கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 71

வெட்டிய துண்டுகளை ஒன்று சேர்.

ஒரு கெட்டியான அட்டையில் படம் ஒட்டப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்றல் கருவி 12 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளன. வெட்டுகிற முறை நேர்கோடுகளாக இருந்தால் மாணவர்கள் எளிதாகச் சேர்த்து விடுவார்கள். மழலையர்களுக்கு வெட்டுத்துண்டுகள் நேர்கோடுகளாக இருத்தல் நலம்.

துண்டுகளின் எண்ணிக்கை குறைவாகவும், நேர்கோட்டில் வெட்டியவையாகவும் இருந்தால் - இத்துண்டுகளை மழலையர்கள் எளிமையாக இணைத்து விடுவார்கள். இவ்வாறு அமைந்த எளிமையான கற்றல் கருவிகளை முதலில் கொடுத்து மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். பிறகு இவ்வகையான வலைகோட்டு வெட்டுத் துண்டுகளை உடைய குறைந்த எண்ணிக்கையில் அமைந்தவற்றைக் கொடுக்க வேண்டும். இறுதியாக வளைகோட்டு வெட்டுத் துண்டுகளோடு - அதிக எண்ணிக்கையிலமைந்த இதுபோன்றவற்றைக் கொடுக்க மாணவர்கள் இணைத்துப் பழக அவர்களது புரிதல் திறன் கூடும்.

வெட்டுத் துண்டுகளை இணைக்கும் பொழுது மாணவர்களுக்குப் படத்தின் துண்டுப் பகுதியும், படத்திலுள்ள வண்ணங்களும் வழிகாட்டுபவையாக இருந்து ஒன்று சேர்ப்பதற்கு உதவுகின்றன. இப்படியாகத் துண்டுப் படங்களைச் சேர்க்கும் மாணவர்கள் உளவியல் நோக்கில் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்க்கிற தன்மையையும், விடுபட்டவற்றை கண்டறிகிற தன்மையையும் பெறுகிறார்கள். இது அவர்களது பிற்காலக் கல்விச் செயற்பாட்டிற்கு அடித்தளமாக அமையும். மேலே உள்ள அட்டைப்படம் திரு சிவன்பிள்ளை அவர்களால் இலண்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இது அங்குள்ள பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தருவதற்குப் பயன்படுத்துகிற கற்பித்தல் கருவியாகும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278