாம்பாக செய்து வைத்து அச்சுத்தோய்த்து ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது குறிப்பேட்டில் அச்சடித்துக் கொடுத்து அதன் மீது எழுத்தை எழுதச் செய்து பயிற்றுவித்தேன் என்று அவர் கூறிய பொழுது மிகவும் மகிழ்ந்தேன்.

ஆசிரியர்களும், பார்வையாளர்களும் தங்கள் குழந்தைகளிடம் இந்த முறையைப் பயன்படுத்தி எழுத்தை அழகாக எழுதப் பயிற்றுவிக்கவும் - பொள்ளாச்சி நசன் -www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278