கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 68

படங்கள் வரைதலுக்கான அணுகுமுறை

மழலையர்கள் படங்கள் வரைய விரும்புவார்கள். எளிய நேர்கோட்டுப் படங்களும் வளை கோட்டுப் படங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு வரையவும் ஊக்குவிக்கும். இந்த அடிப்படையான கோட்டுப் படங்களை வரைந்த பிறகு அவர்களுக்கு உருவங்களை வரையப் பயிற்சி தரவேண்டும்.

வட்டங்கள், நீண்ட வட்டங்கள், வளைகோடுகள் வரைய ஊக்குவித்து அதன் அடிப்பைடயில் உருவங்களை வரைய ஊக்குவிக்க வேண்டும்.

மேலே உள்ள படங்கள் எலியின் பல்வேறு நிலைகளை வரைவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள படங்கள். வட்டம், நீள் வட்டம் போன்றவற்றிலிருந்து இப்படங்கள் உருவாக்கப்படுவதை மாணவர்கள் உணர்ந்தால் வரைதல் எளிமையாகும்.

இதுபோல வேறு வேறு விலங்குகளின் படங்களை வரைய மாணவர்களுக்குப் பயிற்சி தரவேண்டும். இந்த அடிப்படை மாணவர்களது வரைதல் திறனை வளர்த்தெடுக்கும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278