கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 70

ஓடும் தண்ணீர் ஒன்றாகும்!

ஒட்டிக் கொள்ளும் தண்ணீர்

ஒரு பெரிய டப்பாவை எடுத்துக்கொள்ளவும். டப்பாவின் அடிப்பாகத்தில் ஒரு அங்குல அகலத்திற்குள் 5 துளைகள் வருமாறு அருகருகே துளையிடவும். டப்பா நிறைய தண்ணீர் எடுக்கவும். 5 துளைகளையும் விரலால் மூடிக்கொண்டு டப்பாவில் நீரை நிரப்பவும்.

இப்பொழுது விரலை எடுத்தால் 5 துளைகளின் வழியாக நீரானது வேகமாக வெளிவரும். ஒவ்வொரு துளையின் வழியாகவும் நீரானது தனித்தனியாக வரும். இப்பொழுது கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் அந்த 5 நீர் கோடுகளையும் வருமாறு செய்து, 5 நீர்க்கோடுகளையும் ஒன்றாக நெருக்கவும்.

இப்பொழுது அந்த 5 நீர்க் கோடுகளும் ஒன்றாகி ஒரு கோடாக நீர் வெளிவரும். பார்ப்பதற்கு வியப்பூட்டுவதாக அமையும்.

துளையின் வழியாக வெளியேறும் நீர் சிறு குழாய் போல வெளிவருகிறது. அதன் ஓரங்களில் உள்ள நீர்ப்பரப்பு இழுவிசையால் அது குழாய் போல வெளிவருகிறது. 5 நீர்க்கோடுகளாக வெளிவருவதை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிடிக்கும் பொழுது, பரப்பு இழுவிசை ஒன்றாக மாறி ஒரு குழாய் போல ஐந்தும் இணைந்து ஒரு நீர்க் கோடாக வெளிவருகிறது.

தனித்தனியாகப் பரித்தால் தனியாகவும், நெருக்கிப் பிடித்தால் ஒன்றாகவும் மாறுகிற காட்சி காணுபவரை மகிழவூட்டும். மாணவர்களுக்கு இது அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278