| 
கல்வி ஆராய்ச்சிகள்  வரிசை எண் : 78 மழலையர்களுக்கான வரைதல் பயிற்சிக்கு. மழலையர்களுக்கான வரைதல் பயிற்சிக்கு அடித்தளமாக இருப்பவை இப்பயிற்சிகளே.
 அடுத்ததாக மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் கோடுகள் வரையப் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு பக்கவாட்டில் இக்கோடுகளை வரையப் பயிற்சி எடுக்க வேண்டும். அடுத்ததாக இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு, மிகச் சரியான சிறு சிறு சதுரக்கட்டங்கள் வருமாறு வரையப் பயிற்சி எடுக்க வேண்டும். இது கோடுகள் வரைவதற்கான அடிப்படையான செயற்பாடுகளாகும். இதுபோலவே வளை கோடுகள் வரைவதற்கான பயிற்சியும், பிறகு வளைகோட்டுகளையும், நேர்கோட்டுகளையும் இணைத்து உருவாகுகிற எளிமையான கோட்டோவியங்கள் வரைவதற்கான பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 12 பக்கங்களில் உள்ள இந்தப் பயிற்சிக் கட்டகம் மழலையர்களுக்கான வரைதல் திறனை வளர்த்தும். draw.pdf கோப்பில் உள்ள இந்தப் பயிற்சிக் கட்டகத்தை கீழே சொடுக்குவதன் மூலம் வலையிறக்கிக் கொள்ளலாம். இது free download பகுதியில் 15 ஆவது வரிசை எண்ணில் வைக்கப்பட்டுள்ளது. மழலையர்கள் வரைந்து பழக - pdf பெற இங்கே சொடுக்கவும் (991 KB) - How to draw - basic skill - free download மாணவர்கள் இக் கோப்பினை வலையிறக்கி வரைந்து பழகி வரைதிறனை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகிறோம். www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278  |